ரூ.3.2 கோடியில் மெர்சிடிஸ் மேபக் சொகுசு கார் வாங்கிய சலூன் கடை உரிமையாளர்!

Written By:

சில ஆண்டுகளுக்கு முன் பெங்களூரை சேர்ந்த சலூன் கடை உரிமையாளர் ரமேஷ் பாபு பற்றிய செய்தி ஒன்றை வெளியிட்டு இருந்தோம். ரோல்ஸ்ராய்ஸ் உள்பட பல விலை உயர்ந்த கார்கள் அவரிடம் இருப்பது குறித்து அந்த செய்தியில் எழுதி இருந்தோம்.

இந்த நிலையில், மீண்டும் மீடியாவின் பார்வைக்கு இலக்காகி இருக்கிறார் ரமேஷ் பாபு. ஆம், ரூ.3.2 கோடி விலையில் புதிய மெர்சிடிஸ் மேபக் சொகுசு காரை வாங்கி இருப்பதுதான் மீண்டும் அவரது பெயர் ஊடகங்களில் அடிபட காரணமாகி உள்ளது.

ரூ.3.2 கோடியில் மெர்சிடிஸ் மேபக் கார் வாங்கிய சலூன் கடை உரிமையாளர்!

ரூ.3.2 கோடி மதிப்புடைய மெர்சிடிஸ் மேபக் எஸ்600 சொகுசு காரை சமீபத்தில் டெலிவிரி பெற்றிருக்கிறார் ரமேஷ் பாபு. நாட்டை விட்டு ஓடிப்போன விஜய் மல்லையா மற்றும் பெங்களூரை சேர்ந்த கட்டுமான நிறுவன அதிபர் ஒருவர் என இருவரிடமே இந்த கார் இருந்த நிலையில், தற்போது இந்த காரை வாங்கியிருக்கும் மூன்றாவது பெங்களூர்காரர் என்ற பெருமையை ரமேஷ் பாபு பெற்றிருக்கிறார்.

ரூ.3.2 கோடியில் மெர்சிடிஸ் மேபக் கார் வாங்கிய சலூன் கடை உரிமையாளர்!

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காரின் வீல் பேஸ் அதிகரிக்கப்பட்ட வீல்பேஸ் மாடல் மெர்சிடிஸ் மேபக் எஸ்600 என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த காரில் உட்புறம் மிக விசாலமான இடவசதியை பெற்றிருக்கிறது. சொகுசு வசதிகளும், பொழுது போக்கு வசதிகளும் ஏராளம்.

ரூ.3.2 கோடியில் மெர்சிடிஸ் மேபக் கார் வாங்கிய சலூன் கடை உரிமையாளர்!

பிரம்மாண்டமான இந்த காரில் இருக்கும் 6.0 லிட்டர் வி12 எஞ்சின் அதிகபட்சமாக 530 பிஎச்பி பவரையும், 830 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது.

ரூ.3.2 கோடியில் மெர்சிடிஸ் மேபக் கார் வாங்கிய சலூன் கடை உரிமையாளர்!

இது என்ன பிரமாதம் என்பதுபோல், ரமேஷ் பாபுவிடம் ஏராளமான சொகுசு கார்கள் உள்ளன. சலூன் கடை உரிமையாளராக இருந்தாலும், ரமேஷ் பாபு இந்தளவுக்கு உயர்ந்ததே அவர் துவங்கிய டாக்சி நிறுவனம் மூலமாகத்தான்.

ரூ.3.2 கோடியில் மெர்சிடிஸ் மேபக் கார் வாங்கிய சலூன் கடை உரிமையாளர்!

இவரது டாக்சி நிறுவனத்தில் 11 மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள், 10 பிஎம்டபிள்யூ கார்கள், மூன்று ஆடி கார்கள், இரண்டு ஜாகுவார் சொகுசு கார்கள், ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் உள்ளன. இவை அனைத்தும் வாடகைக்கு விடப்படுகின்றன.

ரூ.3.2 கோடியில் மெர்சிடிஸ் மேபக் கார் வாங்கிய சலூன் கடை உரிமையாளர்!

இவ்வளவு விலை உயர்ந்த கார்களை வைத்திருக்கும் ரமேஷ் பாபு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர்தான். இவர் 9 வயதாக இருக்கும்போதே தந்தை இறந்துவிட்டார். இதையடுத்து, பெங்களூர் பிரிகேட் சாலையில் அவர் தந்தை நடத்தி வந்த சலூன் கடையை வாடகைக்கு விட்டார். தினமும் 5 ரூபாய் வாடகை கிடைத்தது.

ரூ.3.2 கோடியில் மெர்சிடிஸ் மேபக் கார் வாங்கிய சலூன் கடை உரிமையாளர்!

தாய் மற்றும் உடன்பிறந்தவர்கள் என குடும்பத்தில் உள்ளவர்களின் பசியை போக்க அந்த வருவாய் போதவில்லை. இதையடுத்து, படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு முழு நேரமாக முடி திருத்தும் வேலையை பார்க்க துவங்கினார். 1991ம் ஆண்டில் சொந்தமாக சலூன் ஒன்றையும் துவங்கினார்.

ரூ.3.2 கோடியில் மெர்சிடிஸ் மேபக் கார் வாங்கிய சலூன் கடை உரிமையாளர்!

நேர்த்தியான அவரது முடி திருத்தும் தொழிலை கண்டு அவரது கடைக்கு அரசியல் பிரபலங்களும், சினிமா நட்சத்திரங்களும் வர துவங்கினர். ரமேஷ் பாபுவின் வருவாய் அதிகரித்தது. வருவாயை பெருக்கிக் கொள்வதற்காக 1994ம் ஆண்டு டாக்சி நிறுவனத்தை துவங்கினார். மாருதி ஓம்னி வேனுடன் டாக்சி நிறுவனத்தை துவங்கினார். இன்று இவரது நிறுவனத்தில் பென்ஸ், பிஎம்டபிள்யூ, ரோல்ஸ்ராய்ஸ் என சொகுசு கார்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

ரூ.3.2 கோடியில் மெர்சிடிஸ் மேபக் கார் வாங்கிய சலூன் கடை உரிமையாளர்!

முடி திருத்தும் நிலையம் போன்றே அவரது டாக்சி நிறுவனமும் பிரபலமடைந்தது. ரமேஷ் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் என்ற பெயரில் அந்த நிறுவனத்தை துவங்கினார். பல பிரபலங்களும் ரமேஷ் பாபு டாக்சி நிறுவனத்தின் வாடகைக்கு கார் எடுக்கத் துவங்கினர். இதனால், சாதாரண கார்களுடன் சொகுசு கார்களையும் வாங்கி தொழிலை விரிவு படுத்தினார். அதற்கும் வெற்றி கிடைத்தது.

ரூ.3.2 கோடியில் மெர்சிடிஸ் மேபக் கார் வாங்கிய சலூன் கடை உரிமையாளர்!

தற்போது அவரிடம் 150 சொகுசு கார்கள் இருக்கின்றன. பெங்களூரில் உள்ள விவிஐபி மற்றும் வெளிநாட்டிலிருந்து வரும் விஐபிகளுக்கு ரமேஷ் பாபு டாக்சி நிறுவனத்திடம் இருந்துதான் கார்கள் வாடகைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. டாக்சி தொழிலில் வருமானம் கொட்டி வந்தாலும், பழசை மறக்காமல் தினமும் 5 மணிநேரம் சலூன் கடையில் முடிதிருத்தும் பணியை செய்கிறார்.

ரூ.3.2 கோடியில் மெர்சிடிஸ் மேபக் கார் வாங்கிய சலூன் கடை உரிமையாளர்!

கடந்த மாதம் பெங்களூரில் நடந்த விமான கண்காட்சிக்கு வந்த ஜெர்மன் நாட்டு அரசு அதிகாரிகள் இவர் வாங்கியிருக்கும் புதிய மெர்சிடிஸ் மேபக் காரை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போதுதான் ரமேஷ் பாபு மெர்சிடிஸ் மேபக் காரை வாங்கியிருப்பது மீடியாவிற்கு தெரிய வந்தது.

ரூ.3.2 கோடியில் மெர்சிடிஸ் மேபக் கார் வாங்கிய சலூன் கடை உரிமையாளர்!

சரி, அவர் தினசரி சலூனுக்கு எந்த காரில் சென்று வருகிறார் தெரியுமா? பல கோடி மதிப்புடைய ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் காரைத்தான் அதிகம் பயன்படுத்துகிறாராம். இந்த காரை வாடகைக்கும் விடுகிறார். நாள் ஒன்றுக்கு ரூ.50,000 என்ற வாடகையில் இந்த கார் கிடைக்கிறது என்பது உங்களுக்கான தகவல்!!

Source: Bangalore Mirror

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் படங்கள்!!

விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் வெர்னா காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Read in Tamil: Bengaluru salon shop owner Ramesh babu buys Maybach for Rs 3.2 crore.
Story first published: Thursday, March 2, 2017, 16:56 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark