பகல் கொள்ளையா இருக்கே! ரூ11 லட்சம் காரை ரிப்பேர் செய்ய ரூ22 லட்சம் பில் போட்ட ஷோரூம்... நடந்தது என்ன?

ஃபோக்ஸ்வேகன் போலோ கார் பெங்களூரு வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் அதை ரிப்பேர் செய்ய ரூ22 லட்சம் செலவாகும் என ஷோரூம் சர்வீஸ் சென்டர் பில் அனுப்பியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

பகல் கொள்ளையா இருக்கே . . . ரூ11 லட்சம் காரை ரிப்பேர் செய்ய ரூ22 லட்சம் பில் போட்ட ஷோரூம் . . . நடந்தது என்ன . . .

நாம் அனைவரும் புதிதாக கார் வாங்கினால் அது ரிப்பேர் ஆகும் பட்சத்தில் கம்பேனியின் சர்வீஸ் சென்டரில் கொடுத்து காரை ரிப்பேர் செய்வோம். ஆனால் கார் ரிப்பேர் ஆனவுடன் அதன் செலவுகளை குறைக்க நாம் முன்னரே காரை இன்சூரன்ஸ் செய்திருந்தால் எதிர்பாராமல் நடந்த கார் ரிப்பேருக்கான பணத்தை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் சர்வீஸ் சென்டருக்கு வழங்கிவிடும். ஆனால் என்றாவது நீங்கள் காருக்கான மொத்த விலையில் இரண்டு மடங்கைக் காரை சரி செய்வதற்கான விலையாக கேள்விபட்டுள்ளீர்களா?

பகல் கொள்ளையா இருக்கே . . . ரூ11 லட்சம் காரை ரிப்பேர் செய்ய ரூ22 லட்சம் பில் போட்ட ஷோரூம் . . . நடந்தது என்ன . . .

இப்படியான ஒரு சம்பவம் சமீபத்தில் பெங்களூருவில் நடந்துள்ளது. பெங்களூருவைச் சேர்ந்தவர் அனிரூத் கணேஷ், இவர் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் போலோ காரை பயன்படுத்தி வந்துள்ளார். சமீபத்தில் பெங்களூருவில் பெய்த மழையால் பல இடங்களில் வெள்ளம் புகுந்தது. மக்கள் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதில் அனிரூத்தின் காரும் பலத்த சேதமடைந்தது. கார் முழுவதும் தண்ணீருக்குள் மூழ்கியது.

பகல் கொள்ளையா இருக்கே . . . ரூ11 லட்சம் காரை ரிப்பேர் செய்ய ரூ22 லட்சம் பில் போட்ட ஷோரூம் . . . நடந்தது என்ன . . .

இதையடுத்து அனிரூத் இந்த காரை அருகில் உள்ள பெங்களூரு ஒயிட் ஃபீல்டு பகுதியில் செயல்பட்டு வரும் ஆப்பிள் ஆட்டோ நிறுவனத்திற்கு எடுத்துச் சென்றார். அங்கு தனது காரை ஒப்படைத்துவிட்டு அதற்கான ரிப்பேர் குறித்து விபரம் தெரிவிக்கும்படி சொல்லிவிட்டுச் சென்றுள்ளார். கார் 20 நாட்கள் சர்வீஸ் சென்டரில் இருந்துள்ளது. சர்வீஸ் சென்டர் ஊழியர்கள் காரை முழுவதுமாக செக் செய்துவிட்டு அனிரூத்திற்கு காருக்கான ரிப்பேர் செலவிற்கான எஸ்டிமேஷன் பில்லை அனுப்பியுள்ளனர்.

பகல் கொள்ளையா இருக்கே . . . ரூ11 லட்சம் காரை ரிப்பேர் செய்ய ரூ22 லட்சம் பில் போட்ட ஷோரூம் . . . நடந்தது என்ன . . .

இப்படியாக அனுப்பப்படும் எஸ்டிமேசன் பில் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டு காருக்காக ரிப்பேர் செய்யும் பணம் கிளைம் செய்யப்படும். ஆப்பிள் ஆட்டோ நிறுவனம் இவருக்கு வழங்கிய பில்லை பார்த்து அதிர்ச்சியடைந்துவிட்டார். வெள்ளத்தில் மூழ்கிய காரை ரிப்பேர் செய்ய ரூ22 லட்சம் செலவாகும் என அனிரூத்திற்கு பில் அனுப்பப்பட்டுள்ளது. இவர் அந்த காரையே மொத்தம் ரூ11 லட்சம் கொடுத்துத் தான் வாங்கியுள்ளார்.

பகல் கொள்ளையா இருக்கே . . . ரூ11 லட்சம் காரை ரிப்பேர் செய்ய ரூ22 லட்சம் பில் போட்ட ஷோரூம் . . . நடந்தது என்ன . . .

ரூ11 லட்சம் காருக்கு ரூ22 லட்சம் ரிப்பேர் செலவுக்கான பில் வந்ததும். இவர் அதிர்ச்சியடைந்து இவர் இன்சூரன்ஸ் எடுத்திருந்த நிறுவனத்தைத் தொடர்பு கொண்டார். பொதுவாக காருக்கு இன்சூரன்ஸ் போடும் போது அதற்கான தொகை குறிப்பிடப்படும். அதன்படி இவர் காருக்கு தற்போது ரூ6 லட்சம் மட்டுமே இன்சூரன்ஸ் தொகை இருந்தது. இன்சூரன்ஸ் நிறுவனம் இன்சூர் செய்த தொகையை விட அதற்கான ரிப்பேர் செலவு அதிகமாக வந்தால் கார் ஒட்டு மொத்தமாக வேஸ்ட் ஆகிவிட்டது எனக் கூறி காரை ரிப்பேர் செய்யாமல் மொத்த இன்சூரன்ஸ் பணத்தையும் காரின் உரிமையாளருக்கு அனுப்புவார்கள்.

பகல் கொள்ளையா இருக்கே . . . ரூ11 லட்சம் காரை ரிப்பேர் செய்ய ரூ22 லட்சம் பில் போட்ட ஷோரூம் . . . நடந்தது என்ன . . .

அதன்படி அந்த இன்சூரன்ஸ் நிறுவனமும் காரை ஒட்டு மொத்தமாக ஸ்கிராப் செய்யச் சொல்லிவிட்டது. இதையடுத்து இவர் காரை சர்வீஸிற்கு விட்ட சர்வீஸ் சென்டரை தொடர்பு கொண்டு நடந்ததை கூறினார். அதன் பின் அவரது காருக்காக இதுவரை செய்த சர்வீஸ் மற்றும் கார் இத்தனை நாள் பார்க்கிங்கில் நிறுத்தியதற்கான பில்லை அனுப்பியுள்ளனர். அதற்காக அவர்கள் ரூ 44,838.93 பில் அனுப்பியுள்ளனர்.

பகல் கொள்ளையா இருக்கே . . . ரூ11 லட்சம் காரை ரிப்பேர் செய்ய ரூ22 லட்சம் பில் போட்ட ஷோரூம் . . . நடந்தது என்ன . . .

அதாவது அவர் காரை சரி செய்ய ரூ22 லட்சம் செலவானது எனச் சோதித்து எஸ்டிமேட் செய்ததற்கும், அதற்காக கார் ஷோரூமில் உள்ள பார்க்கிங்கில் இருந்ததற்கும் இந்த பில்லை அனுப்பியுள்ளனர். இந்த பில்லை இவர் செட்டில் செய்தால் தான், இவர் கார் ரிப்பேர் குறித்த ஆவணங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்குச் செல்லும், தற்போது அவர் காருக்கு ரூ6 லட்சம் மட்டுமே இன்சூரன்ஸ் டிக்ளர்டு வேல்யூ இருக்கிறது. அந்த ரூ6 லட்சத்தை வாங்க இவர் சுமார் ரூ45 ஆயிரம் செலவு செய்ய வேண்டும்.

பகல் கொள்ளையா இருக்கே . . . ரூ11 லட்சம் காரை ரிப்பேர் செய்ய ரூ22 லட்சம் பில் போட்ட ஷோரூம் . . . நடந்தது என்ன . . .

இந்த பில்லை பார்த்து மீண்டும் ஷாக் ஆன அனிரூத் மீண்டும் ஃபோக்ஸ்வேகன் தளத்தில் இது குறித்துத் தேடியுள்ளார். அப்பொழுது ஃபோக்ஸ்வேகன் இப்படியாக முழுவதுமாக சேதமடைந்த வாகனத்திற்கு எஸ்டிமேட் செய்ய ரூ5 ஆயிரத்திற்கு மேல் பில் போடக்கூடாது என விதிமுறையை வைத்துள்ளது. இதை வைத்தும், இதையடுத்து அவர் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்திற்கு இது குறித்து இமெயில் அனுப்பியுள்ளார். அதற்கான பதிலும் வரவில்லை.

பகல் கொள்ளையா இருக்கே . . . ரூ11 லட்சம் காரை ரிப்பேர் செய்ய ரூ22 லட்சம் பில் போட்ட ஷோரூம் . . . நடந்தது என்ன . . .

இது குறித்து அவர் ஆப்பிள் ஆட்டோ நிறுவனத்திடம் பேசியுள்ளார். அப்பொழுது இந்த பணத்தைக் கட்டினால் தான் இந்த காருக்கான இன்சூரன்ஸ் பணத்தை வாங்க முடியும் எனக் கூறியுள்ளனர். மேலும் தங்கள் ஷோரூமிலேயே புதிதாக கார் வாங்கினால் இந்த பணத்தை முற்றிலுமாக தள்ளுபடி செய்து தருவதாகக் கூறியுள்ளனர். இதையடுத்து இவர் இந்த தகவல்களுடன் லிங்க்டு இன்னில் பதிவு ஒன்றைப் போட்டுள்ளார். அந்த பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது. பலர் இப்படிப்பட்ட பில்லை முறையைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Bengaluru Volkswagen dealer estimates rupees 22 lakhs for rupees 11 lakh worth flooded polo car
Story first published: Monday, September 26, 2022, 13:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X