பார்க்கிங் பிரச்சனையை குணமா சொன்ன பக்கத்து வீட்டுக்காரர் எப்படி இப்படி யோசிச்சாரு?

பார்க்கிங்கிற்காக பலர் குடுமிபிடி சண்டை போட்டுக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், தன் பார்க்கிங் ஏரியாவில் பக்கத்து வீட்டுக்காரர் காரை நிறுத்தியதை ஒருவர் குணமாக எடுத்துச் சொன்ன சம்பவம் சமீபத்தில் பெங்களூருவில் நடந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை இங்கே காணலாம் வாருங்கள்.

லட்சக்கணக்கில் காசு கொடுத்து கார் கூட வாங்கி விடலாம், ஆனால் அந்தக் காரை பார்க்கிங் செய்வது தான் மிகப்பெரிய பிரச்சினை. இந்த பார்க்கிங் பிரச்சனையால் பல அபார்ட்மெண்ட்களில் பக்கத்து வீட்டார்களுடன் பலர் சண்டை போட்டு வருகின்றனர். இந்தப் பிரச்சனை பெரும் தீராத பிரச்சனையாக இருக்கிறது.

peak bengaluru

முக்கியமாக சென்னை, பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் கார் வைத்திருப்பவர்கள் அதற்கான பார்க்கிங் வசதி இல்லாமல் சாலையிலேயே காரை நிறுத்தி வருகின்றனர். இதிலும் பிரச்சனை வருகிறது. இப்படியாக பார்க்கிங் சம்பந்தமான பிரச்சினைகள் எல்லாம் பெரும் கலவரங்களாகவே இருந்து வந்த நிலையில் சமீபத்தில் ஒருவர் இந்த பிரச்சனையை அசால்டாக கையாண்டுள்ளார்.

பெங்களூருவை சேர்ந்த ஒருவர் அவரது பார்க்கிங் ஸ்லாட்டில் பக்கத்து வீட்டுக்காரரின் கார் பார்க் செய்திருந்ததை பார்த்துள்ளார். இந்த இடத்தில் கார் பார்க் செய்வது தொடர்பாக ஏற்கனவே இவர் பக்கத்து வீட்டாரிடம் ஆட்சேபனை தெரிவித்திருந்ததாக தெரிகிறது. இதையடுத்து மீண்டும் பக்கத்து வீட்டுக்காரர் காரை பார்க் செய்துள்ளார்.

peak bengaluru

இதைப் பார்த்ததும் அவர் கோபப்பட்டு பக்கத்து வீட்டுக்காரருடன் சண்டைக்கு செல்லாமல் ஒரு பேப்பரை எடுத்து பக்கத்து வீட்டுக்காரருக்கு நிலைமை புரியும்படி அதில் விளக்கமாக எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டு இருந்ததாவது"உங்கள் காரை இங்கே பார்க் செய்யாதீர்கள். இதற்கு முன்பே இவ்வாறு செய்யாதீர்கள் என உங்களிடம் சொல்லியிருந்தேன்.

நாங்கள் இந்தப் பகுதியில் 2000 ஆவது ஆண்டு முதல் வசித்து வருகிறோம். எங்களிடம் இரண்டு சொந்தமான கார்கள் உள்ளன. இதனால் எங்களுக்கு போதுமான பார்க்கிங் இடம் தேவை. இதனால் உங்கள் காரை நீங்கள் இதற்கு முன்பு நிறுத்தி இருந்த இடத்திற்கு கொண்டு சென்று நிறுத்துங்கள். நாம் நல்ல நெய்பர்களாக இருப்போம். இப்படிக்கு உங்கள் நெய்பர்" என குறிப்பிட்டிருந்தார்.

இதை அப்பகுதியில் சென்ற ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களை பகிரவே இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது. பார்க்கிங் செய்வதில் ஆங்காங்கே பல்வேறு பிரச்சனைகள், சண்டைகள், கைகலப்புகள் எல்லாம் நடந்து வரும் நிலையில் இது போன்று பார்க்கிங் பிரச்சனையை மிக சுலபமாகவும் அதே நேரத்தில் தவறாக பார்க்கிங் செய்ததற்கு புரியும் படியும் இவர் பேப்பரில் எழுதி ஒட்டியது பார்ப்பவர்களை வியக்க வைத்தது.

இவர் பேப்பரில் எழுதி காரின் டிரைவர் சீட்டின் பக்கம் உள்ள கண்ணாடியில் காரை பக்கத்து வீட்டுக்காரர் எடுக்க வரும்போது அவருக்கு நன்றாக தெரியும் படி எழுதி ஒட்டி இருந்தார். இந்த ஐடியா பலருக்கு பிடித்து இருந்தது பலர் இந்த ஐடியாவை தானும் பின்பற்ற போவதாக சமூக வலைதளங்களில் கடத்திட்டு வருகின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நீங்கள் சொந்தமாக ஒரு காரை வாங்கப் போகிறீர்கள் என்றால் அந்த காரை உங்களது இடத்தில் நிறுத்த உங்களுக்கு போதுமான இடவசதி இருக்கிறதா என்பதை உறுதி செய்துவிட்டு பின்னர் காரை வாங்குங்கள். காரை வாங்குவதை விட அதை பத்திரமாக பாதுகாப்பாக பேணிக் காப்பது தான் மிக முக்கியமான. பார்க்கிங் பிரச்சினை இருந்தால் என்றுமே உங்கள் காருக்கு ஆபத்து இருக்கும். அதே நேரம் மற்றவர்களுக்கு தொந்தரவு ஆகவும் இருக்கும்

More from DriveSpark

Article Published On: Thursday, June 29, 2023, 19:26 [IST]
English summary
Bengaluru neighbors polite note on no parking viral on internet
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+