2 மணி நேரத்தில் 30 லட்சம் வசூல்! வாகன ஓட்டிகளை பிடிக்க போலீஸ் செய்த ட்ரிக்! என்னனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க

போக்குவரத்து காவல் துறையினர் வித்தியாசமான ஒரு நடவடிக்கையின் மூலம், வெறும் 2 மணி நேரத்தில், 29.50 லட்ச ரூபாயை அபராதமாக வசூலித்துள்ளனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2 மணி நேரத்தில் 30 லட்சம் வசூல்! வாகன ஓட்டிகளை பிடிக்க போலீஸ் செய்த ட்ரிக்! என்னனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க

விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளை பிடிப்பதற்காக, பெங்களூர் போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள், கடந்த திங்கள் கிழமை அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளனர். இதற்கு 'ஆபரேஷன் சர்ப்ரைஸ் செக்' என அவர்கள் பெயர் சூட்டியிருந்தனர். இந்த அதிரடி நடவடிக்கை மூலம் வெறும் இரண்டே மணி நேரத்தில் 29.50 லட்ச ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

2 மணி நேரத்தில் 30 லட்சம் வசூல்! வாகன ஓட்டிகளை பிடிக்க போலீஸ் செய்த ட்ரிக்! என்னனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க

தலைகவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டுவது, ஒரு வழிப்பாதையில் எதிர் திசையில் வாகனம் ஓட்டுவது, சீட் பெல்ட் அணியாமல் கார்களில் பயணம் செய்வது, செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது மற்றும் நடைபாதைகளில் வாகனம் ஓட்டுவது போன்ற குற்றங்களைதான் வாகன ஓட்டிகள் அதிகம் செய்வதாக போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2 மணி நேரத்தில் 30 லட்சம் வசூல்! வாகன ஓட்டிகளை பிடிக்க போலீஸ் செய்த ட்ரிக்! என்னனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க

காலை 11.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை என மொத்தம் 2 மணி நேரம் இந்த சிறப்பு வாகன தணிக்கை நடைபெற்றது. பெங்களூர் நகர் முழுவதும் மொத்தம் 178 இடங்களில் காவல் துறை அதிகாரிகள் வாகன தணிக்கை மேற்கொண்டனர். இந்த சோதனையின் முடிவில் மொத்தம் 6,247 வழக்குகளை போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.

2 மணி நேரத்தில் 30 லட்சம் வசூல்! வாகன ஓட்டிகளை பிடிக்க போலீஸ் செய்த ட்ரிக்! என்னனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க

அத்துடன் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளிடம் இருந்து அபராதமாக 29.50 லட்ச ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. 'ஆபரேஷன் சர்ப்ரைஸ் செக்' எப்படி நடத்தப்பட்டது? என்பது குறித்து காவல் துறை உயர் அதிகாரிகள் கூறுகையில், இதற்கு முன்பு எப்போதும் வாகன தணிக்கை நடத்தப்படாத இடங்களை நாங்கள் முதலில் கண்டறிந்து கொண்டோம்.

2 மணி நேரத்தில் 30 லட்சம் வசூல்! வாகன ஓட்டிகளை பிடிக்க போலீஸ் செய்த ட்ரிக்! என்னனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க

அந்த புதிய இடங்களில் காவல் துறை அதிகாரிகள் நிறுத்தப்பட்டு போக்குவரத்து விதிமீறல்கள் கண்காணிக்கப்பட்டன'' என்றனர். உண்மையில் பெங்களூர் போக்குவரத்து காவல் துறையினர் நன்றாக யோசித்துதான் இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளனர். பொதுவாக மாநகர பகுதிகளில் காவல் துறையினர் வழக்கமாக எங்கு வாகன தணிக்கை நடத்துவார்கள்? என்பது வாகன ஓட்டிகளுக்கு நன்றாக தெரியும்.

2 மணி நேரத்தில் 30 லட்சம் வசூல்! வாகன ஓட்டிகளை பிடிக்க போலீஸ் செய்த ட்ரிக்! என்னனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க

எனவே அந்த இடங்களின் வழியாக பயணம் செய்வதை வாகன ஓட்டிகள் தவிர்த்து விடுவார்கள். அல்லது அந்த இடங்களை கடக்கும்போது மட்டும் தலை கவசம் அணிந்து பயணிப்பது, செல்போனில் பேசாமல் வாகனம் ஓட்டுவது என நல்ல பிள்ளையாக நடந்து கொள்வார்கள். அந்த பகுதியை கடந்து விட்டால் மீண்டும் விதிமுறைகளை மீற தொடங்கி விடுவார்கள்.

2 மணி நேரத்தில் 30 லட்சம் வசூல்! வாகன ஓட்டிகளை பிடிக்க போலீஸ் செய்த ட்ரிக்! என்னனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க

எனவேதான் இதற்கு முன்பு வாகன தணிக்கை நடத்தப்படாத புதிய இடங்களை கண்டறிந்து பெங்களூர் போக்குவரத்து காவல் துறையினர் அதிரடி காட்டியுள்ளனர். 'ஆபரேஷன் சர்ப்ரைஸ் செக்' என பெயரிடப்பட்டது ஏன்? என்பது தற்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என நாங்கள் நம்புகிறோம். வருங்காலங்களிலும் இதுபோன்ற சோதனைகள் நடத்தப்படும் என காவல் துறையினர் கூறியுள்ளனர்.

2 மணி நேரத்தில் 30 லட்சம் வசூல்! வாகன ஓட்டிகளை பிடிக்க போலீஸ் செய்த ட்ரிக்! என்னனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க

இதன் மூலம் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவது கட்டுக்குள் வரும் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். உலகிலேயே சாலை விபத்துக்களால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இங்கு சாலை விபத்துக்களால் ஒவ்வொரு ஆண்டும் சுமாராக 1.50 லட்சம் பேர் உயிரிழந்து வருகின்றனர்.

2 மணி நேரத்தில் 30 லட்சம் வசூல்! வாகன ஓட்டிகளை பிடிக்க போலீஸ் செய்த ட்ரிக்! என்னனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க

வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மதிக்காமல் அலட்சியம் காட்டுவதுதான் இதற்கு மிக முக்கியமான காரணமாக உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் அனைவரையும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வைப்பதற்காக இதுபோன்ற பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை போக்குவரத்து காவல் துறையினர் எடுத்து வருகின்றனர்.

Note: Images used are for representational purpose only.

More from DriveSpark

Article Published On: Saturday, December 26, 2020, 5:30 [IST]
English summary
Bangalore Traffic Cops Collect Rs 29.50 Lakh Fines In Just 2 Hours - Details. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+