Bangalore Metro Yellow Line இதைதான் மக்கள் எதிர்பார்த்துட்டு இருந்தாங்க! எப்ப ஸ்டார்ட் ஆகுது தெரியுமா?

பெங்களூருவில் லட்சக்கணக்கான தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் பெங்களூரு மெட்ரோவை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பெங்களூரு மெட்ரோ நிறுவனம் தனது புதிய வழித்தட சேவையைத் துவங்குவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பெங்களூரு மெட்ரோ சமீபத்தில்தான், பையப்பனஹள்ளி பகுதியிலிருந்த கேஆர்புரம் வரையில் மெட்ரோ சேவையைத் துவக்கி வைத்தது. தற்போது பெங்களூருவில் ஒயிட் ஃபீல்டு பகுதியிலிருந்து கேங்கேரி வரையில் ஒரு ரூட்டாகவும், நாகசாந்திரா முதல் சில்க் இன்ஸ்ட்டியூட் வரை இரண்டாவது ரூட்டிலும் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

Bangalore Metro Yellow Line

இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு தமிழகத்திலிருந்து பெங்களூரு நகருக்குள் வந்து செல்லும் மக்களுக்கு வசதியாக பொம்மசந்திரா பகுதியிலிருந்து ராஷ்டிரிய வித்யாலாயா ரோடு மெட்ரோ வரை புதிய மெட்ரோ லைனை மஞ்சள் லைனாக அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டது.

இந்த பணிகள் துவங்கப்பட்டு சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இந்த பகுதியில் பணிகள் சுமார் 98 சதவீதம் முடிவடைந்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது மட்டுமல்ல இந்த ரூட்டில் வரும் ஜூலை மாதம் முதல் மெட்ரோ மக்களின் பயன்பாட்டிற்கு அறிமுகமாகிவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bangalore Metro Yellow Line

பெங்களூருவில் மஞ்சள் மெட்ரோ லைன் ஏற்கனவே ராஷ்டிரா வித்தியாலயா ரோடு பச்சை லைன் மெட்ரோ ஸ்டேஷனில் துவங்கி அப்படி வருங்காலத்தில் வரவுள்ள பிங்க் மெட்ரோ லைனை ஜெயதேவா மருத்துவமனை பகுதியில் கடந்த அடுத்தாக வருங்காலத்தில் வரவுள்ள நீல மெட்ரோலைனை சில்க் போர்டில் கடந்து பின்னர் பொம்மசந்திரா வரை செல்கிறது.

பெங்களூருவில் பொம்ம சந்திரா என்பது தமிழகத்தின் எல்லையான ஓசூர் பகுதிக்கு மிக அருகில் இருக்கிறது. அதனால் தமிழகத்திலிருந்து பெங்களூரு செல்பவர்கள் இந்த சேவை துவங்கப்பட்டவுடன் பெங்களூரு நகருக்குள் சென்று சிரமப்படாமல் பொம்மசந்திராவிலிருந்து மெட்ரோ மூலம் பெங்களூரு நகருக்குள் வந்து விடலாம்.

Bangalore Metro Yellow Line

தமிழக மக்களுக்குப் பெங்களூரு செல்வதில் உள்ள மிகப்பெரிய தலைவலியே சில்க் போர்டு சிக்னல் டிராஃபிக் தான் அதற்கு ஒரு நிரந்தர தீர்வாக இந்த மெட்ரோ திட்டம் தற்போது அமைந்துள்ளது. இதனால் பெங்களூருவில் ஒரு பகுதி பெரும்பாலும் மெட்ரோவால் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த மஞ்சள் லைன் ராஷ்டிரா வித்தியாலயா ரோட்டில் துவங்கி ராகிகுட்டா, ஜெயதேவா மருத்துவமனை, பிடிஎம் லேஅவுட், சில்க் போர்டு, பொம்மனஹள்ளி, ஹோங்கசந்திரா, கூடுலு கேட், சிங்கசந்திரா, பெராட்டனா அக்ரஹாரா, ஹோசா ரோடு, கோனப்பன அக்ரஹாரா, எலெக்ட்ரானிக் சிட்டி, ஹூஸ்குரு ரோடு, ஹெப்பகொடி, வழியாக பொம்மசந்திரா வரை இயக்கப்படுகிறது.

இந்த மஞ்சள் லைன் மொத்தம் 19 கி.மீ நீளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 16 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்படுகிறது. தற்போது கட்டுமான பணிகள் 98 சதவீதம் முடிவடைந்துவிட்டன. தண்டவாளங்கள் கூட அமைக்கப்பட்டு விட்டன. தற்போது ரயில்கள் செல்வதற்கான எலெக்ட்ரிக் கனெக்ஷன் மற்றும் சிசிடிவி கேமராக்களை பொருத்தும் பணி நடக்கவுள்ளது.

மெட்ரோ நிர்வாகம் இந்த திட்டத்தின் தற்போதைய சரியான நிலையை வெளியிட வில்லை. தற்போது கர்நாடக மாநிலத்தில் தேர்தல் சட்ட விதிகள் அமலில் இருப்பதால் இந்த தகவல்களை வெளியிடத் தடை இருக்கிறது. அம்மாநிலத்தில் வரும் மே மாதம் 10ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, April 7, 2023, 18:30 [IST]
English summary
Bangalore metro yellow line to be opened by july
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X