காற்று மாசை தடுக்க பெய்ஜிங்கில் 180,000 வாகனங்களுக்கு சீன அரசாங்கம் திடீர் தடை..!

Written By:

அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசால், சீனாவின் தலைநகரமான பெய்ஜிங்கில் இந்தாண்டு ஜனவரி தொடங்கி ஏப்ரல் வரையில் 180,000 பழைய வாகனங்களுக்கு தடை விதித்துள்ளது சீன அரசு.

மாசு குறைப்பாட்டை தடுக்க சீனாவில் 180,000 வாகனங்களுக்கு தடை

பெய்ஜிங் நகரத்தை பாதுகாக்க சீன அரசால் 2015ம் ஆண்டில் நியமிக்கப்பட்ட குழுவினரால் இந்த ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாசு குறைப்பாட்டை தடுக்க சீனாவில் 180,000 வாகனங்களுக்கு தடை

பெய்ஜிங் நகரத்தை காக்க சீன அரசு 2015ம் ஆண்டில் ஒரு தனிக்குழுவை அமைத்திருந்தாலும், வாகனங்களால் ஏற்படும் மாசு குறைப்பாட்டை தடுக்க சீன அரசு 2013ம் ஆண்டிலேயே வேலையை தொடங்கிவிட்டது.

மாசு குறைப்பாட்டை தடுக்க சீனாவில் 180,000 வாகனங்களுக்கு தடை

2013ம் ஆண்டிலிருந்து 2017 ஏப்ரல் மாதம் வரை பெய்ஜிங்கில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக கூறி 3 லட்சம் எண்ணிக்கையிலான அனைத்து ரக வாகனங்களை சீன அரசு தடை செய்தது.

மாசு குறைப்பாட்டை தடுக்க சீனாவில் 180,000 வாகனங்களுக்கு தடை

சமீபத்திய காலங்களில் அபாயகரமான அளவையும் தாண்டி, பெய்ஜிங்கின் சுற்றுச்சூழல் மாசு அடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாசு குறைப்பாட்டை தடுக்க சீனாவில் 180,000 வாகனங்களுக்கு தடை

டிசம்பர் மாதத்தில் பெய்ஜிங் முழுவதும் ‘ரெட் அலர்ட்' கொடுக்கப்பட்டு, பள்ளிகளுக்கு விடுமுறையை அறிவித்தது சீன அரசு.

மாசு குறைப்பாட்டை தடுக்க சீனாவில் 180,000 வாகனங்களுக்கு தடை

5 நாட்களுக்கு சாலை மற்றும் மாற்று வழிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்க தடை, பெய்ஜிங் வாசிகள் வீட்டை விட்டு வெளிவரக்கூடாது என கெடுபிடியான உத்தரவுகளை பிறப்பிக்கும் அளிவிற்கு பெய்ஜிங்கின் சுற்றுச்சூழல் அதல பாதளத்திற்கு சென்று விட்டது.

மாசு குறைப்பாட்டை தடுக்க சீனாவில் 180,000 வாகனங்களுக்கு தடை

உலகின் மிக பரபரப்பான நகரங்களில் ஒன்றான பெய்ஜிங்கில் சுற்றுச்சூழலில் மாசு ஏற்பட காரணமாகயிருப்பது வாகனங்களால் உருவாகும் மாசு தான் என சீனாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை அமைச்சர் சென் ஜின்னிங் தெரிவித்துள்ளார்.

மாசு குறைப்பாட்டை தடுக்க சீனாவில் 180,000 வாகனங்களுக்கு தடை

பெய்ஜிங் நகரில் உருவாகும் சுற்றுசூழல் குறைபாட்டில் 31 சதவீத அளவிலான பங்கை வாகனங்களினால் உருவாகும் புகை ஏற்படுத்துவதாக சென் ஜின்னிங் தெரிவித்துள்ளார்.

மாசு குறைப்பாட்டை தடுக்க சீனாவில் 180,000 வாகனங்களுக்கு தடை

பெய்ஜிங் நகரத்தில் நைட்ரஜன் ஆக்சைடு நச்சு காற்றின் வெளியேற்றம் அதிகமாக இருப்பதாகவும், அதனாலேயே தூசுப் புகை பெய்ஜிங் முழுக்க பரவி வருவதாகவும் அந்நகரத்தின் நகராட்சி சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

மாசு குறைப்பாட்டை தடுக்க சீனாவில் 180,000 வாகனங்களுக்கு தடை

மனிதர்கள் பெய்ஜிங்கில் தூசுக்களை சுவாசிக்கும் அளவு ஒரு கன மீட்டருக்கு 95 மைக்ரோகிராம்கள் அதிகரித்துள்ளது. இதன்மூலம் 69.6 சதவீதத்திலான காற்று மாசடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மாசு குறைப்பாட்டை தடுக்க சீனாவில் 180,000 வாகனங்களுக்கு தடை

காற்று மாசுகுறைப்பாட்டை குறைக்கும் அளவில் சீனா சுகாதாரம் சார்ந்த செயல்பாடுகளை முறைப்படுத்தவேண்டும் என்பது உலக சுகாதார மையத்தில் அறிவுரையாக உள்ளது.

மாசு குறைப்பாட்டை தடுக்க சீனாவில் 180,000 வாகனங்களுக்கு தடை

இதை ஏற்றுக்கொண்டு பெய்ஜிங்கில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு 2013-2017 வான் மாசுபாடுகள் களையப்படும் என சீனா உறுதியளித்துள்ளது.

மாசு குறைப்பாட்டை தடுக்க சீனாவில் 180,000 வாகனங்களுக்கு தடை

இதன்மூலம் இந்தாண்டின் இறுதிக்குள் பெய்ஜிங் நகரத்தை சுற்றியுள்ள காற்று மாசுவில் 69.6 மைக்ரோ கிராம் அளவிலிருந்து 60 மைக்ரோ கிராமாக குறைக்கப்பதற்கான நடவடிக்கைகளை சீன அரசாங்கம் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Traffic responsible for 31 percent of Beijing's total particulate matter China minister says. Check for the detials...
Story first published: Friday, May 5, 2017, 17:58 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark