பின்னாடி பொண்ணு இருந்தா, இப்படியெல்லாம் செய்ய தோணுதா? பரபரப்பான சாலையில் இளைஞர்களின் செயல்!!

பெங்களூர்-மைசூர் நெடுஞ்சாலையில் வீலிங் செய்து பைக் சாகசத்தில் ஈடுப்பட்ட இளைஞர்கள் இருவரை போலீசார் அதிரடியாக அவர்கள் பயன்படுத்திய 2-வீலர்கள் உடன் கைது செய்துள்ளனர். என்ன நடந்தது? என்ற கேள்விக்கான பதில்களாக, இந்த சம்பவத்தை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளையும், விரைவுச்சாலைகளையும் விரிவுப்படுத்துவதில் நமது மத்திய அரசு முனைப்புடன் உள்ளது. மொத்த நாடே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் டெல்லி-மும்பை விரைவுச்சாலை அதற்கு ஓர் சிறந்த உதாரணம் ஆகும். தென்னிந்தியாவை பொறுத்தவரையில், பெங்களூர்-மைசூர் இடையே புதிய விரைவுச்சாலை அமைக்கப்பட்டது.

வீலிங் செய்ததற்காக 2 இளைஞர்கள் கைதுbangalore-mysore expressway 2 men arrested

கர்நாடகா மாநிலத்தின் இரு முக்கிய நகரங்களாக விளங்கும் பெங்களூர் மற்றும் மைசூர் இடையே இந்த விரைவுச்சாலை கடந்த மார்ச் மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது. நம் அனைவருக்கும் புதிய, பளபளப்பான சாலையை பார்த்தாலே சந்தோஷம் எங்கிருந்துதான் வரும் என்றே தெரியாது. அதுவும் மோட்டார்சைக்கிள் ஓட்டிகள் இன்னும் கூடுதல் குஷியாகிவிடுவர்.

இதனாலேயே, புதிய சாலைகளில் வீலிங் போன்ற ஆபத்தான செயல்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் அதிகளவில் ஈடுப்படுவதை பார்க்க முடியும். குறிப்பாக, விலையுயர்ந்த பைக்குகளை வைத்திருப்போர் செய்யும் அட்டகாசங்களுக்கு அளவே இருக்காது. ஆனால் நாம் இந்த செய்தியில் பார்க்கவுள்ள சம்பவத்தில், போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்கள் ஸ்கூட்டரில் வீலிங் செய்து சிக்கி கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து டுவிட்டரில் பதிவிடப்பட்டுள்ள பதிவை தான் மேலே காண்கிறீர்கள். ஆனால், இத்தகைய ஆபத்தான செயலில் 5 மாதங்களுக்கு முன்னர், அதாவது பெங்களூர்-மைசூர் விரைவுச்சாலை திறக்கப்பட்ட புதியதில் இந்த இளைஞர்கள் ஈடுப்பட்டதாகவும், வீடியோ தற்போது வைரலாகி போலீஸாரின் பார்வையில் பட்டதால் விசாரணை நடத்தப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த வீலிங் சம்பவத்தில் மற்றொரு அதிர்ச்சிக்கரமான செய்தி என்னவென்றால், சாலையின் எதிர்புற திசையில் இந்த வீலிங்கை அந்த இளைஞர்கள் செய்துள்ளனர். அதாவது, அவர்கள் வீலிங் செய்யும் திசைக்கு எதிர் திசையில் மற்ற வாகனங்கள் வந்திருக்கும். ஆனால், நெடுஞ்சாலை திறக்கப்பட்ட புதியது என்பதால் வாகனங்கள் அவ்வளவாக இருந்திருக்காது.

bangalore-mysore expressway 2 men arrested

அந்த தைரியத்திலேயே ஆள் நடமாட்டம் இல்லாத சாலையின் எதிர்திசையில் இவ்வாறு வீலிங் செய்துள்ளனர். இந்த செயலால் இரு இளைஞர்கள் அவர்களது ஸ்கூட்டர்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் வீலிங் செய்தப்போது அவர்களில் ஒருவரது ஸ்கூட்டரில் பின் இருக்கையில் இளம்பெண் ஒருவரும் அமர்ந்திருந்துள்ளார். அவருக்கு தண்டனை வழங்கப்பட்டதுபோல் தகவல் இல்லை.

பெங்களூர்-மைசூர் விரைவுச்சாலையில் ஸ்கூட்டரில் வீலிங் செய்ததற்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது குறித்து கர்நாடக போக்குவரத்து & பாதுகாப்பு துறை கூடுதல் போலீஸ் இயக்குனர் அலோக் குமார் டுவிட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, "விரைவுச்சாலையில் ஒரு பெண்ணுடன் வீலிங் செய்த இளைஞன், அவனது கூட்டாளி உடன் ராமநகர மாவட்ட காவல்துறையினரால் கைது செய்யப்பட்டான்.

bangalore-mysore expressway 2 men arrested

பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வீடியோக்கள் 5-6 மாதங்கள் பழமையானவை. ராம்நகர் எஸ்பி மற்றும் அவரது குடுவினரின் விரைவான நடவடிக்கைக்கு பாராட்டுகள்" என்றார். தற்போது கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களில் ஒருவர் இதேபோன்று பல்வேறு சாலைகளில் எதிர்பக்க திசையில் வீலிங் செய்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாக யுடியூபர் ஒருவர் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: பொது சாலையில் வீலிங் செய்வதே முதலில் தவறு. இதில், சாலையின் எதிர்பக்க திசையில் வீலிங் செய்வது அதனை காட்டிலும் தவறு. பின்னால் ஒருவரை அமர வைத்துக்கொண்டு, வீலிங் செய்வதற்கு முற்றிலும் ஏற்றதற்ற ஸ்கூட்டரில் வீலிங் செய்வது அதனினும் தவறிலும் தவறு. இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்கள் மீது குற்றங்கள் அதிகரித்து கொண்டே போவதால், எத்தகைய தண்டனையை நீதிமன்றம் வழங்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Saturday, July 8, 2023, 7:30 [IST]
English summary
Bangalore mysore expressway 2 men arrested for bike wheeling
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X