ஏழுமலையானை தரிசிக்க ஹெலிகாப்டர் சேவை அறிமுகம்.. இதற்கான கட்டணம் எவ்வளவு தெரியுமா?

திருப்பதி ஏழு மலையானின் தீவிர ரசிகரா (பக்தரா) நீங்க. இனி திருப்பதிக்கு ரயில், கார் மற்றும் பேருந்துகளில் மட்டுமல்ல வான் வழியாகவும் போக முடியும். இதற்கான சூப்பர் சேவையையே பிரபல நிறுவனம் ஒன்று தற்போது தொடங்கி வைத்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

நாடு முழுவதிலும் இருந்து திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் தினந்தோறும் ஆயிரக் கணக்கில் வந்த வண்ணம் இருக்கின்றனர். இந்த மாதிரியான சூழலில் ஏழுமலையானின் பக்தர்கள் விரைவில் கோவிலை தரிசிக்க ஏதுவாக முன்னணி நிறுவனம் ஒன்று வான்வழி சேவையை முதல் முறையாக தொடங்கி இருக்கின்றது.

Bengaluru tirupati helicopter service

பிளேட் (Blade India) எனும் நிறுவனமே வான் வழி சேவையைத் தொடங்கி இருக்கின்றது. அது அதன் ஹெலிகாப்டர் சேவையைத் தொடங்கி உள்ளது. இந்த நிறுவனம் இப்போது முதல் கட்டமாக பெங்களூரு-டூ-திருப்பதி சேவையையே தொடங்கி இருக்கின்றது. 3 லட்சத்து 50 ஆயிரம் இதற்கு கட்டணம் ஆகும்.

இது ஒரு நபருக்கான கட்டணம் என ஷாக்காகிவிட வேண்டாம். ஒட்டுமொத்த போக்குவரத்திற்குமான செலவாகும். இந்த கட்டணத்தைச் செலுத்தினால் 5 பேர் வரை திருப்பதிக்கு சென்று வர முடியும். ஆமாங்க, கோவிலுக்கு போய்விட்டு ஏழுமலையானை தரிசனம் செய்து பின்னர் மீண்டும் பெங்களூருவுக்கே வந்து சேர்ந்துவிட முடியும்.

Tirupati devasthanam

ஆகையால், இதனை பேக்கேஜ் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனால், இது வெறும் டிராவலுக்கான கட்டணம் மட்டுமே என கூறப்படுகின்றது. வேறு எந்த சிறப்பு வசதிகளும் செய்து தரமாட்டாது என தெரிகின்றது. பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இருந்தே ஹெலிகாப்டர் புறப்படும்.

காலை சுமார் 9.15 மணி அளவில் ஹெலிகாப்டர் டேக் ஆஃப் செய்யப்படும். அடுத்த ஒரு சில நிமிடங்களிலேயே திருப்பதி கோவிலில் பக்தர்கள் கொண்டு சேர்க்கப்படுவர். பின்னர், மாலை மீண்டும் 4 மணி அளவில் திருப்பிதியில் இருந்து ஹெலிகாப்டர் புறப்பட்டு பெங்களூருவை அடுத்த சில நிமிடங்களிலேயே வந்து சேரும்.

Tirumala tirupati

இடைப்பட்ட நேரத்திலேயே பக்தர்கள் ஏழுமலையான தரிசித்துக் கொள்ள முடியும். வயதானவர்கள், உடல் முடியாத பக்தர்கள் விரைவில் ஏழுமலையானை தரிசனம் செய்யும் விதமாக இந்த சேவையை பிளேட் நிறுவனம் தொடங்கி வைத்திருக்கின்றது. இந்த நிறுவனம் அந்த மாநிலத்தின் (கர்நாடகாவின்) உள் மாவட்டங்கள் சிலவற்றையும் இணைக்கின்ற வகையில் சேவையை வழங்கிக் கொண்டிருக்கின்றது.

அந்தவகையில், சமீபத்தில் பெங்களூருவில் இருந்து கூர்க் மற்றும் கபினியை இணைக்கின்ற வகையிலான ஹெலிகாப்டர் சேவையை அது தொடங்கியது. இந்த சேவையில் ஒரு நபருக்கு ரூ. 20 ஆயிரம் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது. இதுதவிர சில லோக்கல் ஹெலிகாப்டர் சர்வீஸையும் அது வழங்கிக் கொண்டிருக்கின்றது.

Helicopter service from bengaluru to tirupati

இந்தியாவில் உள்ள மிக முக்கியமான கோவில்களில் திருப்பதி கோவிலும் ஒன்றாகும். இங்கு தினந்தோறும் ஏழுமலையானை தரிசிக்க பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். தரை மற்றும் இருப்புப் பாதை மார்க்கமாக மட்டுமே இதுவரை பக்தர்கள் அக்கோவிலுக்கு செல்ல முடியும் என்கிற சூழல் நிலவி வந்தது.

இந்த நிலையிலேயே பிளேட் இந்தியா நிறுவனம் முதல் நிறுவனமாக, முதல் முறையாக திருப்பதி கோவிலுக்கு வான் வழி சேவையைத் தொடங்கி இருக்கின்றது. இது திருப்பதி ஏழுமலையானின் பக்தர்களுக்கு குஷியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. இது சற்று காஸ்ட்லியான போக்குவரத்து சேவை என்பதால் பணக்காரர்களால் மட்டுமே நுகரக் கூடிய சேவையாக காட்சியளிக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வரும் காலங்களில் திருப்பதி கோவிலை இணைப்பதற்கான வான் வழியை சேவை இன்னும் சில முன்னணி நிறுவங்களும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அப்போது, மிகவும் குறைவான கட்டணத்தில் பக்தர்கள் திருப்பதி கோவிலுக்கு அழைத்துச் செல்ல நேரிடலாம். இந்த நாள் கூடிய விரைவிலேயே வரும் என்பதே அனைத்து ஏழுமலையான் பக்தர்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, June 9, 2023, 15:23 [IST]
English summary
Bengaluru tirupati helicopter service here is full details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X