டிரைவ்-இன் தியேட்டர்களுக்கு மவுசு குறைந்து வருகிறதா?

நாம் நமது காரோடு சேர்ந்து படம் பார்க்கும் அனுபவத்தை டிரைவ்-இன் திரையரங்குகள் நமக்கு தருகின்றன. புதுவிதமான படம் பார்க்கும் அனுபவத்தை தரும் டிரைவ்-இன் தியேட்டர்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

டிரைவ் இன் தியேட்டர்கள் பல ஆண்டுகாலமாக இந்தியாவில் இயங்கி வந்தாலும், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சிவாஜி படத்தில் வந்தே பிறகே தமிழகம் முழுக்க டிரைவ்-இன் தியேட்டர்கள் அனைவருக்கு தெரிந்தன.

டிரைவ்-இன் தியேட்டர் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

இன்று ரூஃப் டாப், ஓப்பன் தியேட்டர் என திரையரங்கங்கள் பல்வேறு மாறுபாடுகளை கொண்டுயிருந்தாலும், டிரைவ்-இன் தியேட்டர்கள் தரக்கூடிய அனுபவத்தை வேறு எதுவும் தராது.

டிரைவ்-இன் தியேட்டர் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

சாதரணமாக நாம் திரையரங்களுக்கு சென்றால், படம் பார்ப்பதற்கு ஒரு கட்டணம், பார்க்கிங்கிற்கு ஒரு கட்டணம், பின் நொறுவகைகள், 3-டி படம் என்றால் கண்ணாடி என படம் பார்ப்பதை தாண்டி பல்வேறு வசதிகளுக்கு நாம் கட்டணங்களை செலுத்த வேண்டும்.

டிரைவ்-இன் தியேட்டர் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

ஆனால் டிரைவ்-இன் தியேட்டர்கள் மற்ற திரையரங்கங்களை விட சிறியளவில் காஸ்ட்லி என்றாலும், நாம் மட்டுமில்லாமல் நமது வண்டியையும் திரையரங்கு வரை கொண்டு சென்று, வேண்டுமானால் வாகனத்திற்குள் அமர்ந்தே படம் பார்க்கலாம்.

டிரைவ்-இன் தியேட்டர் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

இதற்கான கட்டணங்கள் அனைத்தும், படம் பார்ப்பதற்காக வாங்கப்படும் டிக்கெட்டிற்குள்ளே அடங்கிவிடும். நாம் நமது காரை எடுத்துக்கொண்டு திரையரங்குகிற்கு சென்று உற்சாகமாக படத்தை காணலாம்.

டிரைவ்-இன் தியேட்டர் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

வெளிபுறத்தில் திரையரங்கம் அமைந்திருப்பதனால், காரை நிறுத்துவதிலோ, வாகனப்புகை வெளியேறுவதிலோ எந்த சிரமும் ஏற்படாது. டிரைவ்-இன் திரையரங்கங்களில் படம் பார்ப்பதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயமும் ஒன்று இருக்கிறது.

டிரைவ்-இன் தியேட்டர் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

டிரைவ்-இன் திரையரங்களில் படம் பார்க்கும்போது காரில் ஏசிகளை பயன்படுத்த முடியாது, காரணம் திரையரங்களில் ஒலிபெருக்கிகள் வெளியில் தான் அமைந்திருக்கும், ஏ.சிக்காக காரின் கண்ணாடிகள் பூட்டியிருக்கும்போது சத்தம் உள்ளே வராது. அதனால் காரின் கண்ணாடிகளை நாம் பயன்படுத்தாமல் இருந்தாலும், நாம் நமது வாகனத்தில் அமர்ந்தவாரே உற்சாகமாக படத்தை காணலாம்.

டிரைவ்-இன் தியேட்டர் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

சென்னையில் அமைந்திருக்ககூடிய பிராத்தானா டிரைவ் இன் திரையரங்கத்தின் திரை 4500 சதுர அடி. அதனால் பெரிய கார்கள், எஸ்.யூ.வி கார்கள் மற்றும் ஹேட்ச்பேக் மாடல் கார் என எதில் நாம் அமர்ந்து படம் பார்த்தாலும் திரை நமக்கு துல்லியமாக தெரியும்.

டிரைவ்-இன் தியேட்டர் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

வெளிநாடுகளில் இருக்கக்கூடிய டிரைவ்-இன் தியேட்டர்களில், காருக்குள் அமர்ந்து கண்ணாடிகல் பூட்டியிருந்தாலும், சத்தத்தை நாம் துல்லியமாக கேட்டு அனுபவிக்கலாம்.

டிரைவ்-இன் தியேட்டர் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

திரையரங்கத்தின் ஆடியோ சிஸ்டத்துடன் காரின் ப்ளூடூத்தை நாம் இணைத்துவிட்டால் போதும் காரின் கதவுகள் பூட்டப்பட்டு இருந்தாலும், உள்ளே இருந்தாவாறே படத்தின் ஒலியை கேட்கலாம். வசதியிருந்தால் ஹேட்ஃபோனும் இணைத்துக்கொள்ளலாம்.

டிரைவ்-இன் தியேட்டர்களில் படம் பார்க்கவேண்டும் என்ற காரணத்தினாலே அமெரிக்க போன்ற நாடுகளில் ப்ளூடூத் தொழில்நுட்பம் கொண்ட கார்களை மக்கள் அதிகளவில் வாங்கும் வழக்கமும் உள்ளது.

டிரைவ்-இன் தியேட்டர் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

சென்னையில் இருக்கக்கூடிய பிரத்தானா டிரைவ்-இன் திரையரங்கத்தில் ஆடியோ சிஸ்டம் சிறப்பாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். அதனால் தமிழகத்திற்கு கவலை இல்லை.

டிரைவ்-இன் தியேட்டர் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

வெளிநாடுகளில் இருக்ககூடிய திரையரங்கங்களில் முப்பரிமாணத்தில் உருவாகும் படங்களையும் நாம் டிரைவ்-இன் திரையரங்கத்தில் பார்க்கலாம். ஆனால் இந்தியாவில் இருக்கும் திரையரங்கங்களில் இந்த வசதிகள் குறைவாகவே உள்ளன.

டிரைவ்-இன் தியேட்டர் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

தற்போது டிரைவ்-இன் தியேட்டர்களுக்கான வரவேற்பு குறைந்து வருவதாக கருத்து பேசப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் ஓப்பன் தியேட்டர்கள் என்று கூற்ப்படுகிறது.

பல ஹோட்டல்கள், ரெஸ்டாரண்டுகளில் இன்று ஓப்பன் திரையரங்கள் அதிகரித்து விட்டன. குறிப்பாக சில வணிக வளாகங்களிலும் ஓப்பன் தியேட்டர்கள் வந்துவிட்டன.

டிரைவ்-இன் தியேட்டர் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

ஆனால் ஒப்பன் தியேட்டர்கள் மற்றும் சாதரண திரையாங்குகளுக்கு பெரிய வித்தியாசமில்லை. ஆனால் நாம் நமது வண்டியாடு ஏற்றவாறான வசதிகளை அமைந்துக்கொண்டு டிரைவ்-இன் தியேட்டர்கள் படம் பார்க்கும் அனுபவத்தை வேறு எந்த திரையரங்கங்களும் தாரது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Drive in theatres are giving new exprience of watching th movies in open space. In today drive theatres are not getting public attention
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X