ஸ்டைலுக்காக பைக்கில் இந்த விஷயத்தை மட்டும் பண்ணீராதீங்க! அப்புறம் கடவுளால கூட உங்களை காப்பாத்த முடியாது!

உங்கள் பைக்கில் கண்டிப்பாக இருக்க வேண்டிய பாகங்களில் ஒன்று சைடு வியூ மிரர்கள். பைக் ஹேண்டில்பாரின் இரு பக்கமும் அவை இருக்க வேண்டும். சைடு வியூ மிரர்களின் பொஷிஷன் சரியாக இருந்தால், நீங்கள் விபத்தில் சிக்காமல் பைக்கை பாதுகாப்பாக ஓட்ட முடியும்.

ஆனால் ஸ்டைல் என கூறி கொண்டு, பைக்குகளில் இருந்து சைடு வியூ மிரர்களை நிறைய பேர் கழற்றி விடுகின்றனர். அவர்களை போன்றவர்களுக்காகதான் இந்த செய்தி. ஒவ்வொரு பைக்கிலும் சைடு வியூ மிரர்கள் இருப்பது ஏன் மிகவும் அவசியம்? என்பதை இந்த செய்தியில் கூறியுள்ளோம். சைடு வியூ மிரர்களின் முழுமையான முக்கியத்துவத்தை, பைக் ஓட்டும் ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமானது. சரி, வாருங்கள். இனி செய்திக்குள் செல்லலாம்.

ஸ்டைலுக்காக பைக்கில் இந்த விஷயத்தை மட்டும் பண்ணீராதீங்க! அப்புறம் கடவுளால கூட உங்களை காப்பாத்த முடியாது!

சாலை விபத்தில் இருந்து காக்கும் கடவுள்!

சைடு வியூ மிரர்களின் உதவியுடன், நீங்கள் தலையை திருப்பாமலேயே, உங்களுக்கு பின்னால் வரும் வாகனங்களை எளிதாக காண முடியும். இதன் மூலம் உங்கள் பயணத்தை சைடு வியூ மிரர்கள் பாதுகாப்பானதாக மாற்றுகின்றன. பின்னால் வரும் வாகனங்களை சரியாக பார்க்கவில்லை என்றாலோ அல்லது அவற்றை பார்ப்பதற்காக தலையை முழுமையாக திருப்பினாலோ சாலை விபத்துக்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்து விடும்.

சைடு வியூ மிரர்களை பார்க்காமல் இதையெல்லாம் செய்யாதீங்க!

அத்துடன் வளைவுகளில் நீங்கள் பாதுகாப்பாக திரும்புவதற்கும் சைடு வியூ மிரர்கள் உதவி செய்கின்றன. சாலைகள் என்றால், வளைவுகள் இல்லாமல் இருக்காது. இவற்றில் திரும்புவதற்கு முன், உங்கள் சுற்றுப்புறத்தில் உள்ள வாகனங்களை நீங்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும். அதாவது உங்களுக்கு அருகில் என்னென்ன வாகனங்கள் வந்து கொண்டுள்ளன? எவ்வளவு வாகனங்கள் வந்து கொண்டுள்ளன? எவ்வளவு வேகத்தில் வந்து கொண்டுள்ளன? என்பதை எல்லாம் கவனிக்காமல் திரும்பினால், விபத்து நிகழலாம்.

ஆனால் சைடு வியூ மிரர்கள் இருந்தால், இதையெல்லாம் உங்களால் பார்க்க முடியும். அதன் அடிப்படையில் நீங்கள் வளைவுகளில் பாதுகாப்பாக திரும்பலாம். அத்துடன் நீங்கள் பாதுகாப்பாக லேன் மாறுவதற்கும், மற்ற வாகனங்களை ஓவர்டேக் செய்வதற்கும் சைடு வியூ மிரர்கள் மிகவும் அவசியம். உங்கள் பைக்கை பாதுகாப்பாக நிறுத்த வேண்டும் என்றால் கூட, சைடு வியூ மிரர்கள் அவசியமானது. சைடு வியூ மிரர்களில், பின்னால் வரும் வாகனங்களை கவனிக்காமல் இதையெல்லாம் செய்தால், விபத்தில் இருந்து உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது.

கழுத்து வலியை குறைக்கின்றன!

பைக் ஓட்டும்போது உங்களுக்கு கழுத்து வலி வருகிறதா? அப்படியானால் உங்கள் பைக்கில் முதலில் சைடு வியூ மிரர்களை மாட்டுங்கள். பைக் ஓட்டுபவர்களுக்கு கழுத்து வலி ஏற்படுவதை குறைப்பதில் சைடு வியூ மிரர்களுக்கு மிக முக்கியமான பங்கு உள்ளது. பின்னால் வரும் வாகனங்களை பார்ப்பதற்கு அடிக்கடி தலையை திருப்பியாக வேண்டிய அவசியத்தை சைடு வியூ மிரர்கள் இல்லாமல் ஆக்குகின்றன. இதன் மூலம் கழுத்து வலி ஏற்படுவதையும் அவை குறைக்கின்றன.

நம்பிக்கையை அதிகரிக்கின்றன!

புதிதாக பைக் ஓட்டுபவர்கள், மிகவும் பரபரப்பான சாலைகளில் பதற்றம் அடைந்து விடுவார்கள். அப்படிப்பட்டவர்களின் நம்பிக்கையை சைடு வியூ மிரர்கள் அதிகரிக்கின்றன. ஏனெனில் அவர்களால் முன்னால் ஒரு கண் வைத்து கொண்டே, தலையை பின்னால் திரும்பி பார்த்து பைக் ஓட்டுவது என்பது மிகவும் கடினமான காரியம் ஆகும். ஆனால் சைடு வியூ மிரர்களின் மூலம் பின்னால் உள்ள போக்குவரத்தை எளிதாக பார்த்து கொள்ள முடியும் என்பதால், அவர்களின் நம்பிக்கை அதிகரிக்கும்.

இப்படி பாதுகாப்பை உறுதி செய்வதுடன், கழுத்து வலியை குறைப்பது போன்ற நன்மைகளும் இருப்பதால் சைடு வியூ மிரர்களை புறக்கணிக்காதீர்கள். ஸ்டைல் என்ற பெயரில், அவற்றை கழட்டி வீட்டில் வைக்க வேண்டாம். ஹேண்டில்பாரின் இரு பக்கமும் சைடு வியூ மிரர்கள் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அத்துடன் அவை சரியான பொஷிஷனில் இருப்பதும் அவசியம். ஒரு சில பைக்குகளில் சைடு வியூ மிரர்கள் 'லூஸ்' ஆகி, ஆடி கொண்டிருக்கும். இப்படிப்பட்ட சைடு வியூ மிரர்கள் மூலம் உங்களால் பின் பகுதியை சரியாக பார்க்க முடியாது. எனவே இந்த பிரச்னை இருந்தால், உடனடியாக சரி செய்து விடுங்கள்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Benefits of bike side view mirror
Story first published: Wednesday, January 25, 2023, 14:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X