நம்ம ஊர் காரங்களுக்கு மெட்ரோ இரயில்லாம் எந்த மூலைக்கு!! இப்போவே கட்டுக்கடங்காத கூட்டம் நிரம்பி வழியுது!

மெட்ரோ வாழ்க்கை நம்மை எந்த அளவிற்கு ஆட்டிப் படைக்கிறது என்பதற்கு சாட்சியாக பெங்களூரில் மெட்ரோ இரயில்களில் கூட்டம் அள்ளுகிறது. இது தொடர்பான படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அவற்றை இனி பார்க்கலாம்.

மின்சார லோக்கல் இரயில்கள் அறிமுகம் செய்யப்பட்ட போது இந்த இரயில்கள் எதிர்காலத்தில் அதிகளவில் பயன்படுத்தப்படும் என கணிக்கப்பட்டது. அதேபோல், கடந்த பல வருடங்களாக சென்னை, மும்பை போன்ற மாநகரங்களின் பொது போக்குவரத்தில் உயிர்நாடியாக லோக்கல் எலக்ட்ரிக் இரயில்கள் விளங்குகின்றன.

bengaluru namma metro over rush

நம் சென்னையை காட்டிலும், மும்பையில் எலக்ட்ரிக் இரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. அதிலிலும் குறிப்பாக, பகல் மற்றும் இரவு நேரங்களில் சென்றீர்கள் என்றால், ஒரு பக்கம் நசுக்கி ஜூஸாக வெளியே அனுப்புவார்கள். இத்தகைய சூழல் தான் இப்போதே பெங்களூர் மெட்ரோ இரயில்களில் ஏற்பட ஆரம்பித்துவிட்டது.

மெட்ரோ இரயில்கள் நமது எதிர்காலம் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்தியாவின் முக்கிய மாநகரங்கள் அனைத்திலும் கிட்டத்தட்ட மெட்ரோ இரயில் சேவைகள் வந்துவிட்டன. டெல்லி, மும்பைக்கு அடுத்து மெட்ரோ இரயில்கள் அதிகளவில் பெங்களூரில் தான் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், நாம் எதிர்பார்த்ததை விட விரைவாகவே பெங்களூர் மெட்ரோ இரயில்களில் கூட்டம் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது.

bengaluru namma metro over rush

எல்லா ஊர்களிலும் மெட்ரோ இரயில்களை பயன்படுத்துவோர் கடந்த சில ஆண்டுகளில் வெகுவாக அதிகரித்துள்ளனர் என்றாலும், இந்தியாவில் வேகமாக வளர்ந்துவரும் மாநகரமான பெங்களூரில் மெட்ரோ இரயில் பயணிகளின் எண்ணிக்கை ஒரேடியாக உயர்ந்துள்ளது. இதனை வெளிக்காட்டும் வகையில், இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோக்கள் நமக்கு பகல்நேர மும்பை லோக்கல் இரயில் நிலையத்தை தான் ஞாபகப்படுத்துகின்றன.

'ஜப்பானில் காலை நேரத்தில் மெட்ரோ இரயில்' என்ற கேப்ஷனில் சில வீடியோக்களை இணையத்தில் பார்த்திருப்பீர்கள். உள்ளே நுழைய முடியாததால், ஒருவர் அடுத்த இரயிலுக்காக தள்ளப்படுவது போல் அந்த ஜப்பானிய வீடியோக்களில் காட்டப்பட்டிருக்கும். கிட்டத்தட்ட அதேபோன்ற சூழல் தான் இப்போதே பெங்களூர் மெட்ரோ இரயில்களில் ஏற்பட ஆரம்பித்துவிட்டது.

bengaluru namma metro over rush

ஜப்பானில் மெட்ரோ இரயில்கள் 1900ஆம் காலக்கட்டங்களில் இருந்து செயல்பாட்டில் உள்ளன. இதனால் அங்கிருப்பவர்கள் அனைவருக்கும் மெட்ரோ இரயில்களை பற்றி நன்கு தெரிந்திருக்கும் மற்றும் மெட்ரோ இரயில் நிலையங்கள் எளிதில் அணுகக்கூடியவைகளாக இருக்கும். ஆனால், பெங்களூரில் கடந்த 10 வருடங்களாக தான் மெட்ரோ இரயில்கள் இயங்கி வருகின்றன.

அதற்குள் இவ்வாறு கட்டுக்கடங்காத கூட்டம் உருவாக ஆரம்பித்துவிட்டது. இதற்கு முக்கிய காரணம், நம் இந்திய நாட்டின் மக்கள் தொகை தான். நாட்டின் மக்கள் தொகை ஒவ்வொரு நாளும் அசூர வளர்ச்சி அடைந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு, உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் பட்டியலில் சீனாவை முந்தி இந்தியா முதலிடத்தை பிடித்தது உங்களில் சிலருக்கு நினைவிருக்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த கூட்ட நெரிசலுக்கு மெட்ரோ இரயில் நிலைய அதிகாரிகளையோ அல்லது மெட்ரோ இரயில்களின் வடிவமைப்பையோ குறை சொல்ல முடியாது. ஏனெனில், பல்வேறு சோதனைகளுக்கும், ஆய்வுகளுக்கும் பிறகே எந்தவொரு மெட்ரோ இரயிலும் உருவாக்கப்படுகின்றன. ஆதலால், இந்த பிரச்சனைக்கு கூடுதல் மெட்ரோ இரயில்களை அரசாங்கங்கள் கொண்டு வருவதுதான் ஒரே வழி.

More from DriveSpark

Article Published On: Saturday, October 28, 2023, 17:58 [IST]
English summary
Bengaluru namma metro over rush like mumbai local train all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X