காரணமின்றி வாகனங்களை நிறுத்தக்கூடாது!! டிராஃபிக் போலீஸாருக்கு போடப்பட்ட கடிவாளம் - அட சென்னையில் இல்லைங்க!

ஆவணங்கள் சோதனைக்காக வாகனங்களை நிறுத்தக் கூடாது என பெங்களூர் போலீஸ் கமிஷ்னர் அவரது கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் போக்குவரத்து போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

காரணமின்றி வாகனங்களை நிறுத்தக்கூடாது!! டிராஃபிக் போலீஸாருக்கு போடப்பட்ட கடிவாளம் - அட சென்னையில் இல்லைங்க!

கடந்த டிச.18ஆம் தேதி பெங்களூர் போலீஸ் கமிஷ்னர் கமல் பண்ட் அவர்களின் தலைமையில் ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெற்றது. இணையத்தின் வாயிலாக நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தின்போதுதான், எந்தவொரு காரணமும் இன்றி சாலையில் இயங்கும் வாகனங்களை நிறுத்தக்கூடாது எனவும், இத்தகைய நடவடிக்கைகளினால் அவர்கள் (வாகன ஓட்டிகள்) ஏதாவது விபரீதங்களை செய்யக்கூடும் என கமல் பண்ட் கூறியுள்ளார்.

காரணமின்றி வாகனங்களை நிறுத்தக்கூடாது!! டிராஃபிக் போலீஸாருக்கு போடப்பட்ட கடிவாளம் - அட சென்னையில் இல்லைங்க!

இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், "எந்த காரணம் கொண்டும் வாகனங்களை நிறுத்துவது சரியல்ல, இதுபோன்ற சம்பவங்கள் நகரில் (பெங்களூர்) நடைபெறக்கூடாது. இது மீண்டும் நடக்காமல் இருக்க டிசிபிகளிடம் பேசுவேன். எதிர்காலத்தில் போக்குவரத்து போலீசாரிடம் இருந்து இதுபோன்ற துன்புறுத்தல்களை யாராவது எதிர்கொண்டால், அவர்கள் துணை போக்குவரத்து போலீஸ் கமிஷ்னரை (கிழக்கு) தொடர்பு கொள்ளலாம். நாங்கள் நடவடிக்கை எடுப்போம்" என்றார்.

காரணமின்றி வாகனங்களை நிறுத்தக்கூடாது!! டிராஃபிக் போலீஸாருக்கு போடப்பட்ட கடிவாளம் - அட சென்னையில் இல்லைங்க!

காரணமே இல்லாமல் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, அனைத்து ஆவணங்களையும் கேட்பதாக பொதுமக்கள் பலர் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, இவ்வாறு பெங்களூர் போலீஸ் கமிஷ்னர் போக்குவரத்து போலீஸார்களை அறிவுறுத்தி உள்ளார். இத்தகைய தேவையில்லாத வாகன சோதனைகளினால் வாகன ஓட்டிகள் பல நிமிடங்கள் காத்திருக்க வேண்டியதாகி விடுகிறது.

காரணமின்றி வாகனங்களை நிறுத்தக்கூடாது!! டிராஃபிக் போலீஸாருக்கு போடப்பட்ட கடிவாளம் - அட சென்னையில் இல்லைங்க!

பெங்களூரில் கடந்த 2 வாரங்களில் மட்டும் கிட்டத்தட்ட 2 முறை போலீஸாரால் நிறுத்தப்பட்டதாக கூறும் மென்பொருள் பொறியியலாளர் ஒருவர் அந்த சமயத்தில் போக்குவரத்து போலீஸாருடன் ஏற்பட்ட அனுபவம் குறித்து கூறுகையில், "முதல் நிகழ்வின்போது, நான் ஹெல்மெட் மட்டுமின்றி முககவசமும் அணிந்திருந்தேன். ஆனால் பரபரப்பான ஆர்டி நகர் சந்திப்பில் காரணமின்றி நிறுத்தப்பட்டேன்.

காரணமின்றி வாகனங்களை நிறுத்தக்கூடாது!! டிராஃபிக் போலீஸாருக்கு போடப்பட்ட கடிவாளம் - அட சென்னையில் இல்லைங்க!

போலீஸார் கேட்ட ஆவணங்கள் அனைத்தையும் கொடுத்தேன். கான்ஸ்டபிள் ஒருவர் எனது ஓட்டுனர் உரிமத்தை எடுத்துக்கொண்டு காத்திருக்க சொல்லிவிட்டு சென்றார். என் பெயரில் அபராதம் எதுவும் நிலுவையில் இல்லை. என்னிடம் காப்பீடு, மாசு உமிழ்வு சோதனை சான்றிதழ் உள்பட வாகனம் தொடர்பான பிற எல்லா ஆவணங்களும் இருந்தன. ஆனாலும் காரணமே இல்லாமல் 15 நிமிடங்கள் காத்திருக்க வைத்தனர்.

காரணமின்றி வாகனங்களை நிறுத்தக்கூடாது!! டிராஃபிக் போலீஸாருக்கு போடப்பட்ட கடிவாளம் - அட சென்னையில் இல்லைங்க!

கான்ஸ்டபிள் எனது ஓட்டுனர் உரிமத்தை மீட்டு தருமாறு அதிகாரியிடம் பேச சொன்னார். சம்பந்தப்பட்ட அதிகாரி என்னிடம் பதில் கூட சொல்லவில்லை. சிறிது காத்திருந்தேன். பிறகு அந்த போலீஸ் அதிகாரி என்னை பார்த்து, என்னிடம் அனைத்து ஆவணங்களும் இருப்பதால் என்னை வெளியேற சொன்னார். எனது ஓட்டுனர் உரிமத்தையும் அதன்பின்னரே திருப்பி கொடுத்தார்" என்றார்.

காரணமின்றி வாகனங்களை நிறுத்தக்கூடாது!! டிராஃபிக் போலீஸாருக்கு போடப்பட்ட கடிவாளம் - அட சென்னையில் இல்லைங்க!

இதில் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிய இவரை இரண்டாவது முறையாக போக்குவரத்து போலீஸார் தடுத்து நிறுத்திய போது, மனைவி மற்றும் 2 மாத குழந்தை உடன் காரில் சென்று கொண்டிருந்துள்ளார். அந்த சமயத்திலும் இவரிடம் எல்லா ஆவணங்களும் சரியாக இருந்துள்ளன. இருப்பினும் காரை நிறுத்திய போலீஸார் அவரிடம் தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது.

காரணமின்றி வாகனங்களை நிறுத்தக்கூடாது!! டிராஃபிக் போலீஸாருக்கு போடப்பட்ட கடிவாளம் - அட சென்னையில் இல்லைங்க!

தொடர்ந்து அவரை காத்திருக்க வைத்த போக்குவரத்து போலீஸார், மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் வருவார், அவரிடம் பேசி கொள்ளுங்கள் என்றுள்ளார். ஒரு பக்கம் அவரது கை குழந்தை விடாமல் அழுது கொண்டிருக்க, இவரோ தன்னிடம் எல்லா ஆவணங்களும் சரியாக உள்ளதாகவும், தன்னை அனுப்பி வைக்கும்படியும் வேண்டுக்கோள் விடுத்த வண்ணம் இருந்துள்ளார்.

காரணமின்றி வாகனங்களை நிறுத்தக்கூடாது!! டிராஃபிக் போலீஸாருக்கு போடப்பட்ட கடிவாளம் - அட சென்னையில் இல்லைங்க!

இந்த பொறியியலாளரிடம் ஃபாஸ்டேக் இல்லாததை காரணம் காட்டி, போலீஸார் அவரை மிரட்டும் பாணியில் பேசியவாறு இருந்துள்ளனர். தான் நகரத்திற்குள்ளாக மட்டுமே காரை பயன்படுத்தி வருகிறேன் என்றும், ஆதலால் ஃபாஸ்டேக்கை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை எனவும் தனது நிலைப்பாட்டை இவர் கூற, ஃபாஸ்டேக்கை வைத்திருக்க வேண்டியது அவசியம் என போலீஸார் உறுதியாக நின்றுள்ளனர்.

காரணமின்றி வாகனங்களை நிறுத்தக்கூடாது!! டிராஃபிக் போலீஸாருக்கு போடப்பட்ட கடிவாளம் - அட சென்னையில் இல்லைங்க!

இதில் இருந்து போலீஸார் கையூட்டை எதிர்பார்க்கிறார்கள் என்பதை புரிந்து கொண்ட போதிலும், லஞ்சம் கொடுக்கக்கூடாது என்பதில் இந்த பட்டதாரி உறுதியாக இருந்துள்ளார். இதனால் மேலும் 20- 30 நிமிடங்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை இவருக்கு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னரே இவரை தொடர்ந்து பயணிக்க போலீஸார் அனுமதித்துள்ளனர். இவ்வாறு குறிப்பாக பெங்களூரில் தினந்தோறும் நடைபெறும் சம்பவங்களை சொல்லி கொண்டே போகலாம்.

இதற்கு பெங்களூர் போலீஸ் கமிஷ்னர் சரியான கடிவாளம் போட்டுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். நமது சென்னையிலும் வாகன சோதனைக்காக 15 நிமிடங்கள், 30 நிமிடங்கள் வாகன ஓட்டிகளை காத்திருக்க வைப்பது, மறைந்திருந்து திடீரென வந்து வாகனங்களை நிறுத்துவது போன்ற செயல்களை போலீஸார் செய்கின்றனர். இதற்கு கடிவாளம் எப்போதுவரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Bangalore police commissioner said stoping vehicles without any reason not correct
Story first published: Tuesday, December 21, 2021, 23:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X