ஒரே நேரத்தில் 3 பென்ஸ் கார்களை வாங்கனது அவரா! எங்கயோ பாத்த மாதிரியே இருக்கே... ஆச்சரியத்தில் உறைந்த மக்கள்!
ரமேஷ் பாபு (Ramesh Babu). இந்த பெயரை கேள்விப்படாதவர்களே இருக்க முடியாது. பெங்களூர் (Bangalore) நகரை சேர்ந்த இவர் அடிப்படையில், பார்பர் (Barber) ஆவார். அதாவது முடி திருத்துபவர். இவரது தந்தை மறைவிற்கு பிறகு, சலூன் கடைக்குள் காலடி எடுத்து வைத்தார்.
இந்த தொழிலை செய்து கொண்டே சிறுக சிறுக சேர்த்த பணத்தில், ரமேஷ் பாபு தனது முதல் காரை வாங்கினார். அது மாருதி ஆம்னி (Maruti Omni) ஆகும். இந்த காரை வாடகைக்கு விட்டதன் மூலம் ரமேஷ் பாபுவிற்கு நல்ல வருமானம் கிடைத்தது. எனவே ரமேஷ் டூர்ஸ் அண்டு டிராவல்ஸ் (Ramesh Tours And Travels) என்ற நிறுவனத்தை தொடங்கினார்.

இது கார்களை வாடகைக்கு விடும் நிறுவனம் ஆகும். ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் (Rolls Royce Ghost), பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் (BMW 7 Series), பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் (BMW 5 Series) மற்றும் மெர்சிடிஸ் எஸ் க்ளாஸ் (Mercedes S Class) என பல்வேறு விலை உயர்ந்த கார்கள் இந்த நிறுவனத்திடம் உள்ளன. ஒட்டுமொத்தமாக 200க்கும் மேற்பட்ட கார்கள் மூலம், ரமேஷ் டூர்ஸ் அண்டு டிராவல்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது!
இப்படி பல்வேறு விலை உயர்ந்த கார்கள் எல்லாம் கைவசம் இருக்கும் நிலையில், மேலும் 3 கார்களை தற்போது ஒரே நாளில் வாங்கியுள்ளார் ரமேஷ் பாபு. இவர் தற்போது வாங்கியிருப்பது மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் (Mercedes Benz E Class) ஆகும். 3 கார்களுமே மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ்தான்.

இந்த 3 கார்களும் ஒன்று போலவே உள்ளன. ஹைடெக் சில்வர் மெட்டாலிக் நிறத்தில் அவை பெயிண்ட் செய்யப்பட்டுள்ளன. இவை எல்டபிள்யூபி (LWB) மாடல்கள் ஆகும். Long Wheel Base என்பதன் சுருக்கம்தான் LWB. இன்னும் தெளிவாக சொல்வதென்றால், இவை அனைத்துமே மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் காரின் எல்டபிள்யூபி 220டி (220d) வேரியண்ட்கள் ஆகும்.
இந்த வேரியண்ட்டில், 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 192 பிஹெச்பி பவர் மற்றும் 400 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலையே (Ex-showroom Price) 72.80 லட்ச ரூபாய் ஆகும். பெங்களூர் நகரில் உள்ள ஒரு மெர்சிடிஸ் பென்ஸ் ஷோரூமில், ரமேஷ் பாபு இந்த 3 கார்களையும் டெலிவரி எடுத்துள்ளார். தனது குடும்பத்தினர் மற்றும் நிறுவன ஊழியர்களுடன் சென்று, ரமேஷ் பாபு 3 மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் கார்களையும் டெலிவரி எடுத்து வந்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ரமேஷ் பாபு புதிதாக வாங்கியுள்ள மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ், சொகுசு செடான் (Luxury Sedan) ரகத்தை சேர்ந்தது ஆகும். பயணிகளுக்கு சௌகரியமான மற்றும் பாதுகாப்பான பயணத்தை வழங்கும் வகையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இ க்ளாஸ் காரை வடிவமைத்துள்ளது. எனவே ரமேஷ் பாபுவின் வாடிக்கையாளர்கள், இந்த 3 கார்களையும் பெரிதும் விரும்ப கூடும் என்பது எங்கள் கருத்து.


Click it and Unblock the Notifications








