விளையாடுவதற்கு அல்ல! உயிரையே காப்பாத்தும்! விமானத்தில் ஒரு சிலர் ஏன் டென்னிஸ் பந்துகளை கொண்டு போறாங்க தெரியுமா

விமான பயணத்தின்போது, ஒரு சிலர் ஏன் டென்னிஸ் பந்துகளை எடுத்து செல்கின்றனர்? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விளையாடுவதற்கு அல்ல! உயிரையே காப்பாத்தும்! விமானத்தில் ஒரு சிலர் ஏன் டென்னிஸ் பந்துகளை கொண்டு போறாங்க தெரியுமா

விமானத்தில் பயணம் செய்வது உற்சாகமான அனுபவத்தை தரக்கூடியதாக இருக்கலாம். ஆனால் முதல் ஒரு சில முறைகள் மட்டுமே அந்த உற்சாகம் இருக்கும். அதற்கு பின் விமான பயணங்கள் சோர்வை ஏற்படுத்தி விடும். விமானங்களின் இருக்கைகளில் போதிய அளவிற்கு இடவசதி கிடைக்காமல் போவதுதான் இதற்கு காரணம்.

விளையாடுவதற்கு அல்ல! உயிரையே காப்பாத்தும்! விமானத்தில் ஒரு சிலர் ஏன் டென்னிஸ் பந்துகளை கொண்டு போறாங்க தெரியுமா

ஒரு சில மணி நேர விமான பயணங்களே உங்கள் உடலை கடுமையாக சோர்வடைய செய்து விடும். அந்த அளவிற்கு நெருக்கடியான இருக்கைகளில் அமர்ந்து பயணம் செய்ய வேண்டியதிருக்கும். எனவே உடலின் தசைகளுக்கு பிரச்னை ஏற்படுவதை தவிர்க்க, விமான பயணத்தின்போது, குறிப்பிட்ட இடைவெளிகளில் இருக்கையில் இருந்து எழுந்து நடக்க வேண்டும் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

விளையாடுவதற்கு அல்ல! உயிரையே காப்பாத்தும்! விமானத்தில் ஒரு சிலர் ஏன் டென்னிஸ் பந்துகளை கொண்டு போறாங்க தெரியுமா

ஆனால் அனைத்து விமானங்களிலும், அனைத்து சமயங்களிலும் இது சாத்தியம் கிடையாது. எனினும் நீங்கள் சென்று சேர வேண்டிய இடத்தை களைப்பு இல்லாமலும், புத்துணர்ச்சியுடனும் சென்றடைவதற்கு மிகவும் எளிமையான வழி ஒன்று உள்ளது. டென்னிஸ் பந்து (Tennis Ball). ஆம், மிகவும் சரியாகதான் படித்துள்ளீர்கள்.

விளையாடுவதற்கு அல்ல! உயிரையே காப்பாத்தும்! விமானத்தில் ஒரு சிலர் ஏன் டென்னிஸ் பந்துகளை கொண்டு போறாங்க தெரியுமா

விமான பயணத்தின்போது புத்துணர்ச்சியாக இருப்பதற்கு நீங்கள் கொண்டு செல்ல வேண்டியது டென்னிஸ் பந்துகள்தான். ஆச்சரியமாக இருக்கிறதா? டென்னிஸ் பந்துகளை கொண்டு சென்றால், உடலில் வழிகள் ஏற்படாமல் தடுக்கலாம். தசைகள் மற்றும் மூட்டுக்களை தளர்வாக வைத்து கொள்ளலாம். மேலும் ரத்த ஓட்டத்தை சீராக வைத்து கொள்வதற்கும் கூட டென்னிஸ் பந்துகள் உதவி செய்கின்றன.

விளையாடுவதற்கு அல்ல! உயிரையே காப்பாத்தும்! விமானத்தில் ஒரு சிலர் ஏன் டென்னிஸ் பந்துகளை கொண்டு போறாங்க தெரியுமா

சிறிய டென்னிஸ் பந்துகள், விமான பயணங்களுக்கு ஏற்றவை என்பதை வல்லுனர்கள் ஒப்பு கொள்கின்றனர். விமான பயணத்தின்போது டென்னிஸ் பந்துகளை கொண்டு செல்வது பல்வேறு விதங்களில் நன்மைகளை அளிக்கும் என எலும்பியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். டென்னிஸ் பந்துகள் விமான பயணத்தில், உங்களை சௌகரியமாக உணர வைக்கும்.

விளையாடுவதற்கு அல்ல! உயிரையே காப்பாத்தும்! விமானத்தில் ஒரு சிலர் ஏன் டென்னிஸ் பந்துகளை கொண்டு போறாங்க தெரியுமா

பொதுவாக விமான பயணங்களுக்கு தேவையான பொருட்களை 'பேக்' செய்யும்போது, புத்தகங்கள் மற்றும் ஹெட்போன்கள் போன்றவைகளுக்கு மட்டுமே பலர் மிக அதிக முக்கியத்துவம் வழங்குகின்றனர். ஆனால் டென்னிஸ் பந்துகளையும் நாம் உடன் கொண்டு செல்ல வேண்டும். புத்தகங்கள் மற்றும் ஹெட்போன்கள் ஆகியவற்றை காட்டிலும், டென்னிஸ் பந்துகள் உங்களுக்கு நன்மை அளிக்க கூடும்.

விளையாடுவதற்கு அல்ல! உயிரையே காப்பாத்தும்! விமானத்தில் ஒரு சிலர் ஏன் டென்னிஸ் பந்துகளை கொண்டு போறாங்க தெரியுமா

விமான பயணத்தின்போது உங்களுக்கு அசௌகரியம் ஏற்பட்டால், டென்னிஸ் பந்துகள் மூலம் மசாஜ் செய்து கொள்ள முடியும். இதன் மூலமாக இறுக்கம் குறைவதுடன், வலிகள் தணிக்கப்படும். அத்துடன் ஏற்கனவே குறிப்பிட்டபடி, ரத்த ஓட்டமும் சீராக இருக்கும். தொலை தூர விமான பயணங்களின்போது, டென்னிஸ் பந்துகள் மூலமாக மசாஜ் செய்தால், ரத்தம் உறைதலையும் தடுக்க முடியும்.

விளையாடுவதற்கு அல்ல! உயிரையே காப்பாத்தும்! விமானத்தில் ஒரு சிலர் ஏன் டென்னிஸ் பந்துகளை கொண்டு போறாங்க தெரியுமா

உங்கள் உடலில் டென்னிஸ் பந்தை உருட்டும்போது, இறுக்கமாக இருக்கும் தசைகள் தளர்ந்து, ரத்த ஓட்டம் சீரடைகிறது. டென்னிஸ் பந்துகள் மூலம் உங்கள் உடலுக்கு நீங்களே மசாஜ் செய்து கொள்வது மிகவும் எளிமையானது. டென்னிஸ் பந்துகளை உங்கள் பையில் வைத்து எடுத்து செல்வது கடினமான வேலை கிடையாது.

விளையாடுவதற்கு அல்ல! உயிரையே காப்பாத்தும்! விமானத்தில் ஒரு சிலர் ஏன் டென்னிஸ் பந்துகளை கொண்டு போறாங்க தெரியுமா

அவை சிறியதாக இருப்பதால், உங்கள் பையில் எளிமையாக வைத்து எடுத்து செல்ல முடியும். மேலும் விமான பயணத்தின்போது, டென்னிஸ் பந்துகள் மூலமாக நீங்கள் மசாஜ் செய்து கொள்வது என்பது, சக பயணிகள் யாருக்கும் தொந்தரவாகவும் இருக்காது. பொதுவாக விமான பயணத்தின்போது ஒரு சில பொருட்களுக்கு அனுமதி மறுக்கப்படும்.

விளையாடுவதற்கு அல்ல! உயிரையே காப்பாத்தும்! விமானத்தில் ஒரு சிலர் ஏன் டென்னிஸ் பந்துகளை கொண்டு போறாங்க தெரியுமா

ஆனால் இந்த பட்டியலில் டென்னிஸ் பந்துகள் கிடையாது என்பது சாதகமான விஷயம். கணுக்கால்கள், மேல் முதுகு, மணிக்கட்டுகள், தொடைகள், தோள்பட்டைகள் போன்ற இடங்களில், டென்னிஸ் பந்துகள் மூலமாக நீங்களே மசாஜ் செய்து கொள்ளலாம். வானத்தில் நீங்கள் நல்ல உடல்நலத்துடன் இருக்க இது நிச்சயமாக உதவும்.

விளையாடுவதற்கு அல்ல! உயிரையே காப்பாத்தும்! விமானத்தில் ஒரு சிலர் ஏன் டென்னிஸ் பந்துகளை கொண்டு போறாங்க தெரியுமா

விபரம் தெரிந்தவர்கள் விமான பயணத்தின்போது டென்னிஸ் பந்துகளை கொண்டு செல்கின்றனர். எதற்காக டென்னிஸ் பந்துகளை கொண்டு செல்கிறார்கள்? என அவர்களை நீங்கள் ஆச்சரியத்துடன் பார்த்திருக்கலாம். ஆனால் இனி அடுத்த முறை விமானத்தில் செல்லும்போது, நீங்களும் டென்னிஸ் பந்துகளை கொண்டு செல்வீர்கள் என நம்புகிறோம்.

More from DriveSpark

Article Published On: Monday, April 25, 2022, 17:44 [IST]
English summary
Benefits of using tennis balls in airplane
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+