விமான நிலையங்களை மிஞ்சப்போகும் பெங்களூரு ரயில் நிலையம்! எப்படி மாறப்போகுது தெரியுமா?
பெங்களூருவில் உள்ள 150 ஆண்டுக் கால பாரம்பரியமான கன்டோன்மென்ட் ரயில் நிலையம் விரைவில் விமான நிலையத்தை விடச் சிறப்பான மாற்றத்தைப் பெறப்போகிறது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கன்டோன்மென்ட் ரயில் நிலையம் கடந்த 1860ம் ஆண்டு முதல் செயல்பட்டுவருகிறது சுமார் 150 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பாட்டில் இருக்கும் இந்த ரயில் நிலையத்திற்குத் தினமும் ஏராளமான ரயில்கள் வந்து செல்கின்றன. இந்த புராதன ரயில் நிலையத்தை முற்றிலுமாக மாற்ற ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த ரயில் நிலையம் விரைவில் விமான நிலையத்தை மிஞ்சிய கட்டமைப்பு மற்றும் வசதிகள் பொருந்திய ரயில் நிலையமாக மாறும் எனக் கூறப்படுகிறது.

பெங்களூருவில் ஏற்கனவே எஸ்எம்விடி என்ற ரயில் நிலையம் விமான நிலையத்தின் தரத்திற்கு மாற்றப்பட்டுக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செயல்பாட்டிற்கு வந்தது. இந்த ரயில் நிலையம் மக்களை அதிகம் கவர்ந்தது. பலர் இந்த ரயில் நிலையத்தை பார்ப்பதற்காகவே வந்து செல்கின்றனர். இந்நிலையில் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தையும் இப்படியாகத் தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக ரூ45 கோடி செலவில் இந்த ரயில் நிலையத்தில் உள்ள யார்டு பகுதியைத் தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 3 எக்ஸ்ட்ரா லைன் மற்றும் யார்டில் ரயில்களை நிறுத்தும் 4 புதிய ஸ்டேஷன்களையும் கட்டமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த யார்டு மேம்படுத்தப்படுவது மூலம் பெங்களூரு மெஜஸ்டிக் ரயில்நிலையத்தில் உள்ள டிராஃபிக் வெகுவாக குறையும். இதற்கான முதற்கட்டமாக யார்டு பணிகள் நடக்கிறது. இந்த பணிகள் வரும் 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதமே முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன் பின் தான் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தை புரனமைக்கும் பணி நடக்கவுள்ளது. இதற்காக ரூ480 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது ரயில் நிலையத்தின் ரயில்களுக்கான இடமாக மட்டுமல்லாமல் பல வர்த்தக மேம்பாட்டுப் பகுதிக்காகவும் இது செலவிடப்படவுள்ளது. இந்த ரயில் நிலையம் சுமார் 150 ஆண்டுகளுக்கும் பழமையானது என்பதால் இந்த புரனமைப்பின் போது இதன் பழமை தன்மை மாறாமல் அதைப் புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்டவுடன் இந்த ரயில் நிலையம் பழமை தன்மையுடன் புதிய லுக்கில் இருக்கும். புதிதா மாற்றப்படும் ரயில் நிலையத்தின் ரூஃப்கள் அலை வடிவில் ஒரு ஓவியம் போல டிசைன் செய்யப்பட உள்ளது. இங்குள்ள தூண்களில் மேலே ரூஃபை இணைக்கும் பகுதி பூக்களைப் போல டிசைன் செய்யப்படவுள்ளது. பெங்களூரு ஒரு கார்டன் சிட்டி என்பதால் இந்த டிசைன் இடம்பெறவுள்ளது. பில்லர்களை இணைக்கும் ஃபிரேம்கள் புல்லாங்குழல் வடிவில் அமைக்கப்படவுள்ளது.
மிக முக்கியமான தற்போது ரயில் நிலையத்தின் வாசலியே மற்ற போக்குவரத்தும் இருக்கும்படியான சாலை இருக்கிறது. இந்த சாலை மாற்றப்பட்டு முற்றிலும் ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளுக்கான சாலையாக மாற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையத்தில் இன்னும் நாம் எதிர்பார்க்காத ஏகப்பட்ட அம்சங்கள் இடம் பெறப்போவதாகத் தெரியவந்துள்ளது. தற்போது உள்ள நிலவரப்படி இதான் டிசைன் மட்டுமே உறுதியாகியுள்ளது.
ஆனால் இந்த ரயில் நிலையத்திற்கான கட்டமைப்பு திட்டத்தைப் பொருத்தவரை விமானத்தை நிலையத்தையே மிஞ்சும் அம்சங்கள் நிறைந்ததாக இந்த ரயில்நிலையம் இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த ரயில் நிலையம் மாற்றம் பெற இன்னும் 2 ஆண்டுகள் வரை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போலச் சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்கள் புரனமைக்கப்படுமா? இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








