டாடா நானோவும், ரிலையன்ஸ் ஜியோவும்... நாமதான் உஷாரா இருக்கணும்!

Written By:

அழைப்புகள் முற்றிலும் இலவசம், மிக குறைவான கட்டணத்தில் இன்டர்நெட் டேட்டா போன்ற அதிரடி அறிவிப்புகளால் ரிலையன்ஸ் ஜியோ நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சில ரிலையன்ஸ் ஸ்டோர்களில் நீண்ட க்யூ நிற்பதையும் காண முடிகிறது.

இந்த நிலையில், ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டுக்கு அலைமோதும் கூட்டத்தையும், முண்டியடிப்பதையும் பார்க்கும்போது, டாடா நானோ கார் அறிமுகம் செய்யப்பட்டபோது கொடுக்கப்பட்ட விளம்பரமும், பரபரப்பும்தான் நினைவில் வந்து நிழலாடுகிறது.

டாடா நானோவும், ரிலையன்ஸ் ஜியோவும்... நாமதான் உஷாரா இருக்கணும்... !!

ஒரு லட்ச ரூபாய் கார் என்றவுடன் பலரும் டாடா நானோவுக்கு தவம் கிடக்க துவங்கினர். சிலர் ஜியோ சிம் கார்டுக்கு முண்டியடிப்பதை போலவே, நானோ காரை அடித்துப் பிடித்து முன்பதிவு செய்தனர். எதற்காக தெரியுமா, இந்த காருக்கு நீண்ட காத்திருப்பு ஏற்படும், அப்போது ஏற்படும் டிமான்ட்டை வைத்து, கூடுதல் விலை வைத்து விற்றுவிடலாம் என்று பலர் கணக்கு போட்டு நானோ காரை வாங்கினர்.

டாடா நானோவும், ரிலையன்ஸ் ஜியோவும்... நாமதான் உஷாரா இருக்கணும்... !!

ஆனால், அடுத்த சில மாதங்களில் டாடா நானோ காருக்கான மதிப்பு என்னவானது என்பது உலகறிந்த விஷயம். ஒரு சில மாதங்கள் 10,000 என்ற விற்பனை இலக்கை தொட்ட நானோ கார் அடுத்தடுத்த மாதங்களில் கடும் சரிவை சந்தித்தது.

டாடா நானோவும், ரிலையன்ஸ் ஜியோவும்... நாமதான் உஷாரா இருக்கணும்... !!

தீப்பிடிக்கும் பிரச்னை, கவர்ச்சியற்ற டிசைன், லோடு ஆட்டோ போன்ற எக்சாஸ்ட் சப்தம் போன்றவை நானோவுக்கான மதிப்பை கடுமையாக குறைத்தது. அதேநேரம், நானோ காரின் விலையும் கிடுகிடுவென உயர்த்தப்பட்டது. முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு இது கூடுதல் அதிர்ச்சி தந்தது. நானோ காரின் விற்பனையை அதிகரிக்க டாடா மோட்டார்ஸ் கற்ற வித்தையையும் போட்டிக் காட்டியும் பலனில்லை. அடித்துப் பிடித்து வாங்கிய பலரும் பின்னர் ஏமாற்றம் அடைந்தனர்.

டாடா நானோவும், ரிலையன்ஸ் ஜியோவும்... நாமதான் உஷாரா இருக்கணும்... !!

சமீபத்தில் நானோ காரின் மாத விற்பனை மாதத்திற்கு 700 கார்கள் என்ற சராசரிக்கு வந்துவிட்டது. இந்த நிலையில், டாடா நானோ கார் போன்றே, தற்போது ரிலையன்ஸ் ஜியோவும் கவர்ச்சிகர விளம்பரம், அதிரடி திட்டங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

டாடா நானோவும், ரிலையன்ஸ் ஜியோவும்... நாமதான் உஷாரா இருக்கணும்... !!

இந்த சிம் கார்டை வாங்கும் பலர் கூடுதல் விலை வைத்து விற்றுவிடலாம் என்ற கணக்கில் வாங்கி குவிப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அவர்களின் எண்ணம் தப்புக் கணக்காகிவிடவும் வாய்ப்புள்ளது.

டாடா நானோவும், ரிலையன்ஸ் ஜியோவும்... நாமதான் உஷாரா இருக்கணும்... !!

ஏனெனில், ஜியோ சிம் கார்டு வாங்கிய பலர் அதனை ஆக்டிவேட் செய்வதற்கே படாதபாடு பட்டு வருகின்றனர். மேலும், வரும் 2017ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 100 மில்லியன் வாடிக்கையாளர்களை பெற்றுவிடுவோம் என்று ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி கூறியிருக்கிறார். அதாவது, மாதத்திற்கு சராசரியாக 8 மில்லியன் ஜியோ வாடிக்கையாளர்களை சேர்க்க ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளது.

டாடா நானோவும், ரிலையன்ஸ் ஜியோவும்... நாமதான் உஷாரா இருக்கணும்... !!

அந்தளவு வாடிக்கையாளர்களை கையாளும் அளவுக்கு டவர்கள் உள்ளிட்ட போதுமான கட்டமைப்பு வசதிகள் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருக்கிறதா என்றால் இல்லை. தொலைதொடர்பு சேவை வழங்கும் பிற நிறுவனங்களிடம், டவர்களை குத்தகைக்கு வழங்குமாறு ரிலையன்ஸ் விடுத்த கோரிக்கையையும் சந்தைப்போட்டியால் அந்த நிறுவனங்கள் நிராகரித்து வருகின்றன.

டாடா நானோவும், ரிலையன்ஸ் ஜியோவும்... நாமதான் உஷாரா இருக்கணும்... !!

எனவே, வாடிக்கையாளர்கள் குவிந்தாலும், ரிலையன்ஸ் நிறுவனத்திடம் போதிய டவர்களும், அதற்கான கட்டமைப்பு உபகரணங்களும் இருந்தால் மட்டுமே சிறந்த சேவையை வழங்கி வாடிக்கையாளரகளை தக்க வைக்க முடியும். இல்லையெனில், வேறு ஒரு நிறுவனத்துக்கு ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் செல்வதற்கு தயங்க மாட்டார்கள்.

டாடா நானோவும், ரிலையன்ஸ் ஜியோவும்... நாமதான் உஷாரா இருக்கணும்... !!

மற்றொரு புறம், மிக அதிகப்படியான முதலீட்டை ஜியோவில் செய்துள்ளது ரிலையன்ஸ். அதிக வாடிக்கையாளர்கள் மூலமாக எளிதாக வருவாயை பெற்றுவிடலாம் என்றாலும், சேவை தரம் சரியில்லை என்று வாடிக்கையாளர்கள் குறைந்தால் முதலீட்டை தக்க வைக்க, நிச்சயமாக கட்டணங்களை அதிரடியாக உயர்த்தும் வாய்ப்புள்ளதாகவும் சந்தை நிபுணர்கள் கருதுகின்றனர்.

 டாடா நானோவும், ரிலையன்ஸ் ஜியோவும்... நாமதான் உஷாரா இருக்கணும்... !!

எனினும், மொபைல்போன் என்பது பலருக்கும் எட்டாக்கனியாக இருந்த நேரத்தில், 500 ரூபாய்க்கு செல்போனை வழங்கி, மொபைல் உலகில் புரட்சியை ஏற்படுத்தியது ரிலையன்ஸ். அதனை மறுக்க இயலாது. ஆயினும், ஜியோ திட்டத்தின் கட்டணங்கள் குறித்து ரிலையன்ஸ் கூடுதல் விளக்கத்தை தந்தால் அது சிறப்பாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

டாடா நானோவும், ரிலையன்ஸ் ஜியோவும்... நாமதான் உஷாரா இருக்கணும்... !!

டிசம்பவர் வரை இலவசம் என்பது ஆறுதல். இது சிறப்பான திட்டம்தான் என்றாலும் நடைமுறையில் இதன் சேவை தரம் எவ்வாறு இருக்கும் என்று உறுதியாக கூற முடியாது. ஏனெனில், அழைப்புகள் இலவசம், குறைவான கட்டணத்தில் டேட்டா வழங்கினாலும், சேவை தரம் சிறப்பாக இருப்பதுதான் தொடர் வெற்றிக்கு வழிகோலும்.

டாடா நானோவும், ரிலையன்ஸ் ஜியோவும்... நாமதான் உஷாரா இருக்கணும்... !!

உலகின் மிகக் குறைந்த விலை காரான டாடா நானோவை போன்று, உலகின் மிக குறைந்த கட்டண தொலைதொடர்பு சேவையாக ரிலையன்ஸ் ஜியோ புகழப்படுகிறது.

டாடா நானோவும், ரிலையன்ஸ் ஜியோவும்... நாமதான் உஷாரா இருக்கணும்... !!

இரண்டுமே உலக அளவில் கவனத்தை ஈர்த்த திட்டங்களாக கூற முடியும். அதேநேரத்தில், ரிலையன்ஸ் ஜியோ மற்றொரு நானோவாகிவிடக் கூடாதே என்பதுதான் எமது விருப்பம்.

டாடா நானோவும், ரிலையன்ஸ் ஜியோவும்... நாமதான் உஷாரா இருக்கணும்... !!

டாடா நானோ திடடம் போன்று ஆகாமல், ஜியோவை வெற்றி பெற வைக்க ரிலையன்ஸ் முழு முயற்சிகளையும் எடுக்கும் என்று நம்புவோமாக... !!

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Read in Tamil: Be Careful While Buying Overhyped Products.
Please Wait while comments are loading...

Latest Photos