மஹிந்திரா ட்ரியோ ஆட்டோவிற்கு இவ்வளவு திறமையா... கர்துங் லா பாஸ் சிகரத்தை அடைந்த முதல் எலெக்ட்ரிக் ஆட்டோ!

கர்துங் லா பாஸ் சிகரத்தை அடைந்த முதல் எலெக்ட்ரிக் ஆட்டோ என்ற புழுக்குரியதாக மஹிந்திரா நிறுவனத்தின் இ-ட்ரியோ மாறியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

மஹிந்திரா ட்ரியோ ஆட்டோவிற்கு இவ்வளவு திறமையா... கர்துங் லா பாஸ் சிகரத்தை அடைந்த முதல் எலெக்ட்ரிக் ஆட்டோ!

மஹிந்திரா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஆட்டோவைக் கொண்டு இளைஞர் ஒருவர் இந்தியாவின் உயரமான சிகரங்களில் ஒன்றான கர்துங் லா பாஸ் பகுதிக்கு சென்றிருக்கும் சம்பவம் அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்திருக்கின்றது. கடல் மட்டத்தில் சுமார் 5,602 மீட்டர் உயரத்திலேயே இந்த சிகரம் அமைந்துள்ளது.

மஹிந்திரா ட்ரியோ ஆட்டோவிற்கு இவ்வளவு திறமையா... கர்துங் லா பாஸ் சிகரத்தை அடைந்த முதல் எலெக்ட்ரிக் ஆட்டோ!

இந்த பகுதியில் உள்ள சாலைகளில் பயணிப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. ஆஃப்-ரோடு பயன்பாட்டு வசதிகள் கொண்ட வாகனங்களே பெருத்த சவால்களுக்கு இங்கு ஆளாகும். இத்தகைய உயரமான பகுதிக்கே எலெக்ட்ரிக் ஆட்டோவைக் கொண்டு ஜோதி விக்னேஷ் எனும் இளைஞர் சென்றிருக்கின்றார்.

மஹிந்திரா ட்ரியோ ஆட்டோவிற்கு இவ்வளவு திறமையா... கர்துங் லா பாஸ் சிகரத்தை அடைந்த முதல் எலெக்ட்ரிக் ஆட்டோ!

இவர் பெங்களூருவைச் சேர்ந்த ஃபிட்னஸ் டிரைனர் ஆவார். பகுதி நேரமாக வீடியோக் கன்டென்டராகவும் அவர் செயலாற்றி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாகவே கர்துங் லா பாஸ்-க்கு மஹிந்திரா இ-ட்ரியோ எலெக்ட்ரிக் ஆட்டோ வாயிலாக அவர் பயணித்திருக்கின்றார். இதுமட்டுமின்றி இவரின் முக்கிய குறிக்கோள் கின்னஸ் சாதனையை முறியடிப்பது என கூறப்படுகின்றது.

மஹிந்திரா ட்ரியோ ஆட்டோவிற்கு இவ்வளவு திறமையா... கர்துங் லா பாஸ் சிகரத்தை அடைந்த முதல் எலெக்ட்ரிக் ஆட்டோ!

இதன் காரணத்திற்காகவே அவர் நீண்ட நாட்களாக மஹிந்திரா இ-ட்ரியோ ஆட்டோவைக் கொண்டு தனது பயணங்களை மேற்கொண்டு வருகின்றது. டிசம்பர் 5, 2021இல் இருந்து அவர் தனது பயணங்களை மேற்கொண்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே கடல் மட்டத்தில் இருந்து சுமார் 17,852 அடி உயரமுள்ள கர்துங் லா பாஸை தனது பயணத்தின் ஒரு பகுதியாக சென்றடைந்திருக்கின்றார்.

மஹிந்திரா ட்ரியோ ஆட்டோவிற்கு இவ்வளவு திறமையா... கர்துங் லா பாஸ் சிகரத்தை அடைந்த முதல் எலெக்ட்ரிக் ஆட்டோ!

இளைஞரின் இந்த செயலுக்கு வாகன ஆர்வலர்கள் மற்றும் நெட்டிசன் மத்தியில் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றது. குறிப்பாக ஆட்டோவைக் கொண்டு அவர் அப்பகுதிக்கு சென்றிருப்பது பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராகூட இந்த நிகழ்வை முன்னிட்டு இளைஞருக்கு பாராட்டு தெரிவித்திருக்கின்றார். விக்னேஷ் இதுவரை 8 மாத கால பயணத்தில் 17 ஆயிரம் கிமீட்டர் வரை பயணித்திருக்கின்றார். மேலும், 20 மாநிலங்களை அவர் கடந்திருக்கின்றார். இந்த பயணங்களின் வாயிலாக மாசு இல்லாத இந்தியா எனும் செய்தியை அவர் பரப்பி வருகின்றார்.

மஹிந்திரா ட்ரியோ ஆட்டோவிற்கு இவ்வளவு திறமையா... கர்துங் லா பாஸ் சிகரத்தை அடைந்த முதல் எலெக்ட்ரிக் ஆட்டோ!

துளியளவும் மாசை ஏற்படுத்தாத வாகனமே மஹிந்திராவின் இ-ட்ரியோ எலெக்ட்ரிக் ஆட்டோ. இந்திய சந்தையில் இந்த எலெக்ட்ரிக் ஆட்டோ நான்கு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. எஸ்எஃப்டி, எச்ஆர்டி, யாரி - எஸ்எஃப்டி மற்றும் யாரி எச்ஆர்டி ஆகிய தேர்வுகளிலேயே அது கிடைத்துக் கொண்டுள்ளது.

மஹிந்திரா ட்ரியோ ஆட்டோவிற்கு இவ்வளவு திறமையா... கர்துங் லா பாஸ் சிகரத்தை அடைந்த முதல் எலெக்ட்ரிக் ஆட்டோ!

இந்த தேர்வுகளின் வாயிலாக மூன்று மற்றும் நான்கு இருக்கை தேர்வு, வழக்கமான ரூஃப் டாப் மற்றும் ஹார்ட் டாப் ஆகிய விருப்ப தேர்வுகளை மஹிந்திரா வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவை அனைத்தும் ரேஞ்ஜ் விஷயத்திலும் மாறுபட்டு காணப்படுகின்றது. ஒரு ஃபுல் சார்ஜில் 125 கிமீ தொடங்கி 141 கிமீ வரை ரேஞ்ஜ் தரக் கூடியதாக இ-ட்ரியோ காட்சியளிக்கின்றது.

மஹிந்திரா ட்ரியோ ஆட்டோவிற்கு இவ்வளவு திறமையா... கர்துங் லா பாஸ் சிகரத்தை அடைந்த முதல் எலெக்ட்ரிக் ஆட்டோ!

இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக எலெக்ட்ரிக் ஆட்டோவில் 7.37kWh 48 வோல்ட் லித்தியம்-அயன் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதனை முழுமையாக சார்ஜ் செய்ய 2.30 மணி நேரம் முதல் 3.50 மணி நேரம் தேவைப்படும். இத்துடன், 15A சார்ஜர் பாயிண்ட், ஹசார்ட் இன்டிகேட்டர், டெலிமேட்டிக் யூனிட் மற்றும் ஜிபிஎஸ் வசதி உள்ளிட்டவை இந்த ஆட்டோவில் வழங்கப்பட்டிருக்கின்றன.

மஹிந்திரா ட்ரியோ ஆட்டோவிற்கு இவ்வளவு திறமையா... கர்துங் லா பாஸ் சிகரத்தை அடைந்த முதல் எலெக்ட்ரிக் ஆட்டோ!

இத்தகைய வசதிகள் எலெக்ட்ரிக் ஆட்டோவைக் கொண்டே ஜோதி விக்னேஷ் தனது நீண்ட கால (தூர) பயணங்களை மேற்கொண்டு வருகின்றார். ஏற்கனவே 17 ஆயிரத்திற்கும் அதிகமான கிமீ பயணத்தை முடித்திருக்கின்ற நிலையில் பல ஆயிர கிலோமீட்டர் தூர பயணங்களை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்திருக்கின்றார்.

மஹிந்திரா ட்ரியோ ஆட்டோவிற்கு இவ்வளவு திறமையா... கர்துங் லா பாஸ் சிகரத்தை அடைந்த முதல் எலெக்ட்ரிக் ஆட்டோ!

தனது ஒட்டுமொத்த பயணத்தையும் மஹிந்திரா இ-ட்ரியோ ஆட்டோ வாயிலாகவே மேற்கொள்ள அவர் திட்டமிட்டிருக்கின்றார். இதற்காகதான் அவர் தனது பயணத்தை 'இந்தியா ஆன் 3 வீல்ஸ்' எனும் பெயரில் மேற்கொண்டு வருகின்றார். இவரின் இந்த பயணத்தின் வாயிலாக இ-ட்ரியோ ஆட்டோ சில சாதனைகளைப் படைத்த வண்ணம் இருக்கின்றது.

மஹிந்திரா ட்ரியோ ஆட்டோவிற்கு இவ்வளவு திறமையா... கர்துங் லா பாஸ் சிகரத்தை அடைந்த முதல் எலெக்ட்ரிக் ஆட்டோ!

அந்தவகையிலேயே முதல் எலெக்ட்ரிக் ஆட்டோவாக கர்துங் லா பாஸை அது அடைந்திருக்கின்றது. இது மஹிந்திரா நிறுவனத்திற்கும் பெருமிதம் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த ஆட்டோவில் 10.72 பிஎச்பி (8kW) மற்றும் 42 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடிய மின் மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மணிக்கு 55 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.

மஹிந்திரா ட்ரியோ ஆட்டோவிற்கு இவ்வளவு திறமையா... கர்துங் லா பாஸ் சிகரத்தை அடைந்த முதல் எலெக்ட்ரிக் ஆட்டோ!

டாடா மோட்டார்ஸ், ஹூண்டாய் மற்றும் எம்ஜி உள்ளிட்ட நிறுவனங்கள் இந்திய மின் வாகன சந்தையை அலங்கரிக்கும் வகையில் அதன் மின்வாகன தயாரிப்புகளை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன. அதாவது, எலெக்ட்ரிக் கார்களை விற்பனைச் செய்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், இந்த பிரிவில் இன்னும் தன்னுடைய தடத்தை பதிக்காமல் இருக்கின்றது இந்தியாவின் முன்னணி நிறுவனமான மஹிந்திரா.

மஹிந்திரா ட்ரியோ ஆட்டோவிற்கு இவ்வளவு திறமையா... கர்துங் லா பாஸ் சிகரத்தை அடைந்த முதல் எலெக்ட்ரிக் ஆட்டோ!

இது வறுத்தம் அளிக்கும் தகவலாக உள்ளது. அதேவேலையில், வெகுவிரைவில் மாற்றியமைக்கப்பட இருக்கின்றது. ஆம், மஹிந்திரா நிறுவனம் வெகு விரைவில் ஒன்றன் பின் ஒன்றாக மொத்தம் ஐந்து மின்சார கார்களை இந்தியாவில் களமிறக்க இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் சமீபத்தில்கூட ஓர் டீசர் வீடியோவை அது வெளியிட்டிருந்தது.

More from DriveSpark

Article Published On: Sunday, July 31, 2022, 8:30 [IST]
English summary
Bangalore youngster takes mahindra treo to khardung la
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+