சிவப்பு சிக்னல்ல நிக்காம போனாலும் அபராதம் கிடையாது! புது ரூல்ஸை அறிவித்த போலீசார்!
பொதுவாக சிக்னலில் ஒரு வாகனம் நிற்காமல் போனால் அந்த வாகனத்திற்கு போலீசார் அபராதம் விதிப்பார்கள். சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில் ஏராளமான வாகனங்கள் சட்ட விதிமுறைகளை மீறுவதால் இது கண்காணிப்பதற்காக தானியங்கி கேமராக்களை பொருத்தி இருக்கிறார்கள். ஆனால் குறிப்பிட்ட சில தவறுகளுக்கு மட்டும் அபராதம் விதிக்கப்படாது என தற்போது பெங்களூர் போலீசார் தெரிவித்துள்ளனர். என்னென்ன தவறுகளுக்கு அபராதம் விதிக்கப்படாது? எதற்காக இந்த சலுகை வழங்கப்பட்டது என்ற விபரங்களை காணலாம் வாருங்கள்.
பொதுவாக சாலைகளில் செல்லும்போது சட்ட விதிமுறைகளை மதித்து வாகனம் ஓட்ட வேண்டும் அப்பொழுதுதான் உங்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதில் இருந்து தப்பிக்க முடியும். சென்னை,பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் சட்ட விதிமுறைகளை மேலும் வாகனங்களை கண்காணிப்பதற்காக ஆங்காங்கே தானியங்கி கேமராக்களை வைத்துள்ளார்கள். இந்த கேமராக்கள் ஏஐ தொழில்நுட்பம் மூலம் சட்ட விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகளுக்கு தானாக அபராதம் விதிக்கிறது.

இந்நிலையில் பெங்களூரு போக்குவரத்து போலீசார் இப்படியாக அபராதம் விதிக்கப்படுவதற்கு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளனர். அதன்படி இனி சிக்னல்களில் நிற்கும் போது குறிப்பிட்ட வாகனங்களுக்கு பின்னால் ஆம்புலன்ஸ் வந்து நின்றால் அந்த வாகனங்கள் சிக்னலை மதிக்காமல் சென்றாலும், அந்த வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு போன்ற பெருநகரங்களில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் முக்கியமான நேரங்களில் முக்கிய சாலைகளில் அதிகமான வாகனங்கள் சாலையில் நிற்கும் இந்த நேரங்களில் ஆம்புலன்ஸ் வந்தால் ஆம்புலன்ஸ்களும் போக்குவரத்து நெருக்கடிக்குள் சிக்கிக் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. இதனால் ஆம்புலன்ஸ் வரும்போது அங்கிருக்கும் போலீசார் விதிமுறைகளை மீறி வாகனங்களை சிக்னலை தாண்டி செல்ல சொல்லி ஆம்புலன்ஸிற்க்கு வழி ஏற்படுத்துவார்கள்.

இப்படியாக நடந்த சில சம்பவங்களில் சிக்னலில் வாகனங்கள் நிற்காமல் சென்றதாக தொழில்நுட்பம் மூலம் கேமராக்கள் சிக்னலை மீறி சென்ற வாகனங்களை கண்டறிந்து அந்த வாகனங்களுக்கு அபராதம் விதித்தன. இதையடுத்து பொதுமக்கள் இது குறித்து புகார் அளித்தன.ர் அதன் பெயரில் தற்போது பெங்களூரு போக்குவரத்து போலீசார் இப்படியான விதிமுறை மீறலுக்கு விலக்கு அளிப்பதாக தெரிவித்துள்ளார்கள்.
இதனால் பெங்களூர் பகுதியில் வாகனம் ஓட்டி செல்லும் போது இதுபோன்ற விதிமுறை மீறலுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக அவர்கள் அருகில் உள்ள பெங்களூரு போக்குவரத்து காவல் நிலையத்தை அணுகி அவர்களது அபராத செல்லானை கேன்சல் செய்ய தற்போது வசதி ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை இப்படியாக விதிக்கப்பட்ட அபராதத்திற்கு யாராவது அபராதம் செலுத்தி இருந்தாலும், அந்த அவரது தொகையை திரும்ப பெறுவதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் போக்குவரத்து நெருக்கடியில் ஆம்புலன்ஸ் சிக்குவதை சமாளிக்க தற்போது புதிய தொழில்நுட்பம் ஒன்றை கையில் எடுக்க பெங்களூர் போக்குவரத்து போலீசார் முடிவு செய்துள்ளார்கள்.
அதன்படி, பெங்களூரு சிட்டி பகுதிக்குள் இயங்கும் ஆம்புலன்ஸ்களில் ஜிபிஎஸ் கருவியை பொருத்தி அந்த ஜிபிஎஸ் கருவிகள் எப்போதும் ஆன்லைனில் சிக்னலுடன் இணைப்பில் இருக்கும் படி புதிய தொழில்நுட்பம் ஒன்றை வடிவமைக்க உள்ளார்கள். அதன்படி அந்த ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட வாகனம் சிக்னல் அருகே வந்தால் தானியங்கியாக செயல்படும்.
ஆம்புலன்ஸ் அருகே வரும் நேரத்தில் அந்த சிக்னல் பச்சை நிறத்திற்கு மாறி அந்த ஆம்புலன்ஸ் சிக்னலை கிடக்கும் வரை எந்த டிராபிக்கும் ஏற்படாத வகையில் டிராபிக் டிராபிக்கை தன்னைத்தானே ஒழுங்குபடுத்திக் கொள்ளும் வகையில், இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளார்கள். இது முதல் கட்டமாக குறிப்பிட்ட சிக்னல்களை அதிகமாக கடந்து செல்லும் 10 ஆம்புலன்ஸ்களில் மட்டும் பொருத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெங்களூரு டிராபிக் போலீசார் ஆம்புலன்ஸ் செல்வதற்காக வழியை ஏற்படுத்துவதற்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளது நிச்சயம் வரவேற்கத்தக்கது தான். ஆம்புலன்ஸ்காக சாலை விதிமுறைகளை மீறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதை ரத்து செய்து அவர்களுக்கு பணத்தை திரும்ப வழங்கும் முயற்சியை எடுத்தது நிச்சயம் பாராட்டத்தக்கது.


Click it and Unblock the Notifications









