பேட்டரிகளுக்கு ஆதார் கார்டு கட்டாயம்! மத்திய அரசின் புது ரூல்ஸ் வரப்போகுது!

இந்தியாவில் பேட்டரிகளுக்கான ஆதார் முறையை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியள்ளன. இந்த முறையில் பேட்டரியின் தயாரிப்பு ஆண்டு, பேட்டரியின் வயது, எப்படிப்பட்ட பேட்டரி, தயாரிப்பு முறை என தகவல்களை பயனாளர்கள் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் உண்மை தகவலை தெரிந்து கொள்ள முடியும் என தெரியவந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகன்ஙகளை விற்பனை கணிசமான அளவு அதிகமாக இருக்கிறது. வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது பேட்டரிகளை வாகனங்களில் பொருத்தி வரும் நிலையில் அதன் தயாரிப்பு தரம் குறித்த தகவல்கள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்காமல் இருக்கிறது. எலெக்ட்ரிக் வாகனங்களுக்க பேட்டரி தான் அதிக விலை என்பதால் மக்கள் அதை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கின்றனர்.

Battery Passport

இந்நிலையில் மத்திய அரசின் திங் டேங்க் அமைப்பான நிதி அயோக் -Niti Aayog தற்போது இந்த பிரச்சனைக்கான புதிய தீர்வுகளை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் தயாரிக்கப்படும் பேட்டரிகளுக்கு "பேட்டரி பாஸ்போர்ட்" என்ற முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் விற்பனையாகம் 2kWh அளவிற்கும் அதிகமான பேட்டரிகள் அனைத்திலும் இந்த பேட்டரி பாஸ்போர்ட் இடம் பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை வல்லுநர்கள் பேட்டரிக்கான ஆதார் என அழைக்கிறார்கள். இந்த தகவலை டைம்ஸ் ஆஃப் இந்தியா தளம் தனது பக்கத்தில் வெளியிட்டிருந்தது. அதன்படி இந்த பேட்டரி பாஸ்போர்ட்டில் ஒரு பேட்டரின் வாழ்நாள் முழுவதும் உள்ள விஷயங்களை டிஜிட்டலாக பதிவு செய்ய முடியுசெய்யபப்பட்டுள்ளது. அதன்படி பேட்டரி தயாரிக்கப்பட்ட இடம், அதன் பெர்ஃபார்மென்ஸ், அந்த பேட்டரி தயாரிக்கப்பட்ட முறை, அது மறுசுழற்சி முறைக்கு உட்படுத்தப்பட்டதா இல்லையா என்பது உள்ளிட்ட பல தகவல்கள் இதில் இடம் பெறும்.

Battery Passport

இந்த பேட்டரிகளில் ஒர க்யூ ஆர் கோடு இடம் பெறும். அதை ஸ்கேன் செய்பவர்களுக்க இந்த சதகவல்கள் எல்லாம் கிடைக்கும். இதனால் எளிதாக அதை வாங்குபவர்கள் அது குறித்த தகவல்களை நன்கு அறிந்து பின்னர் பயன்படுத்த முடியும். முக்கியமாக பேட்டரி ஸ்வாப்பிங்கில் பயன்படுத்தப்படும் பேட்டரிகளுக்கு இந்த தொழிற்நுட்பம் பெரிய அளவில் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் 2027ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இது அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியாக பேட்டரிக்கு ஆதார் கார் வழங்கும் முறை இந்தியாவில் முதன்முறையாக கொண்டு வரப்படவில்லை. இதற்கு முன்னர் ஐரோப்பாவில் இதே முறை தான் பின்பற்றப்படுகிறது. இந்தியாவில் இந்த முறை பேட்டரிக்கான பாதுகாப்பு, பேட்டரியின் தரம் மற்றும் ஏற்றுமதி உள்ளிட்ட விஷயங்களை முன்னிறுத்தி இந்த முறை கொண்டு வரப்பஐடுகிறது.

Battery Passport

இவி வாகனங்களில் பேட்டரி விலை தான் கிட்டத்தட்ட 40 சதவீதமாக இருப்பதால் மக்கள் பேட்டரி குறித்த தெளிவான புரிதல்களையும் தகவல்களையும் பெற்றிருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. அதை இந்த பேட்டரி பாஸ்போர்ட் உறுதி செய்யும் என எதிர்பார்க்கலாம். நிச்சயம் பேட்டரி பாதுகாப்பை சர்வதேச தரத்திற்கு கொண்டு செல்ல இது உதவும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பேட்டரி தொழிற்நுட்பம் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் பேட்டரியை பிரதான மூலப்பொருளாக வைத்து வாகனத்தை தயாரிக்கும் நிலையில் இந்த பேட்டரி பாஸ்போர்ட் தொழிற்நுட்பம் நிச்சயம் அனைவருக்கும் உதவிகரமாக இருக்கும் என எதிர்பார்கலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 8, 2025, 11:40 [IST]
English summary
Battery passport system for battery in evs in india safety traceability
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X