வெளிநாடுகளே இதை வியந்து பாக்க போறாங்க! டிரைவரே இல்லாமல் ஓடப்போகும் மெட்ரோ!

பெங்களூருவில் முதல் டிரைவர் இல்லாமல் மெட்ரோ ரயிலுக்கான சோதனையை துவங்க பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் தயாராகி வருகிறது. இதற்கான அனைத்து விதமான முன்னேற்பாடுகளையும் செய்து வருகிறது. தற்போது இறக்குமதி செய்யப்பட்ட கோச்சுகள் எல்லாம் பல்வேறு விதமான சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. தயாரானவுடன் அடுத்ததாக சிக்னலிங் சிஸ்டம் சோதனை செய்யப்படும். அப்பொழுது மெட்ரோ தானியங்கியாக டிரைவர் இல்லாமல் இயங்குவது குறித்த சோதனை உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை இங்கே காணலாம் வாருங்கள்.

இந்தியா முழுவதும் தற்போது மெட்ரோ ரயிலை மேம்படுத்துவதற்காக பல்வேறு விதமான அப்டேட்களை மெட்ரோ ரயில் நிர்வாகம் செய்து வருகின்றன. அதன்படி முக்கியமாக டிரைவர் இல்லாமல் தானியங்கியாக இயங்கும் மெட்ரோ ரயில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. பெங்களூருவில் முதல் முறையாக டிரைவர் இல்லாத மெட்ரோ ரயிலை பயன்பாட்டிற்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

bengaluru driverless metro

அதன்படி பெங்களூர் ரயில்வே நிர்வாகம் பொம்மசந்திரா முதல் ஆர்வி ரோடு வரை புதிதாக அமைக்கப்பட்டுள்ள மஞ்சள் லைன் பகுதியில் இயக்கப்படும் மெட்ரோக்கள் எல்லாம் டிரைவர் இல்லாத மெட்ரோ ரயிலாக இயக்க திட்டமிடப்பட்டு இதற்கான கோச்களை எல்லாம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதமே இந்த கோச்கள் எல்லாம் பெங்களூருக்கு வந்து சேர்ந்து விட்டன.

தற்போது பெங்களூரு மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் இந்த கோச்களில் உள்ள எலெக்ட்ரிக் சர்க்யூட் மற்றும் லைட்டுகள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் சோதனை செய்து வருகிறார்கள். இந்த சோதனை முடிந்தவுடன் அடுத்த கட்டமாக சிக்னலின் சோதனைக்காக இந்த மெட்ரோ உட்படுத்தப்பட போகிறது. சிக்னலிங் தான் டிரைவர் இல்லாத மெட்ரோவில் மிக முக்கிய பங்கை வகிக்கும் தொழில்நுட்பமாகும்.

bengaluru driverless metro

சிக்னலிங் என்பது மனித கட்டுப்பாடுகள் இல்லாமல் முழுமையாக தானியங்கியாக இயங்கும் வகையில் உருவாக்கப்படுகிறது. இதனால் எந்த வித விபத்தும் இல்லாமல் மெட்ரோக்கள் பாதுகாப்பாக இயங்கும். அதே நேரம் மெட்ரோ கிளம்பும்போதும் வந்து நிற்கும் போதும் மனிதர்கள் செய்யும் சில தவறுகள் கூட மெட்ரோ தண்ணீர் தானே சரி செய்து கொண்டு நிலைமையை புரிந்து கொண்டு தன்னைத்தானே மாற்றி செயல்படும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்படும்.

தற்போது இந்த பெங்களூர் மெட்ரோ மஞ்சள் லைனில் சிக்னலிங் சிஸ்டத்திற்கான கருவிகள் எல்லாம் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சிக்னலிங் சிஸ்டத்தில் மெட்ரோக்கள் சரியாக பணியாற்றுகிறதா என்பதை சோதனை செய்ய மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான சோதனை ஓட்டங்களை இந்த மாத இறுதிக்குள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

bengaluru driverless metro

இது வெற்றி அடைந்து விட்டால் அடுத்த ஒரு சில சோதனைகள் மட்டுமே இருக்கிறது. பொதுவாக ஒரு மெட்ரோ ரயில் தயாராக வேண்டும் என்றால் 37 விதமான சோதனைக்கு உட்படுத்தப்படும். இந்த 37 விதமான சோதனைகளையும் அந்த மெட்ரோ ரயில் வெற்றி பெற்றால் மட்டுமே அது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

தற்போது பெங்களூர் மெட்ரோவில் மஞ்சள் லைனைப் பொறுத்தவரை முக்கிய பாதையில் அமைக்கப்பட்டுள்ளன. பொம்மசந்திராவிலிருந்து, எலெக்ட்ரானிக் சிட்டி, சில்க் போர்டு, ஜெயதேவா பகுதி வழியாக நேரடியாக ஆர்வி ரோடு மெட்ரோவில் இணையும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆர்வி ரோடு பகுதியில் பச்சை நிற லைன் மெட்ரோ செயல்பட்டு வருகிறது.

இந்த மஞ்சள் நிற லைன் மெட்ரோ ரோட்டில் மொத்தம் 16 மெட்ரோ ஸ்டேஷன்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது மொத்தம் 18.82 கிலோமீட்டர் நீளத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் 3.13 கிலோமீட்டர் நீளத்திற்கு இரண்டு அடுக்கு பாலம் மூலம் மெட்ரோ பயணம் செய்கிறது. சில்க் போர்டு முதல் ராகிகுண்டா வரை கீழே தரையில் சாலையும் அதற்கு மேலே பாலத்தில் வாகனங்கள் டிராபிக் இல்லாமல் செல்வதற்கான பாலமும் அதற்கு மேலே மெட்ரோ ரயில் பாதையும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த டபுள் டக்கர் பாலம் பெங்களூருவின் முக்கிய அடையாளமாக மாறப்போகிறது. மஞ்சள் ரயிலில் இந்த ஆண்டு இறுதிக்குள் மெட்ரோ ரயில் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் முக்கிய ஐடி நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், இந்த மெட்ரோவை அதிகம் பயன்படுத்த வாய்ப்புகள் இருக்கிறது எலெக்ட்ரானிக் சிட்டி பகுதியில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதன் ஊழியர்கள் பலர் சில்க் போர்டு சுற்றியுள்ள பகுதியில் வசிப்பதால் அவர்கள் சென்றுவர இந்த மெட்ரோ உதவியாக இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிரைவர் இல்லாத மெட்ரோ என்பது ஒரு காலத்தில் ஏதோ சயின்டிபிக் ஃபிக்ஷன் போல நமக்கு தோன்றியிருக்கும். ஆனால் இதை நடைமுறை சாத்தியமாக்கி உள்ளது. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி எதிர்காலத்தில் இந்தியாவில் இயங்கும் அனைத்து மெட்ரோ ரயில்களும் இப்படியாக டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில்களாக இயங்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 11, 2024, 14:22 [IST]
English summary
Bengaluru driverless metro signalling tests commence shortly
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X