பெற்றால் இப்படியொரு பிள்ளையை பெறனும்! சர்பிரைஸ் பரிசை பார்த்து கண்ணீர்விட்ட தாய்- தந்தை!!
பெற்றோர்களுக்கு விலையுயர்ந்த பொருட்களை பரிசளிப்பது என்பது எவரொருவருக்கும் பிடித்தமான விஷயம் ஆகும். வாழ்க்கையில் எதையோ பெரியதாக சாதித்தது போல் உணர்வு ஏற்படும். அது வேற லெவல் ஃபீல். அதுவே, புத்தம் புதிய பிராண்ட்-நியூ (Brand-new) காரை வழங்குவது என்றால் தனி சந்தோஷம் என்றுதான் சொல்ல வேண்டும். அப்படியொரு சந்தோஷமான விஷயத்தை தான் இங்கு ஒருவர் தனது பெற்றோர்களுக்கு ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta) கார் மூலமாக செய்துள்ளார். அவரை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம். வாங்க.
இந்தியாவில் ஹூண்டாய் கார்களுக்கு நல்லப்படியான வரவேற்பு கிடைத்து வருகிறது. இதற்கு முக்கியமான கார்களுள் ஹூண்டாய் கிரெட்டாவும் ஒன்றாகும். முதன்முதலாக 2015ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட கிரெட்டா இந்திய மார்க்கெட்டுக்கு வந்து, 2025 ஜூலை உடன் 10 வருடங்கள் நிறைவடைய உள்ளது. இந்த 10 வருடங்களில் இலட்சக்கணக்கிலான மக்கள் கிரெட்டா காரை வாங்கியுள்ளனர்.

குறிப்பாக, 2020ஆம் அறிமுகம் செய்யப்பட்ட மேம்படுத்தப்பட்ட கிரெட்டா காருக்கு கஸ்டமர்கள் குவிந்து வருகின்றனர். அவ்வாறான கிரெட்டா கஸ்டமர்களுள் ஒருவராக இணைந்திருப்பவர் தான் நாம் இந்த செய்தியில் பார்க்கும் ஹீரோ ஆவார். சாம்ராட் டுட்டா (Somrat Dutta) என பெயர் கொண்ட இந்த இளைஞர், தனது பெற்றோர்களை ஷோரூமுக்கு அழைத்து சென்று, பிராண்ட்-நியூ காரை வாங்கிக் கொடுத்து பெருமைப்பட வைத்துள்ளார்.
பெற்றோர்கள் இருவரும் சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர் வடிக்க, அதை பார்த்து சாம்ராட் டுட்டாவும் அழ, அந்த இடமே விக்ரமன் திரைப்பட காட்சி போல் ஆகிவிட்டது. இதுதொடர்பாக வீடியோ உடன் சாம்ராட் டுட்டா தனது எக்ஸ் பக்கத்தில், "அம்மா கிட்டத்தட்ட கண்ணீர் விட்டார்! ஒருவழியாக, என் அப்பா, அம்மாவுக்கு அவர்களின் ட்ரீம் காரை பரிசாக அளித்தேன்.

2024 ஏப்ரலில், எனது சம்பளத்தில் கை வைக்காமல் அவர்களுக்கு ஒரு காரை வருட இறுதிக்குள் பரிசளிக்க வேண்டும் என்கிற சவாலான இலக்கை வகுத்தேன்" என கூறியுள்ளவர், இந்த வருடத்திற்குள் புதிய காரை வாங்குவது சாத்தியமற்றது என முதலில் நினைத்ததாகவும், பின்னர் அதனை யோசித்து பார்த்த போதும் சாத்தியமற்றது என்றே தோன்றியதாகவும், ஆனால் தற்போது அதனை நிஜமாக்கியுள்ளதாகவும் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
சாம்ராட் டுட்டா புதிய கார் வாங்கிக் கொடுப்பார் என அவரது அம்மா முற்றிலுமாக எதிர்பார்க்கவில்லை. இதனால், ஷோரூமுக்கு அழைத்து சென்று புத்தம் புதிய கிரெட்டா காரை மறைப்பை நீங்கி காட்டியது அவருக்கு பெரிய சர்பிரைசாக இருந்தது. வெள்ளை நிறத்திலான 2024 கிரெட்டா காரை சாம்ராட் டுட்டா அவரது பெற்றோருக்கு சர்பிரைஸ் பரிசாக வழங்கியுள்ளார். புதியதாக கார் வாங்கிக் கொடுத்ததற்கு சாம்ராட் டுட்டா சிறு கதையை கூறுகிறார்.

அதாவது, வேலைக்காக அப்பா, அம்மாவை விட்டு பெங்களூருக்கு சாம்ராட் சென்ற போது, அவர்கள் 10 வருடங்களாக பயன்படுத்தி வந்த ஹூண்டாய் இயான் (Eon) ஹேட்ச்பேக் காரையும் கூடவே தனது பயன்பாட்டிற்காக எடுத்து சென்றதாகவும், திரும்பி இந்த ஹூண்டாய் இயான் காரை அவர்களுக்கு கொடுக்காமல் பிராண்ட்-நியூ காரை கொடுக்க வேண்டும் என நினைத்ததாகவும் சாம்ராட் டுட்டா கூறுகிறார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் கிரெட்டா கார் ஒன்றை வாங்குவதற்கு எப்படியிருந்தாலும் ரூ.12- 13 லட்சம் தேவைப்படும். இவ்வளவு தொகையை ஒருவர் நினைத்தால் புரட்டிவிட முடியும். ஆனால், சம்பளத்தில் இருந்து ஒரு ரூபாய் கூட எடுக்காமல் இவ்வளவு பெரிய தொகையை சேமிப்பது கடினமாகும். ஆதலால், இந்த நேரத்தில் ஒரு கேள்வி தான் கேட்க தோன்றுகிறது... எப்படி உங்களால் முடிந்தது?


Click it and Unblock the Notifications









