சோலார் கார் தயாரித்த கோலார் தங்கவயல் தந்த 'தங்க மகன்'

By Saravana

வாகனங்களால் சுற்றுச்சூழல் மாசுபடுவதை கண்டு பலரும் அதிருப்தியுற்றுள்ளனர். ஆனால், ஒரு சிலர் மட்டுமே அதற்கான தீர்வுகளை காணும் முயற்சியில் இறங்கி, எதிர்கால சந்ததிக்கு ஒரு பாதை வகுத்து கொடுக்க முற்படுகின்றனர்.

அந்த வகையில், ஓர் சீரிய முயற்சியை கையிலெடுத்து அசத்தியுள்ளார் கர்நாடக மாநிலம் கோலார் பகுதியை சேர்ந்த ஒரு கிராமத்து விஞ்ஞானி சையது சாஜன் அகமது என்பவர். தற்போது 63 வயதாகும் இவர் சிறுவயது முதலே, தனது வாழ்நாளில் சமுதாயத்திற்கு பயன்படும் ஏதாவது ஒரு நல்ல காரியத்தை செய்து காட்டிவிட வேண்டும் என்பதில் முனைப்புடன் இருந்து வருகிறார்.

அந்த உந்துதலின் அடிப்படையில், வாகனங்கள் சீர்கேடாகும் சுற்றுச்சூழலை காக்கும் விதத்தில் சோலார் வாகனங்களை தயாரித்து அசத்தி வருகிறார் சையது சாஜன் அகமது. இத்தனைக்கும் சையது சாஜன் பன்னிரெண்டாம் வகுப்புடன் கல்விக்கு முழுக்கு போட்டவர். குடும்ப சூழலால் வேலைக்கு சென்று சம்பாதிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சோலார் வாகனங்கள்

சோலார் வாகனங்கள்

முதலில் பழ வியாபாரியாகவும், பின்னர் டிவி ரிப்பேர் கடையையும் வைத்திருந்திருந்தார். பின்னர், கம்ப்யூட்டர் ரிப்பேர் செய்யும் தொழிலையும் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டியிருக்கிறார். இந்த நிலையில், சமுதாய நலனுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று, தனது 50வயதில் ஓர் சபதத்தை மனதில் ஏற்றதுடன், அதற்கான முயற்சிகளையும் தீவிரப்படுத்தியிருக்கிறார். அதன் விளைவாக சோலார் வாகன தயாரிக்க துவங்கியிருக்கிறார்.

Picture credit : Spinning the Green Wheel

சோலார் டூ வீலர்

சோலார் டூ வீலர்

முதலில் சூரிய மின்சக்தியில் இயங்கும் வகையில் தனது டூ வீலரை மாற்றியிருக்கிறார். அதன் அடிப்படையில், ஓர் மூன்றுசக்கர சோலார் வாகனத்தையும் உருவாக்கியிருக்கிறார். கடைசியில், சோலார் கார் ஒன்றையும் வடிவமைத்து வெற்றி கண்டிருக்கிறார். இதுவரை அந்த காரில் 1,00,000 கிலோமீட்டர் தூரத்துக்கும் அதிகமாக பயணித்துள்ளார்.

சாதனைப் பயணம்

சாதனைப் பயணம்

சோலார் கார் தொழில்நுட்பத்தை பிரபலப்படுத்துவதற்காக பல முயற்சிகளை செய்து வருகிறார். அதன்படி, தற்போது டெல்லியில் நடைபெறும் சர்வதேச அறிவியல் கண்காட்சியில் பங்கேற்பதற்காக, பெங்களூரிலிருந்து 3,000 கிமீ தூரம் பயணித்து டெல்லியை அடைந்திருக்கிறார். வழியில் விந்திய மலைத்தொடரையும் அவரது கார் திக்கி திணறாமல் தாண்டியதையும் பெருமையுடன் நினைவுகூர்கிறார் சையது. இவரது சோலார் காருக்கு உதவியாக அவருடைய உறவினர் ஒருவரும் சாதாரண காரில் உடன் பயணிக்கிறார்.

Picture credit: Solar Sound Bangalore

உத்வேகம் தந்த அப்துல்கலாம்

உத்வேகம் தந்த அப்துல்கலாம்

மறைந்த முன்னாள் ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான அப்துல்கலாம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உந்து சக்தியாக விளங்குகிறார். அவரே எனக்கும் உந்துசக்தியானவர் என்று தெரிவிக்கிறார். அத்துடன், அப்துல்கலாமின் விஷன் 2020 திட்டத்தை இளைஞர்கள், மாணவர்களிடம் கொண்டு செல்லவும் அவா கொண்டிருப்பதாக அவர் கூறுகிறார்.

டெல்லி டூ ராமேஸ்வரம்

டெல்லி டூ ராமேஸ்வரம்

டெல்லியிலிருந்து திரும்பும்போது, தனது மானசீக குருவான அப்துல்கலாமின் சமாதி அமைந்துள்ள ராமேஸ்வரத்திற்கு பயணிக்க திட்டமிட்டு இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். பின்னர், கன்னியாகுமரியை தொட்டுவிட்டு, கோலார் திரும்ப இருப்பதாகவும் கூறுகிறார் தங்க வயல் தந்த இந்த தங்க மகன்.

கார் பற்றி..

கார் பற்றி..

இந்த காரில் 100 வாட்ஸ் திறன் கொண்ட 5 சோலார் பேனல்கள் மூலம் சூரிய மின்சக்தி பெறப்பட்டு 6 பேட்டரிகளில் சேமிக்கப்படுகிறது. மின் மோட்டார் மூலமாக கார் இயக்கப்படுகிறது. மலைப்பாதைகள், மிகவும் சரிவான சாலைகளில் கூட இந்த கார் மிகச்சிறப்பாக ஏறுவதாக சையது தெரிவிக்கிறார்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட்
English summary
A 63-year-old man arrived here to participate in the first India International Science Fair (IISF) on Monday, using a self-developed solar electric-powered car to cover 3,000 km from Bangalore to Delhi.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X