கண்ணை மூடி 1 முதல் 5400 எண்ணுறதுக்குள் பெங்களூருல இருந்து மைசூரு போயிடலாம்!

இந்தியாவில் மிகச்சிறந்த எக்ஸ்பிரஸ் சாலையாக டில்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலை உருவாகி வருகிறது. இது பற்றிக் கடந்த வாரம் முழுவதும் செய்திகள் வெளியாகி வந்தன. அதைப் பற்றி நாமும் செய்திகளைப் பதிவிட்டிருந்தோம். அதற்கு அடுத்தபடியாக மற்றொரு தகவல்களும் வெளியாகியுள்ளது. இந்த மாத இறுதியில் பிரதமர் மோடி மற்றொரு தேசிய நெடுஞ்சாலையைத் திறந்து வைக்கப்போகிறோர். இதுவும் இந்தியாவில் உள்ள மிகச்சிறந்த எக்ஸ்பிரஸ் சாலைகளில் இதுவும் ஒன்று.

கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து மைசூரு வரை இந்த எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இரு நகரங்களையும் இணைக்கும் வகையில் சுமார் 117 கி.மீ தூரத்திற்கு இந்த எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் ஏற்கனவே இருந்த என்எச்275 என்ற சாலையைத் தான் 10 லேன்களாக மாற்றி எக்ஸ்பிரஸ் சாலையைக் கட்டமைத்துள்ளனர்.

கண்ணை மூடி 1 முதல் 5400 எண்ணுறதுக்குள் பெங்களூருல இருந்து மைசூரு போயிடலாம்!

இந்த தேசிய நெடுஞ்சாலை ஏற்கனவே பயன்பாட்டில் இருப்பதால் அதில் போக்குவரத்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. அதை விஸ்தரித்து எக்ஸ்பிரஸ் சாலையாக மாற்றும் பணி நடந்தது. இதற்காக ரூ8,350 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலை கூடிய விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எக்ஸ்பிரஸ் சாலையில் பெங்களூருவில் உள்ள நைஸ் ரோடு பகுதியையும், மைசூருவில் உள்ள ரிங்ரோடு ஜங்சன் பகுதியையும் இணைக்கும் வகையில் உள்ளது.

முன்னதாக இந்த இரு நகரங்களுக்கும் இடையே போக்குவரத்து சுமார் 180 நிமிடங்களாக இருந்தது. ஆனால் தற்போது அது பாதியாக அதாவது வெறும் 90 நிமிடங்களாக மாறியுள்ளது. மேலும் இந்த சாலையில் ஒரே நேரத்தில் அதிகமான வாகனங்கள் செல்லும் படி இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஒட்டு மொத்த எக்ஸ்பிரஸ் சாலையில் மொத்தம் 9 பெரிய பாலங்கள், 42 சிறிய பாலங்கள், 64 அண்டர் பாஸ்கள், 11 ஓவர் பாஸ்கள், 4 ரோடு ஓவர் பாலம் ஆகிய ஆப்ஷன்கள் .ள்ளது.

இந்த எக்ஸ்பிரஸ் சாலை 5 பைபாஸ்களை இணைக்கிறது. ஸ்ரீரங்கபட்டினம் பைபாஸ், மாண்டியா பைபாஸ், பிடதி பைபாஸ்,ராம் நகரா மற்றும் சன்னபட்டணா பைபாஸ் ஆகியவற்றை இணைக்கிறது. இந்த பைபாஸ்கள் எல்லாம் போக்குவரத்து நெருக்கடியைக் குறைப்பதற்காகக் கட்டமைக்கப்பட்டது. இந்த எக்ஸ்பிரஸ்சாலையில் டோல்கேட்களும் அமைக்கப்பட்டுள்ளது.

அதில் ஒரு பக்கம் கடந்து செல்ல ரூ250 டோல்கேட் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த எக்ஸ்பிரஸ் சாலையில் பெங்களூரு முதல் நிடாகட்டா பகுதி வரை ஒரே ரோடா கருதப்பட்டு அதற்கு ரூ135 கட்டணமும், நிடாகட்டாவிலிருந்து மைசூரு வரை செல்ல ரூ115 கட்டணமும் டோல்கேட் கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் முதற் கட்டமாகப் பெங்களூரு முதல் நிடாகட்டா வரை மட்டுமே டோல்கேட் கட்டணம் வசூலிக்கப்படும் இரண்டாம் கட்டமாக வே நிடாகட்டா- மைசூரு டோல் கட்டணம் வசூலிக்கப்படும். இது எப்பொழுது துவங்கும் என்பது குறித்து இதுவரை அறிவிப்புகள் இல்லை.

இந்த டோல்கேட்களில் மொத்தம் 10க்கும் அதிகமான வழிகள் இருக்கிறது. அனைத்தும் ஃபாஸ்ட் டேக் கொண்ட வழிகளாகும். இதன் வழியாக வாகனங்கள் பயணிக்கும் போது அதிகமா வாகனம் செல்ல முடியும் இதனால் கூட்ட நெரிசல் குறையும். இந்த எக்ஸ்பிரஸ் சாலையில் வாகனங்கள் வேகமாகச் செல்ல முடியும். இதில் வாகனங்கள் 100-120 கி.மீ வேகம் வரை செல்ல அனுமதியிருக்கிறது. அதனால் இந்த சாலையில் 120 கி.மீ வேகம் வரை வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த சாலையில் டோல் கேட் திறக்கப்பட்ட பிறகு 2 மற்றும் 3 சக்கர வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த எக்ஸ்பிரஸ் சாலையில் பிட்ஸ்டாப் உள்ளது சன்னபட்டணா பகுதியில் சுமுார் 30 ஏக்கம் நிலத்தில் வாகன ஓட்டிகளுக்குத் தேவையான கழிவறை, சர்வீஸ் ஸ்டேஷன், அவசர உதவி உள்ளிட்ட பல வசதிகளுடன் பிட் ஸ்டாப் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இங்கு உணவு, பெட்ரோல் பங்க், இவி சார்ஜிங் ஸ்டேஷன்கள் உள்ளிட்ட வசதிகளும் இடம் பெற்றுள்ளது. ஆனால் இது பயன்பாட்டிற்கு வர இன்னும் சில மாதம் ஆகும் எனத் தெரிகிறது.

Article Published On: Friday, February 17, 2023, 18:30 [IST]
English summary
Bengaluru Mysore expressway facilities tolls and other details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+