கிழிஞ்சு போன பேன்ட் உடன் காரில் வந்து இறங்கியது தமிழ் பட நடிகையா! நல்லா உத்து பாத்தாதான் அடையாளமே தெரியுது!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மெர்சிடிஸ் பென்ஸ் இ-க்ளாஸ் (Mercedes Benz E-Class). தற்போதைய நிலையில் இந்த கார் மொத்தம் 3 வேரியண்ட்களில் (Variants) கிடைத்து வருகிறது. அவை E-Class E 200, E-Class E 220d மற்றும் E-Class E 450 ஆகும். இதில், E-Class E 200 வேரியண்ட்டின் விலை 78.50 லட்ச ரூபாய் ஆகவும், E-Class E 220d வேரியண்ட்டின் விலை 81.50 லட்ச ரூபாய் ஆகவும், E-Class E 450 வேரியண்ட்டின் விலை 92.50 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது.
இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். இதில், E-Class E 200 வேரியண்ட்டை பிரபல நடிகை ஒருவர் வாங்கியுள்ளார். அவர் பனிடா சாந்து (Banita Sandhu) வாங்கியுள்ளார். தனது புத்தம் புதிய காரை பனிடா சாந்து பயன்படுத்தும் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

யூடியூப் தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில், பனிடா சாந்து தனது புத்தம் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ-க்ளாஸ் இ200 காரில், வந்து இறங்குவதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது? என்பது தெளிவாக தெரியவில்லை. இருப்பினும் பனிடா சாந்து மற்றும் அவரது புதிய காரை தெளிவாக காண முடிகிறது.
கிழிந்த பேண்ட், கை மடிக்காத சட்டை என மாடர்ன் உடையில், பனிடா சாந்து வந்து இறங்குவதை இந்த வீடியோவில் நாம் தெளிவாக காணலாம். இந்த வீடியோவை பார்த்தால், இவர் யார்? என நீங்கள் ஒரு நிமிடம் யோசிக்கலாம். தமிழில் ஆதித்யா வர்மா (Adithya Varma) திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார். இது நடிகர் விக்ரமின் மகனான துருவ் விக்ரம் (Dhruv Vikram) உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆகும்.

பனிடா சாந்து தற்போது வாங்கியுள்ள மெர்சிடிஸ் பென்ஸ் இ-க்ளாஸ் இ200 காரின் ஆன்-ரோடு விலை (On-Road Price) சுமார் 98 லட்ச ரூபாய் வரும். இந்த காரில் பொருத்தப்பட்டிருப்பது, 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 197 பிஎஸ் பவர் மற்றும் 320 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் உடன், 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் ஆடி ஏ6 (Audi A6) மற்றும் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் (BMW 5 Series) உள்ளிட்ட கார்களுடன், மெர்சிடிஸ் பென்ஸ் இ-க்ளாஸ் கார் போட்டியிட்டு வருகிறது. இது சொகுசு செடான் (Luxury Sedan) ரகத்தை சேர்ந்த கார் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அதிக பாதுகாப்பு மற்றும் சொகுசு வசதிகள் நிரம்பிய ஒரு பிரீமியம் காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு மெர்சிடிஸ் பென்ஸ் இ-க்ளாஸ் நல்ல ஆப்ஷன். பாதுகாப்பு மற்றும் சொகுசு ஆகிய 2 முக்கியமான தேவைகளை நிறைவேற்றுவதால், திரையுலக நட்சத்திரங்கள் மத்தியில் மெர்சிடிஸ் பென்ஸ் இ-க்ளாஸ் புகழ்பெற்று விளங்குகிறது.
நடிகர்கள் அமிதாப் பச்சன் (Amitabh Bachchan), சல்மான் கான் (Salman Khan), சயீஃப் அலி கான் (Saif Ali Khan) மற்றும் நடிகை கியாரா அத்வானி (Kiara Advani) போன்றவர்களிடம், மெர்சிடிஸ் பென்ஸ் இ-க்ளாஸ் கார் உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








