காருக்கு தேவையான 5 முக்கிய இன்ஸ்யூரன்ஸ் ஆட்- ஆன் திட்டங்கள்!!

Posted By:

இப்போது இருக்கும் கால சூழ்நிலையில் கார் வைத்திருப்பதும், அதில் பயணம் செய்வதும் ஆபத்துக்கள் நிறைந்ததாக மாறி வருகின்றன. எந்தநேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்கிற இன்றைய காலக்கட்டத்தில் சிறப்பான கார் இன்ஸ்யூரன்ஸ் திட்டங்களை தேர்வு செய்வது அவசியம். செய்தியின் தொடர்ச்சியை படிவத்திற்கு கீழே தொடர்ந்து படிக்கலாம்.

இந்த நிலையில், அடிப்படை கார் இன்ஸ்யூரன்ஸ் திட்டத்துடன் கூடுதலாக பயன்களை தரும் வகையில், சேர்த்துக்கொள்ளக்கூடிய சிறப்புத் திட்டங்கள் (Add On) திட்டங்களையும் சேர்த்து கார் இன்ஸ்யூரன்ஸ் தேர்வு செய்வது அவசியம். இதில், 5 முக்கிய கார் இன்ஸ்யூரன்ஸ் ஆட் -ஆன் திட்டங்களை கீழே உள்ள ஸ்லைடரில் காணலாம்.

காருக்கு தேவையான 5 முக்கிய கார் இன்ஸ்யூரன்ஸ் திட்டங்களை ஸ்லைடரில் காணலாம்.

05.எஞ்சின் பாதுகாப்பு

05.எஞ்சின் பாதுகாப்பு

அடிப்படை கார் இன்ஸ்யூரன்ஸில் கார் எஞ்சினில் ஏற்படும் பாதிப்புகளுக்கு எந்தவொரு பாதுகாப்பு விஷயங்களும் இருக்காது. எனவே, எஞ்சின் சேதாரங்களுக்கு பலன் தரும் வகையிலான எஞ்சின் புரொடெக்ட் இன்ஸ்யூரன்ஸ் திட்டத்தை கூடுதலாக பெறுவது நல்லது. குறிப்பாக, 10 லட்சத்திற்கும் அதிகமான கார்களுக்கு இந்த கூடுதல் ஆட் ஆன் திட்டம் ஆபத்து காலங்களில் பெரிதும் உதவும். அடிப்படை இன்ஸ்யூரன்ஸ் திட்டத்தின் கட்டணத்தில் இந்த ஆட் ஆன் வெறும் 10 சதவீதத்திற்கும் குறைவான கட்டணத்தை கொண்டதாக இருக்கும்.

04. பம்பர் டூ பம்பர்

04. பம்பர் டூ பம்பர்

சாதாரண அடிப்படை இன்ஸ்யூரன்ஸ் திட்டத்தில் சேதார கணக்கீட்டு தொகையில் குறிப்பிட்ட தொகையை உரிமையாளர் செலுத்த வேண்டியிருக்கும். பிளாஸ்டிக் பாகங்கள், டயர்களுக்கு 50 சதவீதம் வரையிலும், பைபர் கிளாஸ் பாகங்களுக்கு அதிகபட்சமாக 70 சதவீதம் வரையிலும் மட்டுமே பெற முடியும். ஆனால், ஸீரோ டெப்ரிசியேஷன் அல்லது பம்பர் டூ பம்பர் என்ற இந்த ஆட் ஆன் திட்டம் மூலமாக முழுமையாக இழப்பீடு பெற முடியும். புதிய கார்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை இந்த ஆட் ஆன் திட்டத்தை இன்ஸ்யூரன்ஸ் நிறுவனங்கள் வழங்குகின்றன. சாதாரண இன்ஸ்யூரன்ஸ் கட்டத்தில் கூடுதலாக 10 முதல் 15 சதவீத கட்டணத்தை கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும்.

03. சாலை அவசர உதவி திட்டம்

03. சாலை அவசர உதவி திட்டம்

நடுவழியில் கார் பழுது ஏற்பட்டு நின்றுவிட்டாலோ அல்லது விபத்தில் சிக்கிவிட்டாலோ 24 மணிநேர அவசர உதவியை வழங்கும் ஆட் ஆன் திட்டத்தை சில இன்ஸ்யூரன்ஸ் நிறுவனங்கள் வழங்குகின்றன. இதற்கு ரூ.500 வரையில் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

 02. இன்வாய் கவர்

02. இன்வாய் கவர்

திருட்டு பயம் அதிகமுள்ள பகுதிகளுக்கு இந்த ஆட் ஆன் திட்டம் மிகவும் அவசியமானது. பொதுவாக எக்ஸ்ஷோரூம் விலையில் 5 சதவீதத்திற்கும் குறைவான தொகைக்குத்தான் இன்ஸ்யூரன்ஸ் திட்டம் கொடுக்கப்படுகிறது. ஆனால், இந்த ஆட் ஆன் திட்டத்தில் காரின் ஆன்ரோடு விலைக்கு இழப்பீடு பெற வழிவகை கிடைக்கும்.

01.நோ க்ளெம் போனஸ்

01.நோ க்ளெம் போனஸ்

இழப்பீடு கோராமல் இருப்பவர்களுக்கு இன்ஸ்யூரன்ஸை புதுப்பிக்கும்போது கட்டணத்தில் கழிவு வழங்கப்படுகிறது. இதனை நோ க்ளெய்ம் போனஸ் என்கின்றனர். ஒருவேளை, இழப்பீடு கோரியவர்களுக்கு இந்த நோ க்ளெயம் போனஸ் எனப்படும் கழிவு வழங்கப்படாது. ஆனால், இந்த என்சிபி ஆட் ஆன் திட்டத்தை இன்ஸ்யூரன்ஸ் திட்டத்துடன் சேர்த்து வாங்கினால், ஆண்டில் ஒருமுறை இழப்பீடு கோரியிருந்தால் கூட அடுத்த ஆண்டு புதுப்பிக்கும்போது நோ க்ளெய்ம் போனசை பெற முடியும். அதில் எவ்வித இடையூறும் இருக்காது. இது கார் இன்ஸ்யூரன்ஸ் தொகையில் 15 சதவீதம் கூடுதல் கட்டணம் செலுத்தும் வகையில் வழங்கப்படுகிறது.

 
English summary
Add ons on car insurance policies are basically optional additional coverage you pay for in addition to the basic policy per your individual requirements. Here's a list of 5 important add ons that we help you understand. These can make your coverage more robust and driving your car a hassle free experience.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark