10 கி.மீ பயணிக்க அரை மணி நேரமா? உலகளவில் இரண்டாம் இடம் பிடித்த பெங்களூரு!
உலகிலேயே இரண்டாவது ஆமைவேக நகரமாகக் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு அறிவிக்கப்பட்டுள்ளது. நகரங்களில் போக்குவரத்து நெருக்கடியைக் கணக்கில் கொண்டு எடுக்கப்பட்ட ஆய்வில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
டாம் டாம் என்ற ஜியோலஜிகேஷன் தொழிற்நுட்ப வல்லுநர்கள் மையம் சமீபத்தில் உலகம் முழுவதும் ஒரு ஆய்வை நடத்தியது. அதன்படி ஒரு நகரத்தில் கடும் போக்குவரத்து நெருக்கடியில் சராசரியாக 10 கி.மீ பயணிக்க எவ்வளவு நேரம் ஆகிறது எனக் கணக்கெடுத்தது. உலகத்தில் அதிக போக்குவரத்து நெருக்கடிகள் இருக்கும் நகரங்களாகச் சொல்லப்படும் நகரங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வில் இந்தியாவில் உள்ள ஒரே ஒரு நகரம் தான் டாப் 5 பட்டியலில் வந்துள்ளது. 5வது இடத்தில் இத்தாலி நகரம் இருக்கிறது. 4வது இடத்தில் ஜப்பான் நாட்டில் உள்ள ஷாப்பரோ மற்றும் மிலன் ஆகிய நகரங்கள் இருக்கின்றன. 3வது இடத்தில் அயர்லாந்து நாட்டின் தலைநகரான டப்லின் நகரம் இருக்கிறது. இந்த நகரங்கள் தான் அதிகமாகப் போக்குவரத்து நெருக்கடி கொண்ட பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இந்திய நகரமான கர்நாடக மாநிலம் பெங்களூரு இடம் பிடித்துள்ளது. இங்கு 10 கி.மீ பயணிக்க சராசரியாக 28 நிமிடங்கள் 9 நொடிகள் வரை ஆகும் என இந்த ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது. இந்த பட்டியலில் முதலிடம் பிடித்த நகரம் லண்டன் தான். இந்த நகரத்தில் 10 கி.மீ பயணிக்க 35 நிமிடம் வரை ஆகிறது என இந்த ஆய்வு சொல்கிறது.
இந்த காரில் பயணத்திற்கான செலவும் கணக்கிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நகரில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல், டீசலின் விலை எலெக்ட்ரிக் வாகன ரீசார்ஜ் கட்டுமான மையம், எவ்வளவு நேரம் பணத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. எவ்வளவு மாசு சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டது. டிராஃபிக் ஜாம் காரணமாக அதிகமான மாசு அளவு எவ்வளவு என்ற பல தகவல்கள் சேகரிக்கப்பட்டன.
பெங்களூருவில் இதற்காகக் கடந்தாண்டு 129 மணி நேரம் சிட்டிக்குள் டிரைவிங் செய்யப்பட்டது. இந்த டிரைவிங்கில் மொத்தம் 974 கிலோ கார்பன் பெட்ரோல் கார்கள் மூலம் வெளியேற்றப்பட்டது. அதிகமான கார்பனை வெளியேற்றியதில் பெங்களூரு 4வது இடத்தை பிடித்துள்ளது. இது பெட்ரோல் காருக்கான எமிஷன் தான். ஆனால் டீசல் காருக்கான எமிஷன் குறித்து இந்த ஆய்வில் தகவல்கள் இல்லை.
இந்த ஆய்விற்காக டாம் டாம் நிறுவனம் 600 மில்லியன் கருவிகளை உலகம் முழுவதும் உள்ள நகரங்களில் வாகனங்களை டெஸ்ட் டிரைவ் செய்ய பயன்படுத்தியது. இந்த 600 கருவிகள் என்பது இன்-டேஷ் கார் நேவிகேஷன், ஸ்மார்ட்போன்கள், பெர்சனல் நேவிகேஷன் சிஸ்டம், டெலிமேட்டிக் சிஸ்டம், இதற்காக மொத்தம் உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் 3.5 பில்லியன் கிலோ மீட்டர்கள் ஓட்டப்பட்டுள்ளது. 61 பில்லியன் ஜிபிஎஸ் டேட்டா பாயிண்டகள் இதில் சேகரிக்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








