வந்தே பாரத் ரயில் எல்லாம் வேஸ்ட்! டிரைவரே இல்லாமல் ஓடும் இந்த மெட்ரோ ரயிலை தெரியுமா?
இந்தியாவின் முதல் டிரைவர் அல்லாத மெட்ரோ ரயில் சேவை விரைவில் பெங்களூருவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இதற்கான ரயில் பெட்டிகள் எல்லாம் தயாரிக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளன. இந்த ரயில் பெட்டிகள் எல்லாம் முற்றிலுமாக இந்தியாவை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் நிறுவனம் தான் இந்த ரயில் பெட்டிகளை தயாரிக்கிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் நிறுவனம் இந்தியாவில் ரயில் மற்றும் மெட்ரோ ரயில் பெட்டிகளை தயாரிக்கும் முன்னணி நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த சனிக்கிழமை டிரைவர் இல்லாமல் இயங்கும் மெட்ரோ ரயில் செட்டுகளை தயாரிக்கும் புரோட்டோடைப்பை உருவாக்கியுள்ளது. இந்த ரயில்கள் எல்லாம் பெங்களூரு மெட்ரோ ரயிலுக்காக தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளன.

பெங்களூரு மெட்ரோ ரயில், பாதை 2 மற்றும் பாதை 6 ஆகிய பகுதிகளில் இந்த டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை என்பது பயன்பாட்டிற்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ரயில் பெட்டிகளை தயாரிக்கும் ஆர்டரை பிஇஎம்எல் நிறுவனம் பெற்றுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 53 ரயில் பெட்டிகளை தயாரிப்பதற்கான ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ரூபாய் 3177 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியை வைத்து அந்நிறுவனம் இந்த ரயிலுக்கான வடிவமைப்பு தயாரிப்பு அதை முறையாக டெலிவரி செய்வது ரயிலை பயன்பாட்டுக்கு கொண்டு வருவது அதை சோதனை செய்வது உள்ளிட்ட பல்வேறு விதமான பணிகளை செய்ய வேண்டும். இது மட்டுமல்லாமல் அடுத்த 15 ஆண்டுகளுக்கு இந்த ரயில்களுக்கான பராமரிப்பையும் அந்நிறுவனம் தான் செய்ய வேண்டும்.

பெங்களூர் மெட்ரோ ரயில் திட்டம் 2, 2ஏ, 2பி ஆகிய திட்டத்தின் கீழ் இந்த ரயில் பெட்டிகள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் எல்லாம் நடந்து வருகின்றன. இந்த டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் மொத்த 6 பெட்டிகளை கொண்ட ரயிலாக உருவாக்கப்பட இருக்கிறது. முற்றிலுமாக இந்தியாவிலேயே இந்த ரயில் பெட்டியை வடிவமைத்து தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த டிரைவர் இல்லாத ரயில் பெட்டியில் வடிவமைப்பு அதிக பலனைத் தாங்கும் ஸ்டீல் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இது நீடித்த உழைப்பையும், அதிக பாதுகாப்பு மற்றும் பயணிகள் வசதியையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரயில் பெட்டிகளில் ரூஃப் பகுதியில் இரண்டு ஏசிகள் பொருத்தப்பட்டுள்ளன. இது பயணிகளின் வசதிக்காக வழங்கப்பட்டுள்ள அம்சமாக இருக்கிறது.
மேலும் இந்த ரயில் பெட்டிகளில் ஐபி அடிப்படையிலான பயணிகள் அறிவிப்பு சிஸ்டம், பயணிகள் தகவல் சிஸ்டம் மற்றும் ரயில் பெட்டி கண்காணிப்பு சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பயணிகளுக்கு அடுத்த ஸ்டேஷன் என்ன? தற்போது எந்த இடத்தில் ரயிலில் வந்து கொண்டிருக்கிறது. எங்கு சென்று கொண்டிருக்கிறது என்ற அனைத்து தகவல்களையும் ரயிலுக்குள் இருந்தே கவனித்துக் கொள்ளும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.
பயணிகளின் பாதுகாப்புக்காக முக்கியமாக இந்த ரயிலில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகமாக வழங்கப்பட்டுள்ளன. முக்கியமாக இந்த ரயிலில் பெங்களூரு பெங்களூருவில் இதுவரை இல்லாத வகையில் ரயில்வே பிளாட்பாரத்தில் கதவுகள் பொருத்தப்பட்டுள்ளது. ரயில் ரயில்வே டிராக்கில் வந்து நிற்கும்போது பிளாட்ஃபார்மில் இருக்கும் கதவுகளுக்கும், ரயில் பெட்டியில் இருக்கும் கதவுகளுக்கும், ஒருங்கிணைப்பு ஏற்படுத்தும் வகையில் சிக்ரனேஷன் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் ரயில் ஏறுவதும், இறங்குவதும் பிரச்சனை இல்லாமல் இருக்கும்.
இந்த டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் பயன்பாட்டிற்கு வந்தால் இந்தியா மெட்ரோ ரயில் சேவையில் அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டிரைவர் இல்லாத ரயில் சேவை மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாடுகளில் இப்படியான சேவைகள் ஏற்கனவே பயன்பாட்டிற்கு வந்துவிட்டாலும் இந்தியாவில் இப்படியான ரயில் சேவை பயன்பாட்டிற்கு வந்தால் நிச்சயம் இது மிகப் பெரிய அளவில் வரவேற்பு பெரும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டிரைவர் இல்லாத மெட்ரோ சேவை என்பது பலரது பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்த சேவை வந்தால் இந்தியா வெளிநாட்டில் உள்ளதை போல தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய வளர்ச்சியடைந்த நாடாக மாறும். இதுவும் இந்தியாவிலேயே இந்த ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டால் நிச்சயம் இது இந்தியாவிற்கு பெருமையான விஷயமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








