வேற லெவல்... மகள் பள்ளிக்கு செல்லும் சமயத்தில் போலீஸ் அவதாரம் எடுக்கும் பெண்... எதற்காக தெரியுமா?

மகள் பள்ளிக்கு செல்லும் சமயத்தில் பெண் ஒருவர் போலீஸ் அவதாரம் எடுத்து வருகிறார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வேற லெவல்... மகள் பள்ளிக்கு செல்லும் சமயத்தில் போலீஸ் அவதாரம் எடுக்கும் பெண்... எதற்காக தெரியுமா?

வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதால், இந்தியாவில் சாலை விபத்துக்கள் அதிகமாக நடைபெற்று கொண்டுள்ளன. அத்துடன் இங்கு போக்குவரத்து நெரிசல் பிரச்னையும் தலைவிரித்தாடுகிறது. இந்த 2 பிரச்னைகளையும் சரி செய்யும் பணியில் போக்குவரத்து காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் தன்னார்வலர்களும் இணைந்து பணியாற்றி கொண்டுள்ளனர்.

வேற லெவல்... மகள் பள்ளிக்கு செல்லும் சமயத்தில் போலீஸ் அவதாரம் எடுக்கும் பெண்... எதற்காக தெரியுமா?

குடிமக்கள் விருப்பப்பட்டால், போக்குவரத்து காவலர்களுடன் இணைந்து, டிராபிக் வார்டன்களாக பணியாற்ற முடியும். இந்த சூழலில், தன்னார்வ டிராபிக் வார்டன்களின் எண்ணிக்கையை 390ல் இருந்து 2,500ஆக உயர்த்த திட்டமிட்டு வருவதாக பெங்களூர் போலீஸ் கமிஷனர் பாஸ்கர் ராவ் சமூக வலை தளத்தில் சமீபத்தில் அறிவித்துள்ளார்.

வேற லெவல்... மகள் பள்ளிக்கு செல்லும் சமயத்தில் போலீஸ் அவதாரம் எடுக்கும் பெண்... எதற்காக தெரியுமா?

பெங்களூர் நகரில் வாகனங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. ஆனால் போக்குவரத்து காவலர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இந்த வித்தியாசத்தை குறைக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. கடந்த ஜூலை மாத நிலவரப்படி, பெங்களூர் நகரில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 82 லட்சத்திற்கும் அதிகம்.

வேற லெவல்... மகள் பள்ளிக்கு செல்லும் சமயத்தில் போலீஸ் அவதாரம் எடுக்கும் பெண்... எதற்காக தெரியுமா?

ஆனால் போக்குவரத்து போலீசாரின் எண்ணிக்கை வெறும் 4,718 மட்டுமே. எனவேதான் தன்னார்வ டிராபிக் வார்டன்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூர் நகர போலீஸ் டிராபிக் வார்டன் அமைப்பில் இணைவதன் மூலமாக, போக்குவரத்து போலீசாருக்கு உதவி செய்யும் வகையில் குடிமக்களால் சேவையாற்ற முடியும்.

வேற லெவல்... மகள் பள்ளிக்கு செல்லும் சமயத்தில் போலீஸ் அவதாரம் எடுக்கும் பெண்... எதற்காக தெரியுமா?

டிராபிக் வார்டன்களின் பணிகள்:

1. சாலை பாதுகாப்பு பற்றி சாலை பயன்பாட்டாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கற்பிப்பது.

2. வசதிக்கு ஏற்ப ஒரு வாரத்திற்கு 4-5 மணி நேர வழக்கமான போக்குவரத்து பணி.

3. விஐபிக்கள் வருகை, தேர்தல், பந்த், பண்டிகை காலங்களில் சிறப்பு பணி.

4. மாதாந்திர பரேடுகளில் பங்கெடுப்பது.

MOST READ: இனி இந்த நகர வாசிகளால் காரை கழுவ முடியாது.. இதற்கு புதிய சட்டம் விதிக்கும் அபராதம் எவ்வளவு தெரியுமா?

வேற லெவல்... மகள் பள்ளிக்கு செல்லும் சமயத்தில் போலீஸ் அவதாரம் எடுக்கும் பெண்... எதற்காக தெரியுமா?

இதுகுறித்து தலைமை டிராபிக் வார்டனான மோகனன் நம்பியார் கூறுகையில், ''பெங்களூர் நகரில் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை அதிகம். அதே சமயம் இங்கு போக்குவரத்து விதிகளை மீறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது'' என்றார். அவர் மேலும் கூறுகையில், ''இது முழுக்க முழுக்க தன்னார்வ பணிதான். மக்கள் தங்கள் நேரத்தை ஆக்கப்பூர்வமாக செலவிட இங்கே வாய்ப்பு கிடைக்கிறது'' என்றார்.

MOST READ: மீண்டும் 8 போட தயாரா இருங்க: தமிழக வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அடுத்த ஆப்பு... முக்கிய தகவல்!

வேற லெவல்... மகள் பள்ளிக்கு செல்லும் சமயத்தில் போலீஸ் அவதாரம் எடுக்கும் பெண்... எதற்காக தெரியுமா?

இந்த சேவை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக போலீஸ் கமிஷனருக்கு அவர் பாராட்டுக்களையும் தெரிவித்து கொண்டுள்ளார். ஒரு சில தன்னார்வலர்கள் இந்த பணியை இடைவிடாமல் தொடர்ச்சியாக செய்து வருகின்றனர். இவர்களில் மஞ்சு மேக்ரா என்பவரும் ஒருவர். இவர் கடந்த 5 ஆண்டுகளாக சேவை செய்து வருகிறார்.

MOST READ: எங்கயோ மச்சம் இருக்கு... அதிர்ஷ்டம் அடித்ததால் போலீஸிடம் இருந்து தப்பிய குற்றவாளி... எப்படி தெரியுமா?

வேற லெவல்... மகள் பள்ளிக்கு செல்லும் சமயத்தில் போலீஸ் அவதாரம் எடுக்கும் பெண்... எதற்காக தெரியுமா?

மகள் பள்ளிக்கு செல்லும் சமயத்தில், ''காலை 9 மணி முதல் மாலை 3 மணி அவர் சேவை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இதன் மூலம் நீங்கள் நிறைய விஷயங்களை பார்க்க முடியும். நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ளவும் முடியும். மக்களுக்கு சேவை செய்ய இதன் மூலம் எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஒருவருக்கு உதவி செய்வதன் மூலமாக நீங்கள் பெறும் நன்றியை வேறு எதனுடனும் ஒப்பிட முடியாது'' என்றார்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Bangalore Police Invites Volunteer Traffic Wardens. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X