கடுமையான அபராதம் விதிக்க முடிவு... டூவீலர்களில் இனி இது ரெண்டும் இல்லாவிட்டால் அவ்ளோதான்... என்னனு தெரியுமா?

சாலை விபத்துக்களை குறைப்பதற்காக போக்குவரத்து காவல் துறையினர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கடுமையான அபராதம் விதிக்க முடிவு... டூவீலர்களில் இனி இது ரெண்டும் இல்லாவிட்டால் அவ்ளோதான்... என்னனு தெரியுமா?

சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக, இரு சக்கர வாகனங்களை தீவிர சோதனைக்கு உட்படுத்த பெங்களூர் போக்குவரத்து காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர். இந்த சோதனையில், ரியர் வியூ மிரர்கள் மற்றும் இன்டிகேட்டர்கள் இல்லாத இரு சக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

கடுமையான அபராதம் விதிக்க முடிவு... டூவீலர்களில் இனி இது ரெண்டும் இல்லாவிட்டால் அவ்ளோதான்... என்னனு தெரியுமா?

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ''ரியர் வியூ மிரர்களை பயன்படுத்த தவறுவதும், வளைவுகளில் திரும்புவதற்கு முன் இன்டிகேட்டர்களை சரியாக ஆன் செய்ய தவறுவதும் சாலை விபத்துக்களுக்கு முக்கியமான காரணங்களாக உள்ளன. எனவே ரியர் வியூ மிரர்கள் மற்றும் இன்டிகேட்டர்கள் இல்லாத இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளோம்'' என்றனர்.

கடுமையான அபராதம் விதிக்க முடிவு... டூவீலர்களில் இனி இது ரெண்டும் இல்லாவிட்டால் அவ்ளோதான்... என்னனு தெரியுமா?

எனவே இனி இரு சக்கர வாகனத்தில் ரியர் வியூ மிரர்கள் இல்லாவிட்டாலோ அல்லது இன்டிகேட்டர்கள் இல்லாவிட்டாலோ 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இதன் மூலம் இரு சக்கர வாகன உரிமையாளர்கள் ரியர் வியூ மிரர்கள் மற்றும் இன்டிகேட்டர்களை பயன்படுத்துவது அதிகரிக்கும் என்றும், சாலை விபத்துக்கள் குறையும் என்றும் காவல் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கடுமையான அபராதம் விதிக்க முடிவு... டூவீலர்களில் இனி இது ரெண்டும் இல்லாவிட்டால் அவ்ளோதான்... என்னனு தெரியுமா?

அதே சமயம் இரு சக்கர வாகனங்களை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தி வருபவர்கள் இந்த உத்தரவால் அச்சமடைந்துள்ளனர். ஏனெனில் தற்போது வாடகைக்கு கிடைக்கும் பெரும்பாலான இரு சக்கர வாகனங்களில் ரியர் வியூ மிரர்கள் இல்லை என கூறப்படுகிறது. அத்தகைய இரு சக்கர வாகனத்தை பயன்படுத்தும்போது காவல் துறையினர் கண்டறிந்தால், பயனருக்கு சிக்கல்தான்.

கடுமையான அபராதம் விதிக்க முடிவு... டூவீலர்களில் இனி இது ரெண்டும் இல்லாவிட்டால் அவ்ளோதான்... என்னனு தெரியுமா?

ஏனெனில் அவர்தான் அபராதம் செலுத்த வேண்டிய சூழல் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே ரியர் வியூ மிரர்கள் இல்லாவிட்டால் வாடகைக்கு எடுத்த நபருக்கு பதிலாக, இரு சக்கர வாகனத்தை வாடகைக்கு வழங்கிய நிறுவனங்களுக்கு காவல் துறையினர் அபராதம் விதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கடுமையான அபராதம் விதிக்க முடிவு... டூவீலர்களில் இனி இது ரெண்டும் இல்லாவிட்டால் அவ்ளோதான்... என்னனு தெரியுமா?

போக்குவரத்து துறை தரவுகளின்படி பெங்களூரில் கடந்த ஜனவரி மாத நிலவரப்படி 1 கோடிக்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் உள்ளன. இதில், 64 லட்சத்திற்கும் மேற்பட்டவை இரு சக்கர வாகனங்கள் ஆகும். எனவே இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும், அவர்களால் மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க வரும் நாட்களில் காவல் துறையினர் சோதனையை தீவிரப்படுத்தவுள்ளனர்.

கடுமையான அபராதம் விதிக்க முடிவு... டூவீலர்களில் இனி இது ரெண்டும் இல்லாவிட்டால் அவ்ளோதான்... என்னனு தெரியுமா?

பொதுவாக இரு சக்கர வாகனங்களில் ரியர் வியூ மிரர்களை கழற்றி வைத்து விடுவதை வாகன ஓட்டிகள் பலர் வாடிக்கையாக வைத்துள்ளனர். ரியர் வியூ மிரர்கள் இல்லாவிட்டால் சாலை விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால் இதனை உணராத பலர், ஸ்டைலுக்காக இரு சக்கர வாகனங்களில் இருந்து ரியர் வியூ மிரர்களை கழற்றி விடுகின்றனர்.

கடுமையான அபராதம் விதிக்க முடிவு... டூவீலர்களில் இனி இது ரெண்டும் இல்லாவிட்டால் அவ்ளோதான்... என்னனு தெரியுமா?

எனவேதான் ரியர் வியூ மிரர்கள் இல்லாத வாகனங்கள் மீது பெங்களூரில் காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவுள்ளன. ஆனால் வாகனங்களை பார்க்கிங் செய்திருக்கும்போது ரியர் வியூ மிரர்களை மர்ம நபர்கள் திருடி கொள்வதாக சிலர் புகார் தெரிவித்துள்ளனர். எனவே இதனை தடுக்கவும் காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Bangalore: Rs 500 Fine For Two-wheelers Without Rear-view Mirrors - Here Are The Details. Read in Tamil
Story first published: Monday, April 12, 2021, 11:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X