பெட்ரோல் பங்கில் ஸ்கிம்மர் கருவி மூலம் ரூ.20 லட்சம் வரை கொள்ளையடித்த ஊழியர்கள்; அதிர்ச்சி ரிப்போர்ட்

பெட்ரோல் பங்கில் ஸ்கிம்மர் கருவி மூலம் ரூ.20 லட்சம் வரை கொள்ளையடித்த ஊழியர்கள்; ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்..!!

By Azhagar

பெட்ரோல் பங்கிற்கு வரும் வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம் கார்டு விவரங்களை நூதன முறையில் திருடி ரூ.20 லட்சம் வரை கொள்ளையடித்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

’ஸ்கிம்மர்’ மூலம் பெட்ரோல் பங்கில் ரூ.20 லட்சம் வரை கொள்ளை!

கோவை ராஜவீதியை சேர்ந்த மகாலிங்கம் கணக்கிலிருந்து திடீரென ரூ.59 ஆயிரம் ரூபாய் மாயமானது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார்.

’ஸ்கிம்மர்’ மூலம் பெட்ரோல் பங்கில் ரூ.20 லட்சம் வரை கொள்ளை!

இந்த புகாரை விசாரித்த வந்த போலீசார், மகாலிங்கத்தின் ஏடிஎம் கார்டின் கடவு எண்ணை தெரிந்துக்கொண்டு பணம் திருடப்பட்டு இருப்பதை கண்டுபித்தனர்.

’ஸ்கிம்மர்’ மூலம் பெட்ரோல் பங்கில் ரூ.20 லட்சம் வரை கொள்ளை!

ஏடிஎம் கார்டை எங்கெல்லாம் மகாலிங்கம் பயன்படுத்தினார் என்பதை அவரிடன் கேட்டனர். அப்போது அவர் கோவை அவிநாசி சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி வழக்கமாக பெட்ரோல் போடுவதாக தெரிவித்தார்.

’ஸ்கிம்மர்’ மூலம் பெட்ரோல் பங்கில் ரூ.20 லட்சம் வரை கொள்ளை!

இதனை தொடர்ந்து அந்த பெட்ரோல் பங்கையும், அங்கு வேலை செய்யும் ஊழியர்களையும் சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக கண்காணிக்க தொடங்கினர்.

’ஸ்கிம்மர்’ மூலம் பெட்ரோல் பங்கில் ரூ.20 லட்சம் வரை கொள்ளை!

பெட்ரோல் பெற்றுக்கொண்டு ஏடிஎம் கார்டில் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களிடம், கார்டை கொடுக்கும் முன், மற்றொரு கருவியில் கார்டை ஸ்வைப் செய்து தரும் இரண்டு ஊழியர்களை போலீசார் கவனித்தனர்.

’ஸ்கிம்மர்’ மூலம் பெட்ரோல் பங்கில் ரூ.20 லட்சம் வரை கொள்ளை!

அதற்கு பிறகு அதே பகுதியில் ஒருவாரமாக பல்வேறு வேடங்களில் அந்த இரு ஊழியர்களையும் போலீசார் தொடர்ந்து கவனிக்க தொடங்கினர்.

ஏடிஎம் காரட்டை பயன்படுத்தி செல்லும் வாடிக்கையாளர்களிடம் தொடர்ந்து இதே போல அந்த இரு ஊழியர்களும் செய்து வந்தனர்.

’ஸ்கிம்மர்’ மூலம் பெட்ரோல் பங்கில் ரூ.20 லட்சம் வரை கொள்ளை!

இதனையடுத்து அவர்களை இருவரையும் கோவை சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

’ஸ்கிம்மர்’ மூலம் பெட்ரோல் பங்கில் ரூ.20 லட்சம் வரை கொள்ளை!

அப்போது அவர்களின் பெயர் ஆனந்த் மற்றும் மகேந்திரன் என்பது தெரியவந்தது. பெட்ரோல் பங்கிற்கு வரும் வாடிக்கையாளர்களின் ஏடிஎம் கார்டுகளை ஸிம்மர் கருவிகளை தேய்த்து,

அதன் மூலம் கார்டின் எண் மற்றும் கடவு எண்களை பெற்று பிறகு புதிய கார்டு தயாரித்து பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது.

’ஸ்கிம்மர்’ மூலம் பெட்ரோல் பங்கில் ரூ.20 லட்சம் வரை கொள்ளை!

பெட்ரோல் பங்கிற்கு வரும் வாடிக்கையாளர்கள் சிலர், உரிய விழிப்புணர்வு இல்லாமல், ஏடிஎம் கடவு எண்களை ஊழியர்களிடம் கொடுத்து விடுகின்றனர்.

’ஸ்கிம்மர்’ மூலம் பெட்ரோல் பங்கில் ரூ.20 லட்சம் வரை கொள்ளை!

கடவு எண்ணை பெறும் ஊழியர்கள், கார்டின் எண்ணை ஸ்கிம்மரின் மூலமாக பெற்று கடவு எண்ணை பயன்படுத்தி பணத்தை வேறு கணக்கிற்கு மாற்றிவிடுகின்றனர்.

’ஸ்கிம்மர்’ மூலம் பெட்ரோல் பங்கில் ரூ.20 லட்சம் வரை கொள்ளை!

மேலும் பணமாக மட்டுமில்லாமல், ஆன்-லைனில் பொருட்கள் வாங்குவது, அதற்கான பணத்தை கார்டில் இருந்து பெறுவது என இதுவரை ரூ. 20 லட்சம் வரை ஆனந்த் மற்றும் மகேந்திரன் மோசடி செய்து சம்பாதித்துள்ளனர்.

’ஸ்கிம்மர்’ மூலம் பெட்ரோல் பங்கில் ரூ.20 லட்சம் வரை கொள்ளை!

இருவர்களை கைது செய்த போலீசார் மேலும் பல விசாரணைகளை அவர்களிடம் மேற்கொண்டு வருகின்றனர். கூடவே இதுபோன்ற 40 புகார்கள் வரை போலீசாருக்கு கூடுதலாக கிடைத்துள்ளது.

’ஸ்கிம்மர்’ மூலம் பெட்ரோல் பங்கில் ரூ.20 லட்சம் வரை கொள்ளை!

இதனிடையே வாடிக்கையாளர்கள் எங்கு சென்றாலும் ஏடிஎம் கடவு எண்ணை யாருக்கும் தர வேண்டாம் எனவும், கார்டை ஸ்வைப் பண்ணும் போது, மெஷினில் வேறு எதாவது கருவி பொருத்தப்பட்டுள்ளதா என்பதில் விழிப்புணர்வு கொள்ளவேண்டும் எனவும் பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Bank Card Skimming Rampant in Petrol Pumps Alert. Click for Details...
Story first published: Monday, July 31, 2017, 16:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X