கார்களுக்கு என தனி மாளிகையை கட்டணும் போல! இப்படியும் ஒரு அரசியல்வாதியா.. நூற்று கணக்குல வச்சிருந்திருக்காரு!!!

உலகமே எதிர்பார்த்திருக்காது பசர் அல் அசாத்-தின் ஆட்சி, கிளர்ச்சியாளர்களால் கவிழும் என. 24 ஆண்டுகளாக ஆட்சி பசர் அல் அசாத்-இன் கைகளில் இருந்து வந்த நிலையில், தற்போது கிளர்ச்சியாளர்களால் முடிவுக்கு வந்திருக்கின்றது. பசர் அல் அசாத்-இன் ஆட்சி அவ்வளவு நல்ல ஆட்சி என்று சொல்லிவிட முடியாது. அவருடைய ஆட்சியானது சற்றே கொடியதாகவும், சர்வாதிகாரம் படைத்ததாகவுமே இருந்திருக்கின்றது. சிறு சிறு போராட்டாங்களையும் வன்முறையால் கையாண்டவராக இவர் காட்சியளிக்கின்றது. இத்தகைய மோசமான கையாளுதலினாலும், நிர்வாக திறனின்மையாலுமே அவருடைய ஆட்சி தற்போது கிளர்சியாளர்களால் முடிவுக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது.

இந்த நிலையிலேயே அவர் என்ன மாதிரியான ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வந்தார் என்பதும் வெளி உலகிற்கு தெரிய வந்திருக்கின்றது. கிளர்ச்சியாளர்கள் வெளியிட்ட படங்கள் மற்றும் வீடியோக்கள் வாயிலாக, பசர் அல் அசாத் மாபெரும் மன்னர்களுக்கு இணையாக சொகுசு வாழ்க்கையையே வாழ்ந்து வந்திருக்கின்றார்.

Bashar al-assad s lavish lifestyle exposed

குறிப்பாக, பெரும் பணக்காரர்களைப் போல பலதரப்பட்ட ஆடம்பர கார்களை அவர் பயன்படுத்தி வந்ததும் தெரிய வந்திருக்கின்றது. சொல்லப்போனால் இந்தியாவின் பெரும் பணக்காரரான அம்பானி வைத்திருக்கும் கார்களுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு அதிக எண்ணிக்கையில் அவர் ஆடம்பர கார்களை பயன்படுத்தி வந்திருக்கின்றார். லக்சூரி கார்கள் மட்டுமின்றி ஸ்போர்ட்ஸ் கார்களும் அவருடைய கலெக்சனில் இருந்திருக்கின்றன.

இதை வெளிக்காட்டக் கூடிய வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. நம்மில் பலர் பெரும் தொழிலதிபர்கள் மட்டுமே அதிக எண்ணிக்கையில் கார்களை வைத்திருப்பார்கள் என நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால், இந்த உலகத்தில் அதிக எண்ணிக்கையில் ஆடம்பர கார்களை பயன்படுத்தும் அரசியல் தலைவர்களும் இருக்கின்றார்கள் என்பதற்கு சான்றாக இந்த நிகழ்வு அமைந்திருக்கின்றது.

சொல்லப்போனால் அசாத் வைத்திருக்கும் கார்களை நிறுத்துவதற்கு தனி ஒரு மைதானமே தேவைப்படும் என கூறும் அளவிற்கு மிக அதிக எண்ணிக்கையில் அவரிடத்தில் ஆடம்பர கார்கள் இருந்திருக்கின்றன. அவை அனைத்தும் தற்போது கை விடப்பட்ட நிலையில் கிளர்ச்சியாளர்களின் கை வசம் சிக்கி உள்ளது.

ஃபெர்ராரி (Ferrari), அஸ்டன் மார்ட்டின் (Aston Martin) மற்றும் பிஎம்டபிள்யூ (BMW) என உலகின் முன்னணி சொகுசு கார் உற்பத்தி பிராண்டுகள் கார் மாடல்கள் பலவற்றை அவர் பயன்படுத்தி வந்திருக்கின்றார். இதுமட்டுமில்லைங்க, ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) கார்களையும் கூட அவர் பயன்படுத்தி வந்திருக்கின்றார். இதுவே பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

இந்த பிராண்டுகளுடைய கார்கள் மட்டுமல்ல இன்னும் பல அடையாளம் தெரியாத நிறுவனங்களின் கார்களும் அசாத்-இன் கராஜில் இருந்தன. சில அரிய வகை கார்களையும் பசர் அல் அசாத் பயன்படுத்தி வந்திருக்கின்றார். இதை வைத்தே அவர் மன்னர்களையே மிஞ்சும் அளவிலான அரசியல்வாதியாக வலம் வந்திருக்கின்றார் என்பது தெரிய வந்திருக்கின்றது.

சுமார் 24 ஆண்டு காலம் சிரியாவை கொடுங்கோல் ஆட்சி செய்து வந்த அசாத், இவ்வளவு கார்களை பயன்படுத்தி வந்தது உண்மையிலேயே அந்நாட்டு மக்களுக்கு மட்டும் அல்ல உலக நாடுகளில் உள்ள தலைவர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. அந்த அளவிற்கே அவர் மிக மிக அதிக எண்ணிக்கையில் சொகுசு கார்களை வைத்து இருந்திருக்கின்றார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவிலும் இதுபோன்று ஒரு சில அரசியல்வாதிகள் இருக்கின்றனர். ஆனால், அவர்களின் பின்புலத்தில் ஏதேனும் ஒரு பிசினஸ் இருக்கும். ஆனால், அசாத் முழு நேர அரசியல் தலைவராகவே வலம் வந்திருக்கின்றார். இந்த நிலையிலேயே மலைபோல பிரமாண்ட எண்ணிக்கையில் அவர் நம்ப முடியாத விலை உயர்ந்த கார்களை பயன்படுத்தி வந்திருக்கின்றார்.

More from DriveSpark

Article Published On: Monday, December 9, 2024, 23:30 [IST]
English summary
Bashar al assads downfall exposes lavish lifestyle amidst syrian economic hardship
மேலும்... #luxury car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+