காரில் சென்றவர்களுக்கு பட்டப்பகலில் நேர்ந்த கதி! வீட்டை விட்டு வெளிய வரவே பயப்பட வெச்சுட்டாங்க!

இந்தியாவில் வாகன ஓட்டிகளுக்கு இடையே சாலையில் மோதல்கள் (Road Rage) ஏற்படும் நிகழ்வு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த வரிசையில் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் (Bangalore) தற்போது நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) காரில் வந்தவர்களுக்கும் மற்றும் சில டூவீலர்களில் வந்தவர்களுக்கும் இடையே இந்த மோதல் நிகழ்ந்துள்ளது. பெங்களூர் நகரின் வர்தூர் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சம்பவ இடத்தில் என்ன நடந்தது? என்பது, ஹூண்டாய் வெனியூ காரின் டேஷ்போர்டு கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Bangalore Road Rage

அந்த வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது காட்டு தீயாய் பரவி கொண்டுள்ளது. ஹூண்டாய் வெனியூ காரின் டிரைவர், டூவீலர்களில் சென்றவர்களை ஓவர்டேக் செய்ய முயற்சி செய்வதுடன் இந்த வீடியோ தொடங்குகிறது. அப்போது ஹூண்டாய் வெனியூ காரின் டிரைவர் ஹாரன் அடிக்கிறார்.

இதனால் டூவீலர்களில் சென்றவர்கள் ஆத்திரம் அடைகின்றனர். அதற்கு பிறகுதான் கடுமையான மோதல் நிகழ தொடங்குகிறது. ஆத்திரம் அடைந்த டூவீலர் ஓட்டிகள், ஹூண்டாய் வெனியூ காரின் பாதையை மறிக்க தொடங்குகின்றனர். வேண்டுமென்றே டூவீலர்களை ஸ்லோ செய்து, ஹூண்டாய் வெனியூ காருக்கு வழிவிட மறுக்கின்றனர்.

இதனால் ஹூண்டாய் வெனியூ டிரைவர் காரை அப்படியே நிறுத்தி விட்டார். அப்போது அந்த காருக்கு முன்பு டூவீலர்களை நிறுத்தி, எதிர்தரப்பு போர்க்களமாக மாற்றுகிறது. அப்போது அந்த கும்பலில் ஒருவர் எதிர் திசையில் இருந்து டூவீலரை ஓட்டி வந்து, ஹூண்டாய் வெனியூ காரின் மீது வேண்டுமென்றே மோதுகிறார்.

அதே நேரத்தில் அந்த கும்பலில் ஒருவர், ஹூண்டாய் வெனியூ காரின் டிரைவர் கதவை திறக்க முயற்சி செய்கிறார். இதனால் ஹூண்டாய் வெனியூ காருக்கு உள்ளே இருந்தவர்கள் பயந்து நடுங்க தொடங்கி விட்டனர். அப்போது மன்னித்து விடுங்கள் என்ற குரல்கள் கூட காருக்குள் இருந்து கேட்கிறது.

இதற்கிடையே ஹூண்டாய் வெனியூ காரின் டிரைவர் ரிவர்ஸ் எடுக்க, காருக்குள் இருந்த அனைவரும் அங்கிருந்து தப்பித்து விட்டனர். அந்த சமயத்தில் காருக்குள் இருந்த அனைவரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்லும்படி டிரைவரிடம் கூறுவதை வீடியோவில் நம்மால் கேட்க முடிகிறது. இது உண்மையிலேயே வருத்தமான ஒரு விஷயம்தான்.

இதற்கிடையே ஹூண்டாய் வெனியூ காரில் வந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்ட ரவுடிகள், அந்த காரை பின் தொடர்ந்து வீட்டிற்கே சென்றதாக கூறப்படுகிறது. அத்துடன் ஹூண்டாய் வெனியூ காரின் உரிமையாளரை அவர்கள் தாக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பெங்களூர் மாநகர வாகன ஓட்டிகள் மத்தியில் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த சம்பவம் தொடர்பாக பெங்களூர் காவல் துறை அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபடுபவர்கள் கடுமையான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் பெங்களூர் காவல் துறை அதிகாரிகள் கடுமையான எச்சரித்துள்ளனர்.

ஆனால் வெறும் எச்சரிக்கையுடன் நிறுத்துவது சரியாக இருக்காது. கும்பலாக சேர்ந்து கொண்டு, காரில் பயணம் செய்பவர்களை மிரட்டுவது ஏற்க கூடியது அல்ல. இந்த பதற்றத்தில் டிரைவர் காரை ஓட்டினால், விபத்தில் சிக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே இந்த சம்பவம் தொடர்பாக பெங்களூர் காவல் துறை அதிகாரிகள், 3 பேரை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கை வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. இதுபோன்ற சம்பவங்கள் எங்கு நடந்தாலும் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றுதான். அதிலும் பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் இத்தகைய சம்பவங்கள் நடப்பது வேதனையை ஏற்படுத்துகிறது. காவல் துறையினரின் நடவடிக்கையால், இனி இத்தகைய சம்பவங்கள் நடைபெறாது என நாம் நம்பலாம்.

Article Published On: Saturday, July 15, 2023, 10:47 [IST]
English summary
Bangalore road rage viral video 3 arrested all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+