நிசான் ஜூக் நிஸ்மோ பேட்மேன் காரை வென்றது யார்?
பேட்மேன் வரிசையில் உருவாக்கப்பட்டு பெரும் வெற்றி பெற்றுள்ள 'தி டார்க் நைட் ரைசஸ்' சினிமாவின் டிவிடி மற்றும் புளூரே வெளியீட்டுக்காக ஒரே ஒரு ஸ்பெஷல் எடிசன் ஜூக் நிஸ்மோ காரை நிசான் வடிவமைத்தது. கருப்பு நிற மேட் பினிஷிங்குடன், பேட்மேன் சினிமாவின் நினைவூட்டும் வகையிலான பிரத்யேகஅம்சங்களுடன் இந்த ஸ்பெஷல் எடிசன் கார் உருவாக்கப்பட்டது.
படத்தை தயாரித்த தனது பார்ட்னரான வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்துக்காக இந்த காரை வடிவமைத்து அசத்தியது நிசான். மேலும், இதற்காக, ஆன்லைனில் நடைபெற்ற போட்டியில் வெற்றிபெற்ற வேல்ஸ் பகுதியை சேர்ந்த ஆடம் வில்லியம் என்ற ரசிகருக்கு இந்த கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. நிசான் பேட்மேன் எடிசன் காரின் அம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

பிரபலத்துக்காக..
புதிய ஜூக் நிஸ்மோ மினி கிராஸ்ஓவர் காரை பிரபலப்படுத்தும் விதமாகவே ஒரே ஒரு பேட்மேன் ஸ்பெஷல் எடிசன் காரை நிசான் வடிவமைத்தது.

எஞ்சின்
இந்த காரில் 200 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

பெர்ஃபார்மென்ஸ்
ஃப்ரண்ட் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட இந்த கார் 7.8 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை எட்டிவிடும்.

மேட் ஃபினிஷிங்
ஸ்பெஷல் எடிசனாக உருவாக்கப்பட்டிருக்கும் நிஸ்மோ காரில் மேட் பினிஷிங் செய்யப்பட்டிருப்பதால் வெளிப்புறத்தில் கூடுதல் கவர்ச்சியை தருகிறது.

பேட்மேன் சின்னம்
உட்புறத்தில் பெடல்களில் பேட்மேன் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கிறது. இருக்கைகளின் ஹெட்ரெஸ்ட்டில் பேட்மேன் சின்னம் எம்ப்ராய்டிங் செய்யப்பட்டுள்ளது.

பேட்மேன் தரிசனம்
முகப்பு கிரில்லில் அலுமினிய தகட்டில் செய்யப்பட்ட பேட்மேன் சின்னம் பொருத்தப்பட்டுள்ளது.

ஸ்பெஷல் சஸ்பென்ஷன்
ஸ்பெஷல் எடிசனுக்காக கூடுதல் உறுதிவாய்ந்த சிறப்பு சஸ்பென்ஷனை பொருத்தியிருக்கிறது நிசான்

இரட்டை வண்ண அலாய் வீல்
கருப்பு மற்றும் சிவப்பு வண்ணங்கள் கொண்ட 18 இஞ்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஸ்பெஷல் எடிசன் பேட்ஜ்
முன்புறம் போன்றே பின்புறத்திலும் ஸ்பெஷல் எடிசன் கார் என்பதை தெரிவிக்கும் வகையில் நிஸ்மோ மற்றும் பேட்மேன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.

ஆன்டென்னா
மீன் துடுப்பு போன்ற ஆன்டென்னா.

மினி கிராஸ்ஓவர்
மினி கிராஸ்ஓவர் ரகத்தை சேர்ந்த நிசான் ஜூக் நிஸ்மோ ஸ்பெஷல் எடிசன் காரி்ன் அசத்தலான தோற்றம்.

பேட்மேன் கார்
பேட்மேன் கார் படங்கள்.

பேட்மேன் கார்
பேட்மேன் கார் படங்கள்.

பேட்மேன் கார்
பேட்மேன் கார் படங்கள்.

பேட்மேன் கார்
பேட்மேன் கார் படங்கள்.

பேட்மேன் கார்
பேட்மேன் கார் படங்கள்.


Click it and Unblock the Notifications








