மொபைல் போன் தவறி விழுந்ததற்காக இப்படியா செய்வது? கொஞ்ச நேரத்தில் ஒட்டு மொத்த பேரையும் ஷாக் ஆக்கிய பெண்!!

பெங்களூர் (Bengaluru)-இல் செல்போன் தவறி விழுந்ததால், மின்சாரம் பாயும் மெட்ரோ இரயில் தண்டவாளத்தில் பெண் ஒருவர் குதித்துள்ளார். யார் இந்த பெண்? எங்கு, எப்போது இந்த சம்பவம் நடந்தது? என்பது குறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம், வாங்க.

மொபைல் போன், இன்றைய காலத்தில் உயிருக்கு இணையான ஒன்றாக பார்க்கப்படுகிறது. மொபைல் போன் இல்லை என்றால் வாழவே முடியாது என யோசிக்கும் அளவிற்கு தொழிற்நுட்ப வளர்ச்சி நம்மை கொண்டு வந்துள்ளது. குறிப்பாக, இளம் தலைமுறையினர் மத்தியில் மொபைல் போன் ஈர்ப்பு மிகவும் வேறூன்றி இருப்பதை பற்றி நான் கூற வேண்டியது இல்லை.

woman jumps on metro track

அந்த வரிசையில், பெங்களூரில் பெண் ஒருவர் மொபைல் போனுக்காக மெட்ரோ இரயில் நிலையத்தில், சுமார் 750 கிலோவோல்ட் மின்சாரம் பாயும் மெட்ரோ இரயில் தண்டவாளத்தில் குதித்துள்ளார். இந்த சம்பவம், புத்தாண்டின் முதல் நாளான ஜனவரி 1ஆம் தேதி, திங்கட் கிழமை மாலை 6.45 மணியளவில் இந்திரா நகர் மெட்ரோ இரயில் நிலையத்தில் நடந்துள்ளது.

அந்த சமயத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு கொண்டிருந்த பணியாளர் ஒருவர் தண்டவாளத்தில் பெண் ஒருவர் இருப்பதை கண்டதை அடுத்து, உடனடியாக கண்ட்ரோலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நல்ல வேளையாக, அந்த பெண்ணுக்கு எதுவும் ஆகவில்லை.

woman jumps on metro track

ஆனால், இந்த சம்பவத்தால் பரபரப்பான மாலை வேளையில் பெங்களூர் மெட்ரோ பர்பிள் லைனில் கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் மெட்ரோ இரயில் சேவை தடைப்பட்டு உள்ளது. மெட்ரோ இரயில்களின் சிறப்பே அவற்றின் நேரம் தவறாத தன்மை ஆகும். இரயில் நிலையத்தில் குறிப்பிடப்படும் நேரத்தில் சரியாக மெட்ரோ இரயில் வந்து நிற்கும்.

அதுவும், பெங்களூரில் மெட்ரோ இரயிலின் தேவை அதிகமாக உள்ளது. அரசு பேருந்துகளை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கைக்கு இணையாக மெட்ரோ இரயில்களை பலர் பயன்படுத்துகின்றனர். அப்படிப்பட்ட நகரத்தில் 15 நிமிடங்கள் சேவை நிறுத்தம் என்பது அசவுகரியமாக அமைந்தது மட்டுமின்றி, பலரது பயணங்களை தாமதப்படுத்தியது.

woman jumps on metro track

வழக்கமான இரயில் தண்டவாளங்களை போன்றுதான் மெட்ரோ இரயில் தண்டவாளங்களும். ஆனால், இவற்றில் சற்று அதிக மின்னழுத்தத்தில் மின்சாரம் பாய்கிறது. இருப்பினும், தண்டவாளங்கள் நன்கு காப்பீடப்பட்டு இருக்கும் என்பதால் பெரியதாக பிரச்சனை இல்லை என்றாலும், மின்சாரம் தண்டவாளத்தை கடப்பது ஆபத்தில் முடிவதற்கு வாய்ப்புள்ளதால், இத்தகைய செயல்கள் முற்றிலுமாக தடுக்கப்படுகிறது. மீறுவோர் மீது அபராதம் விதிக்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தண்டவாளத்தை கடக்கும் பழக்கம் நம் மக்களிடத்தில் அதிகமாக இருப்பது ஓர் கசப்பான உண்மை. இத்தகைய செயல்கள் சமீப காலங்களில் வெகுவாக குறைந்து வரும் நிலையில், மொபைல் போனுக்காக ஆபத்தை உணராமல் மெட்ரோ இரயில் டிராக்கில் இந்த பெண் இறங்கியது கண்டிக்கத்தக்கது. இவருக்கு எவ்வளவு தொகை அபராதமாக விதிக்கப்பட்டது என்பது தெரியவில்லை.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 2, 2024, 18:57 [IST]
English summary
Bengaluru woman jumps on metro track for her mobile phone check all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X