மெட்ரோவில் பயணிக்க ஆடை கட்டுப்பாடு இருக்குதா? வைரலான வீடியோவால் பரபரப்பு!
பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையத்தில் அழுக்கான ஆடை அணிந்து வந்த முதியவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மெட்ரோ சாதாரண மக்களுக்கான போக்குவரத்து வசதி இல்லையா? மெட்ரோ ரயில் பயணம் செய்ய குறிப்பிட்ட ஆடை கட்டுப்பாடுகள் எதுவும் இருக்கிறதா? என்ற கேள்விகளை எல்லாம் தற்போது சமூக வலைதளங்களில் இந்த வீடியோவை பதிவிட்டவர் எழுப்பி வருகிறார். இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியா முழுவதும் தற்போது முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் என்பது இயக்கப்பட்டு வருகிறது. மெட்ரோவில் உள் நகர போக்குவரத்து வசதிக்காக போக்குவரத்து நெருக்கடிகளை குறைப்பதற்காக இந்த மெட்ரோ வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் மெட்ரோ வசதிகள் செயல்பாட்டில் உள்ளன.

இந்நிலையில் இந்தியா முழுவதும் உள்ள மெட்ரோ ரயில்களில் நடக்கும் சில விஷயங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் சில விஷயங்கள் பாசிட்டிவாகவும் சில விஷயங்கள் பலரை கவனிக்கத்தக்க வகையிலும், சில விஷயங்கள் அருவருப்பான, அதிர்ச்சியான வகையிலும் பரவும். அப்படியான ஒரு விஷயம் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது. இது தொடர்ந்து மெட்ரோவில் பயணிப்பவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வீடியோவில் பெங்களூரு ராஜாஜி நகர் பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அழுக்கான ஆடை அணிந்தபடி தலையில் பெரிய சுமையுடன் முதியவர் ஒருவர் மெட்ரோ ரயில் ஏற வந்துள்ளார். அவரை அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தி அவரை ஏறக்கூடாது என தடுத்துள்ளனர்.

இதை கவனித்த அருகில் உள்ள சக பயணி ஒருவர் தனது செல்போனில் அதை வீடியோவாக எடுத்துள்ளார். அப்பொழுது குறிப்பிட்ட நபர் அழுக்கான ஆடை அணிந்து இருப்பதால் அவர் மெட்ரோவில் ஏற அனுமதி இல்லை என அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது. இது தான் தற்போது பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது.
இதற்கு வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும் நபர் மெட்ரோ வெறும் விஐபி களுக்கான பயண வசதி தானா? மெட்ரோவில் பயணிப்பதற்கு ஏதாவது ஆடை கட்டுப்பாடுகள் இருக்கிறதா என கேள்வி எழுப்பினார். அதற்கு பாதுகாப்பு அதிகாரிகள் எந்தவித பதிலும் சொல்லாமல் இருந்தது போல தெரிகிறது. இந்த ஒட்டுமொத்த நிகழ்வு நடக்கும் போது அழுக்கான ஆடை அணிந்து வந்ததாக தடுத்து நிறுத்தப்பட்ட நபர் எந்தவிதமான பேச்சும் கொடுக்காமல் தவித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தது நம்மால் காண முடிகிறது.

இந்த வீடியோவை எடுத்த நபர் இதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகத்தையும் போலீஸ் அதிகாரிகளையும் டேக் செய்து பதிவு செய்திருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. பலர் இதை பகிர்ந்து குறிப்பிட்ட முதியவரை மெட்ரோ ரயில் பயணிக்க அனுமதிக்காததை கண்டித்து பதிவுகளை போட்டு வந்தனர். இது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதமானது.
இந்நிலையில் பெங்களூர் மெட்ரோ நிர்வாகம் இதற்கு பதில் அளிக்கும் வகையில் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி குறிப்பிட்ட சம்பவம் நடந்தது தவறுதான் எனவும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பாதுகாப்பு அதிகாரியை பணி நீக்கம் செய்துள்ளதாகவும், அவர் விதிமுறைகளை மீறி முதியவரை தடுத்துள்ளார் எனவும் விளக்கம் அளித்துள்ளது.
இது மட்டுமல்லாமல் இந்த வீடியோவில் இடம் பெறாத ஒரு விஷயம் ஒன்றையும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி குறிப்பிட்ட அழுக்கு சட்டை அணிந்ததாக தடுத்து நிறுத்தப்பட்ட நபர் மெட்ரோவில் ஏறி ராஜாஜி நகர் முதல் மெஜஸ்டிக் வரை பயணம் செய்துள்ளார் என உறுதிப்படுத்த தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து விசாரணை நடத்த மற்றொரு நிர்வாகம் குழு ஒன்றை அமைத்து விசாரணையை துவங்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் மெட்ரோ ரயில் சேவை என்பது பயணிகளின் வசதிக்காக விரைவாக பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்ட சேவை தான். இதில் இந்தியா உட்பட இந்தியாவிற்குள் இருக்கும் அனைத்து மக்களுக்கும் போதிய பணம் கொடுத்து டிக்கெட் எடுத்தால் பயணிக்க அனுமதி இருக்கிறது. இதனால் யாரும் தடுத்து நிறுத்துவதற்கு உரிமை இல்லை. அதேநேரம் மெட்ரோ ரயிலில் பயணிக்க ஆடை கட்டுப்பாடுகள் எதுவும் கிடையாது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெங்களூர் என்னதான் பெரிய நகரமாக வாழ்ந்து விட்டாலும் அங்கு இன்றும் ஏழை எளிய மக்கள் தங்கள் தின உணவிற்கே கஷ்டப்படும் மக்கள் ஏராளமாக இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களுக்கும் மெட்ரோவில் பயணிக்க முழு உரிமை இருக்கிறது. இதனால் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் பெங்களூர் மெட்ரோ நிர்வாகமும் மற்ற நகரங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் மற்றொரு நிர்வாகம் பார்த்துக் கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications









