நம்ம சென்னை கூட கிடையாது... எதிர்காலத்தில் இவி துறையில் அதிக வேலை வாய்ப்புகளை கொடுக்கும் இந்திய நகரம் இதுதான்!

2030 காலக்கட்டத்தில் பெங்களூர் தான் இந்தியாவின் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மையமாகவும், எலக்ட்ரிக் வாகனங்கள் சார்ந்த வேலை வாய்ப்புகளை அதிகம் வழங்கக்கூடிய நகரமாகவும் விளங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

எலக்ட்ரிக் வாகனங்கள் பல்வேறு வெளிநாடுகளில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துவிட்டன. இந்தியா இன்னமும் எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதில் ஆரம்ப கட்ட நிலையிலேயே உள்ளது. இருப்பினும், எதிர்காலத்தில் நமது இந்தியா தான் எலக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி மையமாக விளங்கும் என உலகின் பல ஆட்டோமொபைல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

bengaluru will lead ev jobs in future

எந்த அளவிற்கு என்றால், 50 இலட்ச புதிய நேரடி வேலை வாய்ப்புகள் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களை சார்ந்து உருவாகும் என பெங்களூரை சேர்ந்த கேரியர்நெட் என்ற டேலண்ட் சொல்யூஷன்களை வழங்கும் நிறுவனம் ஒன்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஏற்கனவே கடந்த 3 ஆண்டுகளில் எலக்ட்ரிக் வாகன விற்பனை ஆனது சுமார் 2000% அதிகரித்துள்ளது.

இதற்கேற்ப, எலக்ட்ரிக் வாகனங்களினால் உருவாகும் வேலை வாய்ப்புகளும் 2020இல் இருந்து 2022க்கு உள்ளாக 110% அதிகரித்துள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்தி மற்றும் அவற்றை பழுது பார்ப்பது என கடந்த 2022ஆம் ஆண்டில் மட்டும் 4 லட்சம் பேர் வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளதாக கூறும் கேரியர்நெட் நிறுவனம் இதில் 28% வேலை வாய்ப்புகள் இந்தியாவின் மென்பொருள் தலைநகரமான பெங்களூரில் உருவாகியுள்ளது என தெரிவித்துள்ளது.

பெங்களூரில் பொருட்களை உற்பத்தி செய்வது மட்டுமின்றி, கண்டுப்பிடிப்பதும் வளர்ச்சி கண்டு வருவதாக கூறும் கேரியர்நெட்டின் முதன்மை வணிக அதிகாரி நீலாப் சுக்லா இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், "பெங்களூரு, எலக்ட்ரிக் வாகன துறைக்கான வலுவான மையமாக வளர்ந்து வருகிறது. அங்கு பாரம்பரியமான வாகன உற்பத்தி சந்தை இல்லை. ஏனெனில் இந்த நகரத்தில் பெரும்பாலும் கண்டுப்பிடிப்புகளே மேற்கொள்ளப்படுகின்றன" என்றார்.

பெங்களூரில் கடந்த 2022-23 நிதியாண்டில் அதிக தேவை உள்ள வேலையாக எலக்ட்ரிக் வாகனங்களுக்கான ஒருக்கிணைந்த பேட்டரியை உருவாக்கும் பணி இருந்தது. அதேபோன்று எலக்ட்ரிக் வாகன உற்பத்திக்கு உதவும் வேலைகளிலும் அதிக பேர் இறங்கியுள்ளனர். ஒட்டு மொத்தமாக, ஆட்கள் தேவையில் உள்ள முக்கிய வேலை வாய்ப்புகள் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி & கண்டுப்பிடிப்பு ஆகியவற்றை சுற்றியே உள்ளன.

அட்வான்ஸ்டு கருவிகளையும், தொழிற்நுட்பங்களையும் கண்டுப்பிடிப்பது என்னவோ பெரிய நிறுவனங்களாக இருந்தாலும், அவை உருவாகுவது தனி ஒரு மனிதனின் ஐடியாவில் இருந்தே ஆகும். அத்தகைய மனிதர்களை கவர்ந்திழுக்கக்கூடிய நகரமாக பெங்களூர் விளங்குகிறது. மேலும், இந்தியாவின் இவி மையமாக பெங்களூர் மாறுவதை வைத்தே கிரிஸும், எண்ணெய்யும் மிகுந்த வழக்கமான வாகனங்களில் இருந்து ஆட்டோமொபைல் துறை மாற்றம் கண்டு வருவதை அறியலாம்.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: எலக்ட்ரிக் வாகனங்களினால் கடந்த நூறாண்டுகளுக்கும் மேலாக இருக்கும் எரிபொருள் என்ஜின் வாகனங்கள் மறைய போவது மட்டுமின்றி, அவற்றை சுற்றி நடைபெற்று வரும் வேலைகளும் மறைந்து போகும். உதாரணத்திற்கு, கார் என்ஜின் எக்ஸ்பர்ட். இந்த வகையில் வேலையை இழப்பவர்கள் தங்களை எலக்ட்ரிக் வாகனங்களுக்கு ஏற்ப அப்டேட் செய்து கொள்வதுதான் ஒரே வழி. அல்லது வேறு துறைக்கு செல்ல வேண்டியதுதான்.

More from DriveSpark

Article Published On: Thursday, June 8, 2023, 21:04 [IST]
English summary
Bengaluru will lead electric vehicles related jobs in future says report
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+