குடிநீரில் காரை கழுவினால் ரூ5000 ஃபைன்! பெங்களூருவில் வரப்போகுது தண்ணீர் பஞ்சம்!
பெங்களூருவில் குடிதண்ணீரை வைத்து காரை கழுவினால் ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்படும் என பெங்களூரு குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. மாநிலத்தில் நிலவி வரும் கடும் குடிநீர் பற்றாக்குறை காரணமாக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
கர்நாடகாவின் தலைநகரம் பெங்களூரு என்பது இந்தியாவின் ஐடி தலைநகரம் என அழைக்கப்படுகிறது. ஏராளமான ஐடி நிறுவனங்கள் பெங்களூருவில் தான் இருக்கின்றன. இதனால் ஐடி துறையில் வேலை பார்க்கும் நபர்கள் ஏராளமானோர் பெங்களூருவில் தங்கி உள்ளனர். இதில் பெரும்பாலானோர் சொந்தமாக கார் வைத்திருக்கிறார்கள். முக்கியமாக அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் முதல் சாதாரண வீடுகளில் வசிப்பவர்கள் வரை கார் வைத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் கோடை துவங்கும் முன்பே பெங்களூரு பகுதியில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படுவதற்கான அறிகுறி ஏற்பட்டுள்ளது. தேவைக்கு ஏற்ற அளவு குடிநீர் வரத்து இல்லாததால் பெங்களூருவில் உள்ள குடிநீர் வாரியம் தற்போது புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி பெங்களூருவில் குடிநீரை வைத்து வாகனம் கழுவுபவர்கள் உள்ளிட்ட மற்ற பணிகளை செய்தால் அவர்களுக்கு ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிநீரை குடிப்பதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என பெங்களூர் குடிநீர் வாரியம் என்பது தெரிவித்துள்ளது. வாகனம் கழுவ வேண்டும் என்றால் உப்பு தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் பெங்களூர் வாசிகள் பலர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

பெங்களூருவில் சொந்தமாக கார் வைத்திருக்கும் பலர் பெங்களூருவில் உள்ள நல்ல நீரை பயன்படுத்தியே வாகனங்களை சுத்தப்படுத்தி வந்தனர். அந்நகரில் உள்ள குடிநீர் சுத்தமான குடிநீராக இருக்கும் என்பதால் வாகனத்தை கழுவுவதற்கு அதை பயன்படுத்துவதன் மூலம் வாகனம் சுத்தமாக மாறிவிடும், பளபளவென இருக்கும் என்பதால் பலர் அதை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் தற்போது அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் மீறி பெங்களூருவில் குடிநீரை பயன்படுத்தி வாகனத்தை சுத்தப்படுத்தினால் ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்படுவது மட்டுமல்லாமல் மீறும் நபர்களுக்கு ஒரு நாளுக்கு ரூபாய் 500 விதம் ரூபாய் 5000த்திற்கு மேல் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெங்களூர் வாசிகள் தற்போது அவதிப்பட்டு வருகின்றனர்.

குடிநீரை வாகனம் கழுவதற்கு மட்டுமல்லாமல் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்காக பயன்படுத்துவது, வாட்டர் பவுண்டைன்களுக்கு பயன்படுத்துவது, கண்ஸ்ட்ரக்ஷன் பணிகளுக்காக பயன்படுத்துவது, விளையாட்டு பணிகளுக்காக பயன்படுத்துவது, வேடிக்கைக்காக பயன்படுத்துவது ஆகியவற்றிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்திற்கும் உப்பு தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது மக்களின் பயன்பாட்டிற்காக 1916 என்ற டோல் ஃப்ரீ நம்பர் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த சந்தேகங்கள் இருந்தால் இந்த நம்பரில் டயல் செய்து அவர்களது சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை கேட்டுக் கொள்ள முடியும். மேலும் வேறு ஏதாவது இப்படியாக பயன்படுத்துவது தெரிய வந்தால் பொதுமக்களே இந்த நம்பருக்கு போன் செய்து புகார் செய்ய முடியும்.
பெங்களூருவில் உள்ள அனைத்து மால்களுக்கும் சினிமா திரையரங்குகளுக்கும் குடிதண்ணீரை வெறும் குடிப்பதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. சுத்தப்படுத்துவதற்காக குடிதண்ணீரை பயன்படுத்தக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பெங்களூருவில் டேங்கர் லாரி மூலம் தண்ணீர் வழங்குவதிலும் விலையேற்றம் என்பது ஏற்பட்டுள்ளது.
முன்பு 6000 லிட்டர் கொண்ட லாரியில் குடிதண்ணீரை பெற ரூபாய் 450 முதல் 600 வரை செலவு செய்ய வேண்டியது இருந்தது. தற்போது இது ரூபாய் 2000 முதல் 3000 வரை விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இதற்கு பெங்களூருவில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாடு மிக முக்கியமான காரணமாக இருக்கிறது
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெங்களூர் வாசிகள் இனிய குடிநீரில் வாகனம் கழுவுவதை தவிர்க்க வேண்டும் குடிநீரில் வாகனம் கழுவினால் பெங்களூருவில் உள்ள அதிகாரிகள் உங்கள் மீது அபராதம் விதிக்க வாய்ப்பு உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். குடிநீரில் வாகனம் கழுவுவதை விட உப்பு தண்ணீரில் வாகனத்தை கழுவுவதுதான் சிறந்ததாக இருக்கும். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









