ஆடிப்போன பங்க் ஊழியர்... காசு இல்லாமல் பெட்ரோல் போடுவதற்காக இளைஞர் செய்த ட்ரிக்... என்னனு தெரியுமா?

பணம் கொடுக்காமல் எரிபொருள் நிரப்புவதற்காக இளைஞர் ஒருவர் செய்த தந்திரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆடிப்போன பங்க் ஊழியர்... காசு இல்லாமல் பெட்ரோல் போடுவதற்காக இளைஞர் செய்த ட்ரிக்... என்னனு தெரியுமா?

இந்தியாவில் சமீப காலமாக பெட்ரோல், டீசல் விலை விண்ணை தொடும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. இது வாகன ஓட்டிகளுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. போதாக்குறைக்கு பெட்ரோல் பங்க்குகளில் வேறு வாகன ஓட்டிகள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். இது வாகன ஓட்டிகளுக்கு இன்னும் சிக்கலை ஏற்படுத்துகிறது.

ஆடிப்போன பங்க் ஊழியர்... காசு இல்லாமல் பெட்ரோல் போடுவதற்காக இளைஞர் செய்த ட்ரிக்... என்னனு தெரியுமா?

பொதுவாக பெட்ரோல் பங்க் ஊழியர்கள்தான் வாகன ஓட்டிகளிடம் மோசடிகளை அரங்கேற்றுவார்கள். மீதி சில்லறை கொடுக்கும்போது குறைவாக கொடுப்பது உள்பட பல்வேறு தந்திரங்களை ஒரு சில பெட்ரோல் பங்க் ஊழியர்கள் செய்து வருகின்றனர். எனவே பெட்ரோல் பங்க்குகளில் நடக்கும் மோசடிகள் குறித்த விழிப்புணர்வு செய்திகளை நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் பலமுறை வெளியிட்டுள்ளது.

ஆடிப்போன பங்க் ஊழியர்... காசு இல்லாமல் பெட்ரோல் போடுவதற்காக இளைஞர் செய்த ட்ரிக்... என்னனு தெரியுமா?

ஆனால் இம்முறை முற்றிலும் புதிய வித்தியாசமான ஒரு செய்தியை உங்களுக்காக கொண்டு வந்துள்ளோம். இங்கே ஏமாந்திருப்பது வாகன ஓட்டி அல்ல. பெட்ரோல் பங்க் ஊழியர். ஆம், இளைஞர் ஒருவர் தந்திரமாக செயல்பட்டு பெட்ரோல் பங்க் ஊழியரை ஏமாற்றியுள்ளார். கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் நடந்துள்ள இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆடிப்போன பங்க் ஊழியர்... காசு இல்லாமல் பெட்ரோல் போடுவதற்காக இளைஞர் செய்த ட்ரிக்... என்னனு தெரியுமா?

சம்பவத்தன்று இளைஞர் ஒருவர் நம்பர் பிளேட் இல்லாத ஸ்கூட்டரில், ஒரு பெட்ரோல் பங்க்கிற்கு வந்தார். அவர் ஹெல்மெட் அணியவில்லை. அத்துடன் தற்போது கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில், மாஸ்க் உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்களையும் அவர் அணியவில்லை. பின்னர் பெட்ரோல் பங்க்கின் ஊழியரிடம் எரிபொருள் நிரப்பும்படி அவர் கேட்டு கொண்டார்.

ஆடிப்போன பங்க் ஊழியர்... காசு இல்லாமல் பெட்ரோல் போடுவதற்காக இளைஞர் செய்த ட்ரிக்... என்னனு தெரியுமா?

இதன்பேரில் பெட்ரோல் பங்க் ஊழியர் எரிபொருளை நிரப்பி முடித்த பின்னர், டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதை போல் அந்த இளைஞர் ஒரு சில வினாடிகள் 'ஆக்டிங்' செய்தார். பேடிஎம் மூலமாக பணம் செலுத்துவதை போல் அவர் நடித்ததாக கூறப்படுகிறது. ஆனால் பரிவர்த்தனை வெற்றிகரமாக நிறைவடைவதற்கு முன்பே அவர் அங்கிருந்து ஸ்கூட்டரை கிளப்பி கொண்டு பறந்து விட்டார்.

ஆடிப்போன பங்க் ஊழியர்... காசு இல்லாமல் பெட்ரோல் போடுவதற்காக இளைஞர் செய்த ட்ரிக்... என்னனு தெரியுமா?

எவ்வித பண பரிவர்த்தனையும் நடக்கவில்லை என்பதை பெட்ரோல் பங்க் ஊழியர் உணர்ந்த நேரத்தில், அந்த இளைஞர் அங்கிருந்து சென்று விட்டார். பெட்ரோல் பங்க்கில் இருந்த சிசிடிவி கேமராவில் இந்த சம்பவம் பதிவாகியிருந்தது. சம்பந்தப்பட்ட இளைஞர் இந்த தந்திரத்தை தொடர்ச்சியாக செய்து வருவதாக கூறப்படுகிறது.

ஆடிப்போன பங்க் ஊழியர்... காசு இல்லாமல் பெட்ரோல் போடுவதற்காக இளைஞர் செய்த ட்ரிக்... என்னனு தெரியுமா?

சிசிடிவி கேமராவில் அந்த இளைஞர் சிக்கியிருந்தாலும், இன்னும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றைய சூழலில் கிரெடிட்/டெபிட் கார்டுகள் மற்றும் பேடிஎம் என டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் நடைமுறை அதிகரித்து வருகிறது. கிட்டத்தட்ட அனைத்து பெட்ரோல் பங்க்குகளும் டிஜிட்டல் முறையில் பணத்தை ஏற்கின்றன.

ஆடிப்போன பங்க் ஊழியர்... காசு இல்லாமல் பெட்ரோல் போடுவதற்காக இளைஞர் செய்த ட்ரிக்... என்னனு தெரியுமா?

ஆனால் இதிலும் ஒரு சிலர் செய்யும் இவ்வாறான தந்திரங்கள் பெட்ரோல் பங்க் ஊழியர்களை கவலையடைய வைத்துள்ளது. டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதை போல் பாசாங்கு செய்து விட்டு, பரிவர்த்தனை நிறைவடைவதற்கு முன்னரே தப்பிக்கும் தந்திரத்தை எக்காரணத்தை கொண்டும் யாரும் செய்து விட வேண்டாம்.

ஆடிப்போன பங்க் ஊழியர்... காசு இல்லாமல் பெட்ரோல் போடுவதற்காக இளைஞர் செய்த ட்ரிக்... என்னனு தெரியுமா?

பெட்ரோல் பங்க் நிர்வாகம் தரப்பில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு பிரச்னையை உண்டாக்கி விடும் என்பதை அனைவரும் உணர வேண்டும். பெங்களூரில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் தொடர்பாக ரிபப்ளிக்வேர்ல்டு செய்தி வெளியிட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Bangalore: Petrol Thief Scoots After 'Fake' Payment On Bunk. Read in Tamil
Story first published: Tuesday, July 14, 2020, 11:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X