சென்னை டூ பெங்களூரு வெறும் 2 மணி நேரம் தான்! வேற லெவல்ல எக்ஸ்பிரஸ் சாலை ரெடியாகிட்டு இருக்குது!
சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு தயாராகிவிடும் என மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மேலும் இவர் இந்த சாலை வழியாக சென்னையிலிருந்து வெறும் 2 மணி நேரத்தில் பெங்களூருக்கு சென்று விட முடியும் எனவும் தெரிவித்துள்ளார். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் சென்னையில் இருந்து பெங்களூருவை இணைக்கும் வகையில் புதிய எக்ஸ்பிரஸ் சாலை ஒன்று கட்டமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலைக்கான ரிவியூ கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி சென்னை வந்தார் சென்னையில் அதிகாரிகளுடன் அவர் கலந்து ஆலோசனை நடத்தினார்.

சென்னையில் இருந்து பெங்களூருக்கு தற்போது என்இ 7 என்ற தேசிய எக்ஸ்பிரஸ் சாலை கட்டமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக ரூபாய் 17,000 கோடியை செலவு செய்துள்ளது. இதன்படி 25 கிலோமீட்டர் நீளத்திற்கு புதிதாக சாலை கட்டமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை நான்கு வழி சாலையாக கட்டமைக்கப்படுகிறது. மேலும் இதில் சர்வீஸ் ரோடு சாலைகளும் சேர்த்து கட்டமைக்கப்படுகிறது.
இந்த சாலை கட்டமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும்போது இந்த சாலையில் வாகனங்கள் 120 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் அளவிற்கு அனுமதி வழங்கப்படும் என தெரிகிறது. மேலும் இந்த சாலை ஏற்கனவே சென்னையில் இருந்து பெங்களூருக்கு இணைக்கும் சாலையின் தூரத்தை 40 கிலோ மீட்டர் வரை குறைக்கிறது.
இந்த 40 கிலோ மீட்டர் வரை குறைப்பதே சென்னை பெங்களூர் இடையே உள்ள பயண நேரத்தை வெகுவாக குறைக்கும். இந்நிலையில் இந்த சாலையில் 120 கிலோமீட்டர் வேகம் வரை அனுமதிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் இதன் பயணம் நேரம் குறைந்து வெறும் 2 மணி நேரம் 15 நிமிடத்தில் சென்னையிலிருந்து பெங்களூருவை அடைய முடியும் என மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இந்த புதிய என்இ 7 தேசிய எக்ஸ்பிரஸ் சாலை பெங்களூருவில் உள்ள ஹோசகோைட்டே பகுதியில் துவங்கி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இணைக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை பங்கார்பேட், பலமானார், சித்தூர் வழியாக ஸ்ரீபெரும்புதூர் வந்தடையும் வகையில் கட்டமைக்கப்படுகிறது. இந்த சாலை இரண்டு கட்டங்களாக கட்டமைக்கப்படுகிறது.
மொத்தமுள்ள இந்த சாலையில் 85 கிலோ மீட்டர் ஆந்திர மாநிலத்தில் பயணிக்கும் படி கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் இது காட்டுப் பகுதியான பலமனார் என்ற பாதுகாக்கப்பட்ட காட்டுப்பகுதி மற்றும் கவுந்தினியா வனவிலங்குகள் சரணாலயம் பகுதியை கடக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் பணிகள் திவிரமாக நடந்து வருகிறது.
மத்திய அரசு கர்நாடக மாநிலத்தில் மொத்தம் 8005 கிலோ மீட்டர் நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலையை அமைப்பதாக உறுதி அளித்திருந்தது. தற்போது இந்த சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையும் இந்த திட்டத்திற்குள் தான் வருகிறது. இந்த திட்டத்தில் கர்நாடக மாநிலம் அதிகமான பலனை பெற்றுள்ளது.
மத்திய அமைச்சர் சொன்னது படி இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த எக்ஸ்பிரஸ் சாலை செயல்பாட்டுக்கு வந்து விடுமா என ஆய்வு செய்தால் இந்த சாலையில் பல இடங்களில் 10% பணிகள் கூட இன்னும் முடிவடையாமல் இருக்கிறது. முக்கியமாக தமிழக பகுதிகளில் பணிகள் ஆமை வேகத்தில் தான் நடந்து வருகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சென்னை பெங்களூர் தேசிய எக்ஸ்பிரஸ் சாலை நிச்சயம் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் பயண நேரத்தை குறைக்கும் வகையில் இருக்கும். ஆனால் இது மத்திய அமைச்சர் சொன்னத படி சரியான நேரத்தில் பயன்பாட்டுக்கு வந்து விடுமா என்பது சந்தேகமாக தான் இருக்கிறது, மத்திய அரசு பணிகளை துரிதப்படுத்தினால் சாத்தியம் ஆகலாம்.


Click it and Unblock the Notifications