பெங்களூர் சாலையில் AI கேமரா பார்த்த வேலையை பார்த்தீங்களா?... கொஞ்சம் விட்டிருந்தா குடும்பத்துல குழப்பம்தான்!

பெங்களூருவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போக்குவரத்து விதிமீறல்களை கண்டறியும் கேமரா, ஸ்கூட்டரில் சென்ற ஒருவரின் கிட்டாரை மனிதராக நினைத்து ரூ.500 அபராதம் விதித்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. மேலும், அந்த கிட்டார் பேக்கை மனிதராக நினைத்து, ஹெல்மெட் அணியாத ஒருவர் பயணித்தாக கூறி அந்த செல்லானை அந்த AI கேமரா அனுப்பி உள்ளது.

பெங்களூரை சேர்ந்த சவுவிக் தத்தா என்பவர் கடந்த 15ந் தேதி ஹெப்பால் பகுதியிலிருந்து டின் ஃபேக்டரி நோக்கி வெளிவட்டச்சாலையில் மின்சார ஸ்கூட்டரில் சென்றுள்ளார். அப்போது தனது கிட்டார் இசைக்கருவியை பையில் வைத்து பின்னால் வைத்து மாட்டி வைத்து பாதுகாப்பாக எடுத்துச் சென்றார்.

AI Camera Mistake Challan

அப்போது, அந்த சாலையில் இருந்த AI அடிப்படையிலான போக்குவரத்து கண்காணிப்பு கேமரா, அவரது முதுகில் இருந்த கிட்டார் பேக்கை பின்சீட்டில் அமர்ந்திருந்த மற்றொரு நபராக தவறாக கணித்துவிட்டது. அதுமட்டுமின்றி, பின்னால் அமர்ந்து இருந்த பயணி ஹெல்மெட் அணியவில்லை என்றும் குற்றம்சாட்டி, அந்த AI அமைப்பு அவருக்கு தானியங்கி முறையில் மொபைல் எண்ணுக்கு செல்லான் அனுப்பி உள்ளது.

Also Read

பின் சீட்டில் இருந்த பயணி ஹெல்மெட் அணியவில்லை என்ற விதிமீறலுக்காக ரூ.500 அபராதத்துடன் ஆன்லைன் சலான் உருவாக்கப்பட்டுள்ளது. தத்தா ஓட்டிச் சென்ற ஸ்கூட்டர் அவரது மனைவியின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், அந்த அபராதம் சவுவிக் தத்தாவின் மனைவியின் மொபைல்போனுக்கு மறுநாள் வந்துள்ளது. இதனை பார்த்ததும் அவரது மனைவி அதிர்ச்சி அடைந்து, தத்தாவிடம் கேட்டுள்ளார்.

பின்னர் அந்த நோட்டீஸுடன் இணைக்கப்பட்டிருந்த ஏஐ கேமரா எடுத்த படத்தை ஆய்வு செய்துள்ளனர். அதில், கிட்டார் பையை மனிதராக கருதி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதை உணர்ந்து கொண்டனர். இதனால், தத்தா பெருமூச்சுவிட்டுக் கொண்டார்.

Also Read

நாம் யாருடனும் செல்லவில்லை என்று அவருக்கு தெரிந்ததால், படத்தை நன்கு ஆய்வு செய்ததுடன், அடுத்து இந்த சம்பவத்தை X சமூக வலைத்தளத்தில் படத்துடன் பகிர்ந்து, பெங்களூரு போக்குவரத்து காவல்துறையை டேக் செய்து அபராதத்தை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

எனது மனைவியின் இருசக்கர வாகனத்தில் கிட்டாருடன் தனியாக பயணம் செய்தேன். ஆனால், மனிதராக நினைத்து ஹெல்மெட் அணியவில்லை என்று தவறாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று தனது பதிவில் சுட்டிக்காட்டி உள்ளார். இதனை ஆய்வு செய்த பெங்களூர் போக்குவரத்து போலீசார், அபராதத்தை ரத்து செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பதிவு வெளியான பிறகு சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. AI தொழில்நுட்பம் போக்குவரத்து விதிமீறல்களை தானியங்கி முறையில் கண்டறிவதில் எவ்வளவு உதவியாக இருந்தாலும், சில நேரங்களில் பொருட்களையும் மனிதர்களையும் தவறாக அடையாளம் காணும் வாய்ப்பு இருப்பதாக இந்த சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

போக்குவரத்து விதிகளை தீவிரமாக நடைமுறைப்படுத்த பெங்களூரு நகரில் 'இண்டெலிஜென்ட் டிராஃபிக் என்ஃபோர்ஸ்மென்ட் மேனேஜ்மென்ட் சிஸ்டம்' (ITEMS) என்ற பெயரில் முக்கிய சாலைகளில் அதிநவீன ஏஐ கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஹெல்மெட் அணியாமல் செல்வது, சிக்னல் தாண்டுவது, காரில் சீட் பெல்ட் அணியாமல் செல்வது போன்ற வித மீறல்களை இந்தக் கேமராக்கள் தானாகவே கண்டறிந்து சலான் தயாரிக்கும் திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

Article Corrections

This article has been updated with original X post of the rider.
Article Published On: Monday, September 28, 2026, 14:48 [IST]
English summary
Bengaluru ai camera mistakes guitar for helmetless pillion rider rs 500 fine
மேலும்... #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out