லிஃப்ட் கேட்பதுபோல் நடித்து வழக்கறிஞரிடம் வழிப்பறி... உஷார் மக்களே!

சென்னையில், லிஃப்ட் கேட்பதுபோல் நடித்து வழக்கறிஞரிடம் வழிப்பறி செய்த சிறுவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

By Saravana Rajan

கார், பைக்கில் லிஃப்ட் கேட்பவர்களிடம் எந்தளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் சென்னையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

லிஃப்ட் கேட்பதுபோல் நடித்து வழக்கறிஞரிடம் வழிப்பறி... உஷார் மக்களே!

தாம்பரத்தை சேர்ந்த சிவசுப்ரமணியம் என்ற வழக்கறிஞர் தனியார் நிறுவனத்தில் சட்ட ஆலோசகராக பணியாற்றி வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு மதுரவாயலில் இருந்து தாம்பரத்தில் உள்ள தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் திரும்பி உள்ளார்.

[குறிப்பு: மாதிரி படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன]

லிஃப்ட் கேட்பதுபோல் நடித்து வழக்கறிஞரிடம் வழிப்பறி... உஷார் மக்களே!

அப்போது சாலையில் தனியாக நின்ற சிறுவன் ஒருவன் லிஃப்ட் கேட்டுள்ளார். இரவு நேரத்தில் சிறுவன் தனியாக நிற்பதை பார்த்து இரக்கப்பட்ட சிவசுப்ரமணியம் பைக்கை நிறுத்தி இருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த சிறுவன் கண் இமைக்கும் நேரத்தில் சிவசுப்ரமணியனின் பைக் சாவியை எடுத்துள்ளான்.

லிஃப்ட் கேட்பதுபோல் நடித்து வழக்கறிஞரிடம் வழிப்பறி... உஷார் மக்களே!

இதனை சற்றும் எதிர்பாராத சிவசுப்ரமணியன் சுதாரிப்பதற்குள், சாலை ஓர புதரில் மறந்திருந்த மேலும் 9 சிறுவர்கள் சிவசுப்ரமணியத்தை சுற்றி வளைத்து சூழ்ந்து கொண்டனர். பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த தங்கச் சங்கிலி, மொபைல்போன், லேப்டாப் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி விட்டனர்.

லிஃப்ட் கேட்பதுபோல் நடித்து வழக்கறிஞரிடம் வழிப்பறி... உஷார் மக்களே!

இதனால், அதிர்ச்சியடைந்த வழக்கறிஞர் சிவசுப்ரமணியம் குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய சிறுவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

லிஃப்ட் கேட்பதுபோல் நடித்து வழக்கறிஞரிடம் வழிப்பறி... உஷார் மக்களே!

சாலையில் தனியாக நின்ற சிறுவனுக்கு உதவி செய்ய நினைத்த சிவசுப்ரமணியனுக்கு இழப்புடன் மன உளைச்சலுக்கும் ஆளாகி இருக்கிறார். எனவே, இரவில் பைக் அல்லது காரில் செல்லும்போது இதுபோன்ற லிஃப்ட் கேட்பவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

லிஃப்ட் கேட்பதுபோல் நடித்து வழக்கறிஞரிடம் வழிப்பறி... உஷார் மக்களே!

வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பியும், நூதன முறையிலும் இதுபோன்ற வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. எனவே, இரவு நேரத்தில் வாகனப் போக்குவரத்தும், ஆள் நடமாட்டமும் இல்லாத சாலைகளை தவிர்ப்பது நல்லது.

லிஃப்ட் கேட்பதுபோல் நடித்து வழக்கறிஞரிடம் வழிப்பறி... உஷார் மக்களே!

இதுபோன்ற சம்பவங்களை தவிர்ப்பதற்கு போலீசார் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வாகன ஓட்டிகளிடையே எழுந்துள்ளது. இருப்பினும், லிஃப்ட் கேட்பவர்களிடம் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

லிஃப்ட் கேட்பதுபோல் நடித்து வழக்கறிஞரிடம் வழிப்பறி... உஷார் மக்களே!

ஒருவரின் தோற்றத்தை வைத்து எடை போடக்கூடாது என்பதற்கு குற்றத்தூர்- தாம்பரம் நெடுஞ்சாலையில் பைக்கில் வந்தவரிடம் நடந்த வழிப்பறி சிறந்த உதாரணமாக கூற முடியும்.

[குறிப்பு: மாதிரி படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.]

Source: தி இந்து

டீசல் எஞ்சின் ரயில் உண்மையிலேயே ஓடுவது மின் மோட்டாரில்தான்... தெரியுமா உங்களுக்கு... ?!!

டீசல் எஞ்சின் ரயில் உண்மையிலேயே ஓடுவது மின் மோட்டாரில்தான்... தெரியுமா உங்களுக்கு... ?!!

டீசல் எஞ்சின் இணைக்கப்பட்ட ரயில்கள் உண்மையிலேயே மின் மோட்டாரின் உந்து சக்தியில்தான் ஓடுகின்றன. என்ன ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? ஆம், இதுகுறித்து சற்று விரிவாகவே பார்ப்போம்.

டீசல் எஞ்சின் ரயில் உண்மையிலேயே ஓடுவது மின் மோட்டாரில்தான்... தெரியுமா உங்களுக்கு... ?!!

முக்கிய வழித்தடங்களை தவிர்த்து, பெரும்பாலான வழித்தடங்களில் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட ரயில்கள்தான் இயக்கப்படுகின்றன. ஆனால், டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட ரயில்கள் உண்மையிலேயே டீசல் எஞ்சினில் ஓடுவதில்லை. மாறாக, டீசல் ரயில் எஞ்சினில் இருக்கும் மின் மோட்டார் துணையுடன்தான் இயங்குகின்றன.

டீசல் எஞ்சின் ரயில் உண்மையிலேயே ஓடுவது மின் மோட்டாரில்தான்... தெரியுமா உங்களுக்கு... ?!!

டீசல் ரயில் எஞ்சின்களில் சக்திவாய்ந்த மிகப்பெரிய ஜெனரேட்டர் கொடுக்கப்பட்டு இருக்கும். இந்த ஜெனரேட்டர்தான் உண்மையில் டீசல் எரிபொருளில் இயங்குகிறது.

டீசல் எஞ்சின் ரயில் உண்மையிலேயே ஓடுவது மின் மோட்டாரில்தான்... தெரியுமா உங்களுக்கு... ?!!

இந்த ஜெனரேட்டர் மூலமாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மூலமாக சக்கரங்களில் இருக்கும் ராட்சத மின் மோட்டார்கள் ரயில் சக்கரத்தை ஓடச் செய்கின்றன. இதனை டிராக்ஷன் மோட்டார் என்றும் குறிப்பிடுவர்.

டீசல் எஞ்சின் ரயில் உண்மையிலேயே ஓடுவது மின் மோட்டாரில்தான்... தெரியுமா உங்களுக்கு... ?!!

டீசலில் இயங்கும் ஜெனரேட்டர் மூலமாக உற்பத்தி செய்யப்படும் மாறு மின்சாரம் கன்வெர்ட்டர் கருவியின் மூலமாக நேர் மின்சாரமாக மாற்றப்பட்டு டிராக்ஷன் மோட்டார்கள் இயக்கப்படுகின்றன.

டீசல் எஞ்சின் ரயில் உண்மையிலேயே ஓடுவது மின் மோட்டாரில்தான்... தெரியுமா உங்களுக்கு... ?!!

சக்கரங்கள் சுழல்வதற்கு தேவையான டார்க் எனப்படும் முறுக்கு விசையை இந்த மின்மோட்டார்கள் வழங்குகின்றன. எனவே, டீசல் எஞ்சின் என்று குறிப்பிட்டாலும், இவற்றை முறையாக டீசல் எலக்ட்ரிக் என்று கூறுவதுதான் சரியான பதமாக சொல்ல முடியும்.

டீசல் எஞ்சின் ரயில் உண்மையிலேயே ஓடுவது மின் மோட்டாரில்தான்... தெரியுமா உங்களுக்கு... ?!!

டீசல் எஞ்சின்களில் 12 முதல் 16 சிலிண்டர்கள் கொண்ட ராட்சத எஞ்சின் பயன்படுத்தப்படுகின்றன. இந்த டீசல் எஞ்சின் மூலமாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் மூலமாக எஞ்சினின் சக்கரங்களுக்கு இடையிலான ஆக்சில்களில் தலா ஒரு மின் மோட்டார் வீதம் 6 மின்மோட்டார்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

டீசல் எஞ்சின் ரயில் உண்மையிலேயே ஓடுவது மின் மோட்டாரில்தான்... தெரியுமா உங்களுக்கு... ?!!

சில டீசல் எஞ்சின் ரயில்களில் 4 மின்மோட்டார்கள் பொருத்தப்பட்டு இருக்கும். ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த டீசல் எஞ்சின்களில் சக்கரங்கள் நேரடியாக டீசல் எஞ்சின் மூலமாகவே இயக்கப்பட்டன. இதனை டீசல் ஹைட்ராலிக்ஸ் என்று குறிப்பிட்டனர்.

டீசல் எஞ்சின் ரயில் உண்மையிலேயே ஓடுவது மின் மோட்டாரில்தான்... தெரியுமா உங்களுக்கு... ?!!

ஆனால், டீசல் கார் உள்ளிட்ட வாகனங்களில் இருப்பதுபோலவே, டிரானஸ்மிஷன் அமைப்பு மற்றும் கியர்பாக்ஸ் மூலமாக இயக்கப்பட்டன. இது மிகவும் சிக்கலானதாக இருந்ததுடன், பராமரிப்புக்கும் உகந்ததாக இல்லை. மேலும், பழுது ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம் இருந்தன.

டீசல் எஞ்சின் ரயில் உண்மையிலேயே ஓடுவது மின் மோட்டாரில்தான்... தெரியுமா உங்களுக்கு... ?!!

ஆனால், தற்போது பயன்பாட்டில் இருக்கும் டீசல் எலக்ட்ரிக் ரயில் எஞ்சின்களில் கியர்பாக்ஸ் அமைப்பு கிடையாது. ஆக்சில்களில் பொருத்தப்பட்டு இருக்கும் ராட்சத மின் மோட்டார்கள் மூலமாக சக்கரங்கள் நேரடியாக இயக்கப்படுகின்றன.

டீசல் எஞ்சின் ரயில் உண்மையிலேயே ஓடுவது மின் மோட்டாரில்தான்... தெரியுமா உங்களுக்கு... ?!!

இதனால், பராமரிப்பு மிகவும் குறைவாக இருப்பதுடன், மின் மோட்டார்களை பொருத்தியதால் அதிக டார்க் திறனையும் பெற முடிகிறது. இதனால், எஞ்சினின் இழுவைத் திறன் மிகச் சிறப்பாக இருக்கிறது.

டீசல் எஞ்சின் ரயில் உண்மையிலேயே ஓடுவது மின் மோட்டாரில்தான்... தெரியுமா உங்களுக்கு... ?!!

நீண்ட கால அடிப்படையில் டீசல் எஞ்சின்களுக்கான எரிபொருள், பராமரிப்பு செலவு போன்றவை அதிகமாக இருக்கிறது. எனினும், மின்சார ரயில் எஞ்சின்களை இயக்குவதற்கு தேவைப்படும் மின்மயமாக்கப்பட்ட பாதைக்கான கட்டமைப்பு செலவுகளை ஒப்பிடும்போது இது சிறந்ததாகவே இருக்கிறது.

இதனால், டீசல் ரயில் எஞ்சின் பயன்பாட்டு சிறுக சிறுக குறையும் வாய்ப்பு இருக்கிறது. அடுத்த தசாப்தத்தில் நீராவி ரயில் எஞ்சின் போன்றே, டீசல் ரயில் எஞ்சினும் அருங்காட்சியகங்களில் மட்டுமே பார்க்கும் காட்சிப் பொருளாக மாறும் நிலை உள்ளது.

Article Published On: Wednesday, February 28, 2018, 13:21 [IST]
English summary
Be Careful Giving Lift To Unknown Persons in Highway.
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+