பெட்ரோல் அடிக்க முடியல... உங்க பைக்ல இது இருந்தா மைலேஜ் நல்லா கிடைக்கும்... இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

உங்கள் பைக்கில் ஏன் விண்டுஷீல்டு இருக்க வேண்டும்? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெட்ரோல் அடிக்க முடியல... உங்க பைக்ல இது இருந்தா மைலேஜ் நல்லா கிடைக்கும்... இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

மோட்டார்சைக்கிள்களில் விண்டுஷீல்டு இருந்தால், உங்களுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அவை என்னென்ன? என்பதை இந்த செய்தியில் நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம். குறிப்பாக டூர் செல்வதற்கு பயன்படுத்தப்படும் மோட்டார்சைக்கிள்களில் விண்டுஷீல்டு இருப்பது மிகவும் முக்கியமானது. அது ஏன்? என்பதையும் இந்த செய்தியின் முடிவில் தெரிந்து கொள்வீர்கள்.

பெட்ரோல் அடிக்க முடியல... உங்க பைக்ல இது இருந்தா மைலேஜ் நல்லா கிடைக்கும்... இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

காற்றில் இருந்து பாதுகாப்பு

மோட்டார்சைக்கிளில் விண்டுஷீல்டு இருக்கும்பட்சத்தில், உங்கள் முகம் மற்றும் உடலில் காற்று அறைவது தடுக்கப்படும். இதன் விளைவாக நீங்கள் அவ்வளவு எளிதில் சோர்வடைந்து விட மாட்டீர்கள். அதேபோல் முதுகு வலி ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் குறையும். ஒட்டுமொத்தத்தில் உங்களுக்கு சௌகரியமான பயணம் கிடைக்கும்.

பெட்ரோல் அடிக்க முடியல... உங்க பைக்ல இது இருந்தா மைலேஜ் நல்லா கிடைக்கும்... இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

மழையில் இருந்து பாதுகாப்பு

காற்றில் இருந்து மட்டுமல்லாது, மழையில் இருந்தும் விண்டுஷீல்டு உங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும். கன மழை பெய்யும் சமயங்களில் மோட்டார்சைக்கிள் ஓட்டுவது எவ்வளவு சிரமம்? என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அத்தகைய சமயங்களில் உங்கள் முகம் மற்றும் மார்புக்கு விண்டுஷீல்டு பாதுகாப்பு அரணாக செயல்படும்.

பெட்ரோல் அடிக்க முடியல... உங்க பைக்ல இது இருந்தா மைலேஜ் நல்லா கிடைக்கும்... இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

பயணத்தின்போது மழை வெளுத்து வாங்கினால், மோட்டார்சைக்கிளை ஓட்டுவது என்பது கிட்டத்தட்ட சாத்தியமில்லாத ஒரு காரியம். ஆனால் உங்களுடைய மோட்டார்சைக்கிளில் விண்டுஷீல்டு பொருத்தப்பட்டிருந்தால் அது சாத்தியம்தான். ஓரளவு வேகத்தில் உங்களால் தொடர்ந்து மோட்டார்சைக்கிளை ஓட்ட முடியும்.

பெட்ரோல் அடிக்க முடியல... உங்க பைக்ல இது இருந்தா மைலேஜ் நல்லா கிடைக்கும்... இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

குப்பைகளில் இருந்து பாதுகாப்பு

மோட்டார்சைக்கிள்களில் பயணிக்கும்போது பூச்சிகள் உங்களுக்கு தொந்தரவை ஏற்படுத்தும். குறிப்பாக இரவு நேரங்களில் பூச்சிகளால் பலரும் சிக்கல்களை சந்திக்கின்றனர். ஆனால் மோட்டார்சைக்கிளில் விண்டுஷீல்டு பொருத்தியிருந்தால் இந்த பிரச்னை ஏற்படாது. இதுமட்டுமல்லாது கல், மண் மற்றும் குப்பைகளிடம் இருந்தும் விண்டுஷீல்டு பாதுகாப்பு வழங்கும்.

பெட்ரோல் அடிக்க முடியல... உங்க பைக்ல இது இருந்தா மைலேஜ் நல்லா கிடைக்கும்... இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

சத்தம் குறைப்பு

மோட்டார்சைக்கிளை ஓட்டும்போது அதிக சத்தத்தை நாம் கேட்டாக வேண்டும். குறிப்பாக ஃபுல் ஃபேஸ் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு காற்றின் சத்தம் பெரிய தொந்தரவாக இருக்கும். ஆனால் முறையாக பொருத்தப்பட்ட விண்டுஷீல்டு அந்த சத்தத்தை குறைக்க உதவி செய்கிறது. காற்றின் சத்தம் குறைந்து விடுவதால், இன்ஜின் மற்றும் பைக்கின் மற்ற சப்தங்களை நன்றாக கேட்க முடியும்.

பெட்ரோல் அடிக்க முடியல... உங்க பைக்ல இது இருந்தா மைலேஜ் நல்லா கிடைக்கும்... இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

இதற்கு பின்னால் நிறைய நன்மைகள் உள்ளன. ஒன்று பைக்கை அனுபவித்து ஓட்ட முடியும். அதே நேரத்தில் மோட்டார்சைக்கிளின் செயின், வீல்கள் மற்றும் பிரேக்குகள் போன்ற பாகங்களில் ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால் உங்களால் அதனை எளிதாக கண்டறிந்து விடவும் முடியும். எனவே இந்த வகையிலும் விண்டுஷீல்டு நமக்கு பலன் அளிக்கிறது.

பெட்ரோல் அடிக்க முடியல... உங்க பைக்ல இது இருந்தா மைலேஜ் நல்லா கிடைக்கும்... இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

மைலேஜ் அதிகரிக்கும்

விண்டுஷீல்டில் ஏரோடைனமிக் சம்பந்தப்பட்ட விஷயமும் அடங்கியுள்ளது. காற்றின் ஊடாக அவை பைக்கை திறம்பட நகர்த்தும். இதன் காரணமாக பைக்கின் மைலேஜ் அதிகரிக்கும். பெரிய அளவில் இல்லை என்றாலும், மைலேஜ் ஓரளவிற்கு அதிகமாகும். பெட்ரோல் விலையை கவனத்தில் கொள்ளும்போது, சேமிக்கப்படும் ஒவ்வொரு சொட்டும் முக்கியமானதுதான்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Benefits Of Motorcycle Windshield. Read in Tamil
Story first published: Monday, July 26, 2021, 13:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X