புடிச்சிட்டாங்க... மொத்த இளைஞர்களையும் புடிச்சிட்டாங்க!! சுஸுகி நடத்திய இசை நிகழ்ச்சி!
சுஸுகி மட்சூரி (Suzuki Matsuri) என்ற பெயரில் சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் அதன் புதுமையான ரைடிங் & இசை நிகழ்ச்சிகளை நாடு முழுவதும் வெவ்வேறான பகுதிகளில் நடத்தி வருகிறது. இசை பாடல்கள் காதை கிழிப்பது மட்டுமின்றி, சுஸுகி மட்சூரி நிகழ்ச்சியில் பைக் ரைடர்களும் தங்களது திறமைகளை காட்டி பார்வையாளர்களை அதிர வைக்கின்றனர்.
சுஸுகி மட்சூரி நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது. அதற்கு அடுத்து, கடந்த டிசம்பர் 17ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை இந்த நிகழ்ச்சி பெங்களூரில் நடத்தப்பட்டது. எதிர்பார்த்ததை போல் இந்த நிகழ்ச்சிக்கு பெங்களூரில் இருந்து மட்டுமின்றி, பல்வேறு நகரங்களில் இருந்தும் பார்வையாளர்கள் மற்றும் சுஸுகி பைக் கஸ்டமர்கள் வருகை தந்திருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் நமது டிரைவ்ஸ்பார்க் குழுவும் கலந்துக் கொண்டோம். அப்போது நாங்கள் கண்ட காட்சிகளையும், அறிந்த விஷயங்களையும் வீடியோவாக தொகுத்து வழங்கியுள்ளோம். அதனைதான் மேலே காண்கிறீர்கள். இந்த நிகழ்ச்சியில், சுஸுகியின் சூப்பர் பைக்குகள் அனைத்தும் பார்வையாளர்களின் பார்வைக்காக வரிசையாக நிறுத்தப்பட்டு இருந்தன.

சுஸுகியின் லக்சரி சூப்பர் பைக்கான ஹயபுஸாவும் முற்றிலும் கருப்பு நிறத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டு இருந்தது. சியட் டயர்ஸ் நிறுவனமும் தனது டயர்களை பார்வையாளர்கள் முன் காட்சிப்படுத்தி இருந்தது. இந்த நிகழ்ச்சியில், ஒரு குறிப்பிட்ட பகுதியில் பைக் ஸ்டண்ட்கள் அனுபவம் வாய்ந்த ரைடர்களால் நடத்தப்பட்டன. ஆதலால், இந்த பகுதியில் பார்வையாளர்களின் கூட்டம் அலைமோதியது.


Click it and Unblock the Notifications








