அடுத்த தலைமுறைக்கான ஹெலிகாப்டரை அறிமுகம் செய்தது பெல்

தற்போது இருக்கக்கூடிய தொழில்நுட்பங்களுக்கு மாற்றாக, விமானியே இருந்தாலும் செயற்கை அறிவுடன் இயங்கும் ஹெலிகாப்டரை அறிமுகப்படுத்தியுள்ளது பிரபல பெல் நிறுவனம்.

By Azhagar

தரையில் ஓடும் கார், பைக்குகளுக்கு மட்டுமில்லாமல், வானத்தில் பறக்கும் வான் ஊர்திகளுக்கும் கண்காட்சிகள் நடத்தப்படுவதுண்டு. அமெரிக்காவின் டெல்லாஸ் பகுதியில் நடைபெற்ற இந்தாண்டிற்கான ஹெலி-எக்ஸ்போவில், வான் ஊர்திகள் உற்பத்தியில் உலகின் முன்னணி நிறுவனமாக உள்ள பெல் ஹெலிகாப்டர் கம்பெனி, அடுத்த தலைமுறைக்கான ஹெலிகாப்டரின் வடிமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

செயற்கை நுண்ணறிவு திறனுடன் இயங்கும் ஹெலிகாப்டர்

இதுவரை தனது புதிய படைப்புகளை நேரடியாகவே அறிமுகப்படுத்தி வந்த பெல் ஹெலிகாஃப்டரஸ், தயாரிப்பு நிலையில் கூட இல்லாத ஒரு புதிய படைப்பின் வடிவமைப்பை வெளியிடுவது இதுவே முதல்முறை. இதனாலேயே FCX-001 ஹெலிகாப்டருக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உலகளவில் உருவாகியுள்ளது.

செயற்கை நுண்ணறிவு திறனுடன் இயங்கும் ஹெலிகாப்டர்

வான் ஊர்திகளின் அடுத்த தலைமுறையாக வெளியிடப்பட்டுள்ள FCX-001 ஹெலிகாப்ட்டரின் வடிவமைப்பு கூட மிகவும் உயர்தரமாக உள்ளது. ஹெலிகாப்டரின் கட்டமைப்பு அனைத்தும் நிலையான பொருளைக் கொண்டு உருவாக்கப்படவுள்ளது, அதிக பவரை வழங்கும் ஹைபிரிட் மோட்டர் அமைப்பு பொருத்தப்படவுள்ளது.

செயற்கை நுண்ணறிவு திறனுடன் இயங்கும் ஹெலிகாப்டர்

அதேபோல் ஆபத்துகாலத்தில் விமானிக்கு சரிநிகராக இயங்கும் செயற்கை நுண்ணறிவுக் கொண்ட இணை பைலட் மற்றும் காலசூழலுக்கு ஏற்றவாறு இயங்கும் ரோட்டார் பிலேட்ஸ் ஆகியவை இந்த ஹெலிகாப்டரின் முக்கிய மேம்படுத்தப்பட்ட அம்சங்கள்.

செயற்கை நுண்ணறிவு திறனுடன் இயங்கும் ஹெலிகாப்டர்

FCX-001 ஹெலிகாப்டரை குறித்து பேசிய பெல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மிச் சின்டர் "வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை எங்களது பொருட்களில் பயன்படுத்தவதை பற்றி ஆராய ஒரு நிபுணர் குழுவை அமைத்தோம். அவர்களின் அதீத ஆராய்ச்சியில் உருவானது தான் FCX-001 ஹெலிகாப்டர்" என்று கூறினார்.

செயற்கை நுண்ணறிவு திறனுடன் இயங்கும் ஹெலிகாப்டர்

பெல் நிறுவனத்தின் நிபுணர் குழு FCX-001 ஹெலிகாப்டருக்கான செயல்பாடுகளை காட்சிப்பதிவுகளாகவும், திட்டவரையரையாகவும் தயாரித்து வைத்திருக்கின்றனர். அதனால் ஹெலிகாப்டரின் செயல்திறன் குறித்த அத்தனை தகவல்களும் ஏற்கனவே பெல் நிறுவனம் அறிந்துக்கொண்டுள்ளது. இனி திட்டத்தை உருவாக்குவதே பாக்கி.

செயற்கை நுண்ணறிவு திறனுடன் இயங்கும் ஹெலிகாப்டர்

FCX-001 ஹெலிகாப்டரின் உள் மற்றும் வெளி கட்டமைப்புகள் அனைத்திலும் புதுமையும், மாற்றுத்தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக வால் பகுதியில் ஆண்டி-டார்க் அமைப்பு என சொல்லப்படும் திருகுவிசை அமைக்கப்படுகிறது. இது சத்தம் அதிகரிக்காமலும், செயல்திறனில் குறைப்பாடு இல்லாமலும் பாதுகாக்கும்.

செயற்கை நுண்ணறிவு திறனுடன் இயங்கும் ஹெலிகாப்டர்

திருகுவிசைக்கான செயல்பாடுகளில் எந்தவிதமான இடையூறு ஏற்படாதவாறு hybrid propulsion அமைப்பு பாதுகாக்கும். இது மேம்பட்ட வெப்ப இயந்திர கருக்களை (thermal engine cores) சரியான விகதத்தில் மின் மோட்டார்களுக்கு செலுத்தும், அதற்கு பிறகு உருவாகும் பவர் திருகுவிசை அமைப்பில் உருவாகி ஹெலிகாப்டரை பாதுகாப்பாகவும், கட்டுபாடோடும் இயங்க எளிமையாக வழிவகை செய்யும்.

செயற்கை நுண்ணறிவு திறனுடன் இயங்கும் ஹெலிகாப்டர்

காக்பிட்டில் விமானிக்காக ஒரேஒரு இருக்கை மட்டுமே உள்ளது. அந்த இருக்கை செயற்கை நுண்ணறிவுவோடு செயல்படக்கூடிய கணினி உடன் இணைக்கப்பட்டு இருக்கும். அந்த கணினி ஹெலிகாப்டரில் இணை விமானியாகவோ அல்லது பொறியாளராகவோ பயணத்தின் போது செயல்படும்.

செயற்கை நுண்ணறிவு திறனுடன் இயங்கும் ஹெலிகாப்டர்

காலங்காலமாக ஹெலிகாப்டர்களின் பயன்படுத்தி வரும் Multi Function Displayவிற்கு மாற்றாக ஒரு வான் ஊர்தியே தன்னை விமானியாக செயல்படுத்திக்கொள்ளும் வாய்ப்பை தருகிறது. இதனால் ஆபத்துக்காலத்தில் விமானியின் வேலை சற்று குறைகிறது. செயற்கையான இந்த நுண்ணறிவு திறனின் செயல்பாடுகளை பொருத்து, விமானியின்றி தானாக இயங்கும் ஹாலிகாப்டர்கள் உருவாக்கப்படும் என பெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு திறனுடன் இயங்கும் ஹெலிகாப்டர்

பயணிகள் உட்காரும் பகுதியில் குறிப்பிடும்படியான அம்சங்கள் உள்ளன. பயணிகள் கானொளி காட்சிகளை பயணத்தின் போதே மேற்கொள்ளவும், உணர்வுகளுக்கு ஏற்றவாறு விளக்கு அமைப்புகளை மாற்றவும் செய்யலாம். இதற்கும் ஹெலிகாப்டரில் உள்ள செயற்கை நுண்ணறிவே வழிவகை செய்கிறது. மேலும் பயணிகளுக்காக மட்டுமில்லாம்ல் சரக்குகளை கூட இதில் ஏற்றலாம், அதற்கு பயணிகளுக்கான இருக்கைகளை நீக்கும் வசிதியும் இடம்பெற்றுள்ளது.

செயற்கை நுண்ணறிவு திறனுடன் இயங்கும் ஹெலிகாப்டர்

வான் ஊர்தி உற்பத்தியில் முன்னோடியாக உள்ள பெல் ஹெலிகாப்டர் நிறுவனம் FCX-001 ஹெலிகாப்டருக்கான வடிவமைப்புகளை அறிமுகப்படுத்தியதன் மூலம், ஆட்டோமொபைல் உற்பத்தியில் தன்னை மீண்டும் ஒரு முன்னோடியாக நிரூபித்துள்ளது. FCX-001 ஹெலிகாப்டரில் மேற்கூறிய தொழில்நுட்பங்கள் மட்டுமில்லாமல், உற்பத்தியின் போது இன்னும் பல தொழில்நுட்பங்களை பெல் ஹெலிகாப்டர் நிறுவனம் உலகிற்கு அறிவிக்கவுள்ளது

பென்ட்லி ஃபைலியிங் ஸ்பெர் காரின் புகைப்பட தொகுப்புகளை கீழே பாருங்கள்

Most Read Articles
English summary
Bell Helicopter, a Textron Inc. (NYSE: TXT) company, unveiled today its vision for the future of rotorcraft – the FCX-001
Story first published: Tuesday, March 14, 2017, 15:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X