பல நாட்களாக போலீசாரை அலைகழித்த பெங்களூரு பைக் திருடன்: காரணமும்... பின்னணியும்...

Written By:

காதலிக்காக கோட்டை கட்டுவது, இதயத்தை தருவது எல்லாம் நாம் சினிமா மற்றும் கதைகளின் மூலம் தான் கேட்டுயிருக்கிறோம். இதுபோன்ற நிழலுக்கு நிஜமான ஒரு சம்பவம் பெங்களூர் மாநகரத்தில் நடந்திருக்கிறது. சட்டப்படி இது குற்றமென்றாலும், இதற்கு பின்னால் இருக்கும் ஒரு காதல் நெஞ்சை நெகிழ செய்கிறது. படியுங்கள்...

நெஞ்சை உருக்கச் செய்யும் பைக் திருடனின் பின்னணி..!

பெங்களூரு நகரத்தில் பல மாதங்களாக பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த மனோகர் என்பவரை அந்நகர காவல்துறை கைது செய்துள்ளதாக டெக்கான் கிரானிக்கல் செய்தி வெயிட்டுயிருந்தது. போலீசாருக்கு பல நாட்களாக தண்ணி காட்டி வந்த இந்த திருடனின் திருட்டு சம்பவங்களுக்கான காரணங்களும் அன்றைய செய்தித்தாளில் இடம்பெற்றிருந்தது.

நெஞ்சை உருக்கச் செய்யும் பைக் திருடனின் பின்னணி..!

இதுகுறித்து மேலும் அராய்ந்த போது, ஆந்திராவின் அனந்தபூரை சேர்ந்த மனோகர் அங்கு ஒரு கார்மெண்ட் தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளார், அப்போது அவருடன் அதே இடத்தில் பணிபுரிந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, நாளிடைவில் அது காதலாக மாறியது.

நெஞ்சை உருக்கச் செய்யும் பைக் திருடனின் பின்னணி..!

இருவரின் காதலும் திருமணத்தை எட்டிய தருணத்தில் மனோகரின் காதலி தீவிர மஞ்சள் காமாலை மற்றும் ஹார்மோன் கோளாறால் பாதிகப்பட்டார். இதற்கு உடனே சிகிச்சை அளிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.

நெஞ்சை உருக்கச் செய்யும் பைக் திருடனின் பின்னணி..!

மருத்துவர்கள், அப்பெண்ணிற்கான உரிய சிகிச்சைகள் என்னென்ன அளிக்கப்படவேண்டும் என்பது குறித்து அவரது பெற்றோருக்கும், மனோகருக்கும் பலவாறு கூறினார்கள், ஆனால் அது அவர்களுக்கு புரியவில்லை. ஆனால் தனது காதலிக்கு பெரிய நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, அதற்கு எக்கச்சக்க செலவாகும் என்பது மட்டும் மனோகருக்கு புரிந்தது.

நெஞ்சை உருக்கச் செய்யும் பைக் திருடனின் பின்னணி..!

கார்மெண்டில் அடிப்படை ஊழியர்களாக இருக்கும் இருவருக்கும் குடுமப் பின்னணி பெரிதாக ஏதுமில்லை. இதனால் மனோகரின் காதலிக்கு சிகிச்சையை சரிவர தொடரமுடியவில்லை. இந்த சோகத்தை சகித்துக்கொள்ள முடியாத மனோகர், தனது காதலிக்காக சட்டத்திற்கு புறம்பான காரியம் செய்ய தயாரானார்.

நெஞ்சை உருக்கச் செய்யும் பைக் திருடனின் பின்னணி..!

ஆந்திராவிலிருந்து பெங்களூர் வந்த அவர், பல பைக் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டார். அடிப்படை மாடலிருந்து, ஹையரெண்ட் மாடல் வரை பல பைக்குகளை பல மாதங்களாக திருடி வந்துள்ளார்.

நெஞ்சை உருக்கச் செய்யும் பைக் திருடனின் பின்னணி..!

திடீரென்று நகரத்தில் அதிகரித்த இந்த பைக் திருட்டை குறித்து பெங்களூர் போலீசாரும் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இருந்தாலும் விசாரணையிலிருக்கும் திருடர்கள் போலில்லாமல், புதியதாக ஒருவன் பைக்குகளை திருடும் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதால் மனோகரை கைது செய்வது போலீசாருக்கு கடிமனமான பணியாக மாறிப்போனது.

நெஞ்சை உருக்கச் செய்யும் பைக் திருடனின் பின்னணி..!

இந்நிலையில் தொடர்ந்து அதிகரித்து வரும் பைக் திருட்டை முடிவுக்கு கொண்டு வர பெங்களூர் மாநகர காவல்துறை நூதமான ஒரு திட்டம் தீட்டியது. தனியார் நிறுவனத்தின் டெலிவிரி பாய்ஸிற்கு பழைய வண்டிகள் வேண்டுமென்றும், அதற்காக தங்களை அனுகுமாறும், காவல்துறை சார்பில் பொய்யாக விளம்பரம் செய்யப்பட்டு, அதன்மூலம் பைக் திருடனுக்கு பொறி வைத்தது.

நெஞ்சை உருக்கச் செய்யும் பைக் திருடனின் பின்னணி..!

எதை தின்றால் பித்தம் தெளியும் என்று இருந்த மனோகர், விளம்பரத்தில் இருந்த எண்ணிற்கு அழைக்க, போலீசாரின் திட்டம் வெற்றியடைந்தது. மனோகர் கைது செய்யப்பட்டார். பெங்களூர் காவல்துறை நிம்மதி பெருமூச்சு விட்டது.

நெஞ்சை உருக்கச் செய்யும் பைக் திருடனின் பின்னணி..!

கைதுசெய்யப்பட்ட மனோகரிடம் பெங்களூர் காவல்துறை பல்வேறு கட்ட விசாரணைகளை மேற்கொண்டது. முடிவில், திருடன் மனோகர், ரூ.25 லட்சம் மதிப்புள்ள் கிட்டத்தட்ட 51 பைக்குகளை திருடியுள்ளதையும். ஏற்கனவே மனோகர் 24 பைக் திருட்டு வழக்கி தேடப்பட்டு வந்த குற்றவாளி என்பதையும் பெங்களூரு காவல்துறை உறுதி செயத்தது.

நெஞ்சை உருக்கச் செய்யும் பைக் திருடனின் பின்னணி..!

இதற்கான காரணத்தை தொடர்ந்து போலீசார் மனோகரிடம் ஆராய்ந்த போது தான். திருடப்பட்ட பைக்குகள் அனைத்தும் தனது காதலியின் மருத்துவ செலவிற்கு விற்கபட்டதாகவும், தனது காதலி நல்ல வாழ்க்கை வாழவேண்டும் என நினைத்து தொடர்ந்து பைக்குகளை திருடியதாகவும் மனோகர் போலீசாரின் விசாரணையில் ஒப்புக்கொண்டார்.

நெஞ்சை உருக்கச் செய்யும் பைக் திருடனின் பின்னணி..!

மனோகரின் காதலியின் மொத்த மருத்துவ செலவிற்கு ரூ.5 லட்சம் தான் செலவானது என்றாலும், காதலியுடனான தனது எதிர்கால வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளவே தொடர்ந்து மனோகர் பெங்களூரு பகுதிகளில் பைக்குகளை திருடி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தான் ஒரு பைக் திருடன் என்பதும், திருடி தான் மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது என்பதும் தனது காதலிக்கு தெரியாது என மனோகர் போலீசாரிடம் கூறியுள்ளார்.

நெஞ்சை உருக்கச் செய்யும் பைக் திருடனின் பின்னணி..!

பல நாட்களாக பெங்களூரு மாநகரில் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த மனோகரை கைது செய்ய பெங்களூரு காவல்துறையின் அனுகுமுறை பல தரப்பினரிடம் பாராட்டுதலை பெற்றது. அதே சமயம் மனோகரின் திருட்டு காரணமாக அமைந்துள்ள பின்னணியும் சமூக வலைதளங்களில் உருக்கமாக மக்களால் படிக்கப்பட்டு வருகிறது.

நெஞ்சை உருக்கச் செய்யும் பைக் திருடனின் பின்னணி..!

பெங்களூரின் உள்ளூர் செய்தி ஊடகங்களும் இந்த குற்ற சம்பவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, செய்திகளை வெளியிட்டு வருகின்றன. குறிப்பாக பைக்குகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வையும் ஊடகங்கள் பார்வையாளர்களுக்கு வழங்கி வருகின்றன.

நெஞ்சை உருக்கச் செய்யும் பைக் திருடனின் பின்னணி..!

அதேசமயம், பெங்களூரின் பைக் திருட்டிற்கான குற்ற செயல் தடுக்கப்பட்டுயிருப்பதும், அதற்கு மாநகர போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைகளும் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுதலை பெற்றுதந்துள்ளது.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
The Bengaluru police have arrested an inter-state thief named Manohar. The reason behind the theft makes social media viral. Click for detail...
Story first published: Monday, April 24, 2017, 12:14 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark