ஆடு, மாடை குளிப்பாட்டுற மாதிரில இருக்கு... பிசியான சாலையில் லம்போர்கினி கார் ஓனர் செஞ்சது எல்லாருக்கும் ஷாக்!!
பெங்களூரு (Bengaluru), இந்தியாவின் மென்பொருள் தலைநகரம். தொழிற்நுட்ப வளர்ச்சியினால் சமீப காலமாக வேகமாக பொருளாதாரத்தில் வளர்ச்சி கண்டுவரும் நகரம். எந்த அளவிற்கு வளர்ச்சி என்றால், பெங்களூருவில் ஒருவர் விலையுயர்ந்த லம்போர்கினி (Lamborghini) காரை சர்வ சாதாரணமாக ஒரு பக்கெட் நீரில் சாலையோரத்தில் வைத்து கழுவும் வீடியோ (Video) ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. துபாய் போன்ற மல்டி-மில்லியனர்கள் வாழும் நகரத்தில்தான் இவ்வாறான சம்பவங்களை அதிகமாக பார்க்க முடியும். ஆனால், பெங்களூருவில் நடந்துள்ள இந்த சம்பவத்தை பற்றிய கூடுதல் விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.
துபாய், அபுதாபி போன்ற பொருளாதாரத்தில் அசூர வளர்ச்சி கண்டுவரும் நகரங்களில் லம்போர்கினி, ஃபெராரி போன்ற விலையுயர்ந்த கார்களை சர்வ சாதாரணமாக சாலைகளில் காண முடியும். இவ்வளவு ஏன், அல்ட்ரா-லக்சரி ரோல்ஸ்-ராய்ஸ் கார்களை கூட அத்தகைய நகரங்களில் பரவலாக நிறைய பேர் வைத்துள்ளனர். இந்தியாவை பொறுத்தவரையில், டெல்லி மற்றும் மும்பையில் சூப்பர் கார்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

அவற்றிற்கு இணையாக பெங்களூருவிலும் விலையுயர்ந்த கார்களை நிறைய பேர் வாங்கி வருகின்றனர். இதற்கு சாட்சி தான், தற்போது நடந்துள்ள சம்பவம் ஆகும். இன்றைய காலத்தில் நிறைய பேர் தங்களது கார்களை தாங்களே சுத்தம் செய்வது இல்லை. கார் வாஷிங் மையங்கள் (Car Washing Centre) அதிகளவில் புதியது, புதியதாக முளைத்துள்ளதால், நேரத்தை மிச்சப்படுத்த சிம்பிளாக அத்தகைய மையங்களிடம் காரை சுத்தம் செய்யும் பொறுப்பை ஒப்படைத்து விடுகின்றனர்.
சிலருக்கு காரை எவ்வாறு முறையாக சுத்தம் செய்வது என்பது கூட தெரியவில்லை. ஆனால், பெங்களூருவில் ஒருவர் வீட்டிற்கு முன் கட்டிப்போட்டு மாட்டை குளிப்பாட்டுவது போல் லம்போர்கினி ஹூராகென் (Huracan) என்கிற விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் காரை கழுவி சுத்தம் செய்துள்ளார். இவ்வாறான லக்சரி காரை எல்லாம் கார் வாஷிங் மையத்தில்தான் சுத்தம் செய்வது வழக்கம்.

இத்தகைய காரை வீட்டிலேயே கழுவி சுத்தம் செய்ய நினைத்தது ஒன்றும் தவறு இல்லை. ஆனால், அதற்காக இந்த நபர் பயன்படுத்த உபகரணங்கள் தான் நம்மை ஆச்சிரியத்துடன் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. ஏனெனில், காரை சுத்தம் செய்ய இந்த நபர் பயன்படுத்தி இருப்பது, ஒரு பக்கெட் நீர் (குளியலறையில் இருந்து எடுத்து வந்ததுபோல் உள்ளது), ஒரு தேவையில்லாத பழைய துணி.
பெங்களூருவில் கார் வாஷிங் மையங்கள் மட்டுமின்றி, வீட்டிற்கே வந்து காரை சுத்தம் செய்து கொடுப்பவர்களும் இருக்கின்றனர். ஆனால், அவர்களை எல்லாம் விட்டு தனது சொந்த முயற்சியில் இந்த நபர் காரை சுத்தம் செய்திருப்பது பார்க்க ஆச்சிரியமாக இருந்தாலும், கார் எந்த அளவிற்கு சுத்தமாகியது என்பது தெரியவில்லை. ஒரு சிறிய கீறல் கூட லம்போர்கினி ஹூராகென் போன்ற காரில் சில இலட்சங்களை செலவு செய்ய வைத்துவிடும்.

இந்த நிகழ்வு பெங்களூருவில் சரியாக எந்த பகுதியில் நடந்துள்ளது என்பது தெரியவில்லை. இந்த லம்போர்கினி ஹூராகென் கார் ஆரஞ்சு நிறத்தில் உள்ளது. காருக்கு பின்னால் கார்பன் ஃபைபர் ஸ்பாய்லர் (Carbon Fiber Spoiler) பொருத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த லம்போர்கினி காரின் விலை தற்சமயம் ரூ.4 கோடிக்கும் அதிகமாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வீட்டிற்கே வந்து சுத்தம் செய்பவர்கள் இருக்கும் போதிலும் இந்த நபர் எதற்காக தன் கை பட காரை கழுவி சுத்தம் செய்துள்ளார் என்பது தெரியவில்லை. அதேபோல், வீட்டிற்குள் வைத்து கழுவாமல் வாகனங்கள் வந்து செல்லும் சாலையில் வைத்து கழுவி இருப்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. பெங்களூருவில் இவ்வாறான நிகழ்வுகளை சாதாரணமாக நிறைய இடங்களில் பார்க்க முடியும்.


Click it and Unblock the Notifications









