உங்க வண்டி மேல ஆசை இல்ல அல்லது வேணாம்னா இப்படி பண்ணிக்கோங்க.. ஆர்சி, லைசென்ஸ் ரெண்டையும் கேன்சல் பண்ணிருவாங்க!
வாகன ஸ்டண்ட், மிகவும் ஆபத்தான போக்குவரத்து விதிமீறல்களில் இதுவும் ஒன்றாகும். இந்த செயல், அதை செய்பவர்களுக்கு மட்டுமல்ல சக வாகன ஓட்டிகளுக்கும் பேராபத்தை ஏற்படுத்தக் கூடியது ஆகும். இதனால்தான் இந்த வாகன ஸ்டண்ட் செயலில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறை மிகக் கடுமையான நடவடிக்கையை எடுத்துக் கொண்டிருக்கின்றது. இருப்பினும், இந்த செயலில் ஈடுபடும் ஒரு சிலர் தொடர்ந்து அந்த செயலை அரங்கேற்றிய வண்ணமே இருக்கின்றனர். இத்தகையோருக்கே காவல்துறை தற்போது மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அதாவது, வாகன ஸ்டண்டில் ஈடுபடும் நபர்களுக்கு மிகக் கடுமையான அபராதத்துடன், மிக தீவிரமான நடவடிக்கையும் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கின்றது. வாகனத்தின் ஆர்சி பதிவை ரத்து செய்வது மற்றும் ஓட்டுநர் உரிமத்தை கேன்சல் செய்வது போன்ற நடவடிக்கைகளே எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.

வாகன ஸ்டண்ட் விசயத்தில் தயவுதாட்சனை இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. இந்த அறிவிப்பை பெங்களூரு போக்குவரத்து காவல்துறை இணை ஆணையரே அறிவித்திருக்கின்றார். நல்ல வேளை சென்னையில் இல்லை என நினைக்க வேண்டாம். நம்ம ஊரிலும் இந்த மாதிரியான கடுமையான நடவடிக்கையையே காவல்துறை எடுத்து வருகின்றது.
ஆனால், இதைவிட தீவரமான நடவடிக்கையாகவே பெங்களூருவில் தற்போது அறிவிக்கப்பட்டு இருப்பது உள்ளது. வாகன ஸ்டண்டில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் வாகன பதிவு இரண்டும் உடனடியாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. இதுகுறித்த வீடியோ பதிவையும் காவல்துறை தற்போது வெளியிட்டு உள்ளது.
இது வாகன ஸ்டண்டில் ஈடுபடுபவர்களின் வயிற்றில் புளியைக் கரைக்கச் செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்தியாவில் நாளுக்கு நாள் விபத்துகளின் எண்ணிக்கை மிகப் பெரிய அளவில் உயர்ந்துக் கொண்டிருக்கின்றது. இதுமட்டுமல்ல விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளும் பன்மடங்காக அதிகரித்துக் காணப்படுகின்றன. இதற்கு வாகன ஸ்டண்ட்டும் ஓர் முக்கிய காரணமாக உள்ளது.
எனவேதான் இந்த செயலைக் கலையெடுக்கும் எடுக்கும் பொருட்டு பெங்களூரு நகர போக்குவரத்துக் காவல்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றது. சமீபத்தில்கூட கும்பலாக வாகன ஸ்டண்டில் ஈடுபட்டவர்களின் டூ-வீலரை பொதுமக்கள் சிலர் சேர்ந்து மேம்பாலத்தில் தூக்கி கீழே வீசிய சம்பவம் இந்தியாவில் அரங்கேறியது.
இதுமட்டுமல்ல இதுபோன்று இன்னும் பல சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன. வாகன ஸ்டண்டில் ஈடுபட்டவர்கள் மீது வாகனத்தை விட்டு மோதியது மற்றும் தாக்குதலை நிகழ்த்தியது என்பது பல்வேறு நிகழ்வுகள் நாட்டில் அரங்கேறி இருக்கின்றன. எனவே வாகன ஸ்டண்ட் வெறும் விபத்தை ஏற்படுத்தக் கூடியதாக மட்டுமல்ல இது சில நேரங்களில் மிகப் பெரிய மோதல்களுக்கும் வழி வகுக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன ஸ்டண்ட்-க்கு ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகின்றது. இத்தகைய கடுமையான அபரதாதத்துடனேயே லைசென்ஸ் மற்றும் வாகன பதிவு ரத்து உள்ளிட்ட நடவடிக்கைளை எடுக்க இருக்கின்றது பெங்களூரு நகர போக்குவரத்துக் காவல்துறை. இத்தகைய நடவடிக்கையே தேவை என சமூக நல ஆர்வலர்கள் சிலர் கருத்து தெரிவித்து இருக்கின்றனர். வாகன ஸ்டண்ட்டால் பாதிக்கப்பட்டவர்களும் இதையேதான் சொல்கின்றனர்.


Click it and Unblock the Notifications








