ரூ525 டிக்கெட் கட்டணத்தில் விமானத்தில் பயணம் செய்யனுமா? இது தான் கரெக்டான டைம்!

வெறும் ரூபாய் 525 செலவில் நீங்கள் விமானத்தில் பயணிக்கலாம் என்று சொன்னால் நம்புவீர்களா? இது ஏதோ பொய்யான கதை எல்லாம் கிடையாது. இன்றும் வெறும் ரூபாய் 525க்கு விமான டிக்கெட் விற்பனையாகி வருகிறது. அதுவும் நம் தமிழகத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து இந்த விமான டிக்கெட்டை நாம் எடுக்க முடியும். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இன்றளவும் நாம் வானத்திலிருந்து விமானம் பறக்கும் சத்தம் கேட்டால் வீட்டுக்கு வெளியே சென்று எட்டிப் பார்க்கும் பழக்கத்தை கொண்டிருப்போம். இன்றளவும் பலர் விமானத்தில் பறப்பது என்பது பெரும் கனவாக வைத்திருக்கிறார்கள். தன் வாழ்நாளில் ஒருமுறையாவது விமானத்தில் பயணம் செய்து விட வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

bangalore salem flight price

விமானத்தில் பயணம் செய்வதற்கு பலருக்கும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை விமானத்தின் டிக்கெட் விலை தான். பஸ், ரயில் போல விமானத்தின் டிக்கெட் விலை குறைவாக இருக்காது. நிச்சயம் விமானத்தின் டிக்கெட் விலை பஸ், ரயில் டிக்கெட் விலையை விட பல மடங்கு அதிகமாக இருக்கும். இதனால் பலர் விமானத்தில் பயணம் செய்வதை தவிர்த்து நீண்ட தூர பயணத்திற்கும் ரயில்,பஸ் போன்ற வாகனங்களில் பயணம் செய்கிறார்கள்.

இந்நிலையில் இப்படியாக ஏழைகளின் கனவுகளை நிறைவேற்றவை தற்போது மிகக் குறைந்த விலையில் ஒரு விமான சேவை என்பது தமிழகத்தின் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பலருக்கும் இந்த சேவை குறித்த தகவல் பெரிய அளவில் தெரியவில்லை. வெறும் ரூபாய் 525 செலவில் விமானத்தில் பயணிக்க முடியும். இந்த விலையில் யார் வேண்டுமானாலும் டிக்கெட்டுகளை புக் செய்து பயணம் செய்ய முடியும்.

bangalore salem flight price

பெங்களூருவில் இருந்து சேலம் வரை பயணிக்கும் விமான சேவையை தற்போது அலையன்ஸ் ஏர் என்ற நிறுவனம் நடத்தி வருகிறது. இந்நிறுவனம் தற்போது பெங்களூருவில் கிளம்பி சேலம் வருவதற்கு ஒரு பயணிக்கு ரூபாய் 525 மட்டுமே டிக்கெட் கட்டணமாக வசூல் செய்து வருகிறது. இதன் மூலம் பெங்களூருவில் இருந்து சுலபமாக சேலத்திற்கு விமானம் மூலம் வர முடியும்.

பலருக்கும் இப்படியான ஒரு சேவை இருப்பதே தெரியாது. இது ஒரு ஆச்சரியமான தகவலாக இருக்கிறது. பெங்களூரில் இருந்து சேலத்திற்கு விமான சேவை மிக குறைவான கட்டணத்தில் இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. முக்கியமான காரணம் இந்த இரு நகரங்களுக்கும் இடையே இருக்கும் தூரம் என்பது மிகக் குறைவு. இதனால் நீங்கள் விமானத்தில் பறக்கும் நேரமும் மிகக் குறைவாக தான் இருக்கும்.

bangalore salem flight price

இப்போதைய நிலவரப்படி அலையன்ஸ் ஏர் மற்றும் இண்டிகோ ஆகிய நிறுவனங்கள் இந்த இரு நகரங்களுக்கு இடையே விமான சேவை வழங்கி வருகின்றன. இந்த இரு நகரங்களும் வெறும் ஒரு மணி நேர பயணத்தில் இந்த சேவையை வழங்கி வருகின்றன. சேலம் விமான நிலையம் தற்போது தான் கட்டமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வருவதால், மக்கள் மத்தியில் இந்த விமான நிலையத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக இந்த விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

குறைந்த விலை விமான சேவை என்பது வரும் ஜூன் மாதம் வரை பெரும்பாலான நாட்களில் இருக்கிறது. இதனால் இப்பொழுதே நீங்கள் ஆன்லைன் மூலம் இந்த டிக்கெட் விலை புக் செய்து விட்டால் குறைந்த விலையில் டிக்கெட்டுகள் உங்களுக்கு கிடைக்கும். நாட்கள் நெருங்க நெருங்க டிக்கெட் விலை அதிகமாக வாய்ப்புகள் உள்ளது. விலை குறைவாக இருப்பதால் அதிக மக்கள் இதை பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளன.

இதனால் நீங்கள் குடும்பத்துடன் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்ற கனவை கொண்டவராக இருந்தால் நிச்சயம் உங்களுக்கு இது ஒரு வர பிரசாதமான நேரமாக இருக்கும். இப்பொழுதே நீங்கள் பெங்களூருவிலிருந்து சேலத்திற்கு பயணிக்க விமான டிக்கெட் விலை புக் செய்யுங்கள். நிச்சயம் உங்களுக்கு விமான பயண கனவு என்பது மிகக் குறைந்த செலவிலேயே நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா என்னதான் வேகமாக வளர்ந்து வரும் நாடாக இருந்தாலும், இந்திய மக்கள் பலர் இன்றளவும் விமானத்தை பார்த்து அதில் ஒரு நாளாவது பயணம் செய்து விட வேண்டும் என்ற ஏக்கத்தில் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு நிச்சயம் இந்த குறைந்த விலை விமான சேவை என்பது மிகப்பெரிய அளவில் பலனைத் தரும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 26, 2024, 18:25 [IST]
English summary
Bangalore salem flight price 525 how to book
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X