ஓடும் ராபிடோ பைக்கில் இருந்து குதித்து, உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடிய பெண்... அதிர்ச்சிகர சம்பவம்!!
ராபிடோ பைக்கில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவர், தீடீரென பைக்கில் இருந்து சாலையில் குதித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யார் அந்த பெண்? எதற்காக இவ்வாறு செய்தார்? என்பது போன்ற கேள்விகளுக்கான பதில்களாக இந்த சம்பவத்தை விரிவாக இந்த செய்தியில் பார்க்கலாம், வாங்க.
ராபிடோ, ஓலா, உபேர் போன்ற இணையத்தள பிளாட்ஃபாரங்களை பயன்படுத்தி தங்களது அன்றாட பயணங்களை மேற்கொள்வோரின் எண்ணிக்கை சமீப காலங்களில் வெகுவாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, பிறந்து, வளர்ந்த ஊரை விட்டு வெளியூரில் வேலை செய்பவர்கள் மற்றும் வேலை தேடுப்பவர்களின் பிரதான போக்குவரத்து மேற்கூறப்பட்ட டாக்ஸி மொபைல் செயலிகளை சார்ந்தே உள்ளது.

அதாவது, தங்களது சொந்த வாகனங்களை வேலை செய்யும் நகரத்திற்கு கொண்டுவர இயலாதோர் இத்தகைய மொபைல் செயலிகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, ராபிடோ இளம் தலைமுறையினர் மத்தியில் பிரபலமானதாக விளங்குகிறது. ஏனெனில் ராபிடோவில் ஆட்டோ மட்டுமின்றி, பைக் டாக்ஸி சேவையும் கிடைக்கிறது. இதன் மூலமாக தினசரி போக்குவரத்து செலவை அதிகம் மிச்சப்படுத்தலாம் மற்றும் கூட்ட நெரிசல் மிகுந்த பேருந்து & இரயில் பயணங்களை தவிர்க்கலாம்.
அதுமட்டுமின்றி, ஆட்டோகளை காட்டிலும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த மாநகரங்களில் பயணிப்பதற்கு 2-வீலர்களே சிறந்தவை. இவ்வாறு ராபிடோ பைக் டாக்ஸியின் நன்மைகள் ஏகப்பட்டவை இருக்கும் அதேநேரத்தில் இந்த டாக்ஸி சேவையில் சில பல குறைப்பாடுகளும் உள்ளன. அதாவது, ராபிடோ 2-வீலர் ரைடர்களில் சிலர் வாடிக்கையாளர்களிடம் தவறாக நடந்து கொள்வதும், சில நேரங்களில் வாடிக்கையாளர்கள் ரைடரிடம் தவறாக நடந்து கொள்வதும் அவ்வப்போது செய்திகள் வருகிறது.

அவ்வாறான ஒரு சம்பவமே சமீபத்தில் பெங்களூருவில் பெண் வாடிக்கையாளர் ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் 30 வயதுடைய பெண் ஒருவர் பெங்களூரில், இந்திரா நகரில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக ராபிடோவை புக் செய்துள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் தீபக் ராவ் என்பவர் ராபிடோ ரைடர் என கூறி கொண்டு அந்த பெண்ணை அணுகியுள்ளார். வந்த உடனே, ஒடிபி செக் செய்ய வேண்டுமென்று, அந்த பெண்ணிடம் இருந்து மொபைல் போனை பறித்துள்ளார்.
இதில் சற்று சந்தேகமடைந்த அந்த பெண் பைக்கின் பதிவெண்ணை பார்த்துள்ளார். அதில் இருந்த பதிவெண்ணும், ராபிடோ மொபைல் செயலியில் குறிப்பிடப்பட்டு இருந்த பதிவெண்ணும் வெவ்வேறாக இருந்துள்ளது. இதில் மேலும் சந்தேகமடைந்த அந்த பெண் இதுகுறித்து தீபக் ராவ்விடம் வினாவிய போது அவர் ஏதேதோ கூறி சமாளித்துள்ளார். தீபக் ராவ் கூறியதை சிறிது நம்பியதாலும், மணி இரவு 11.30-ஐ தாண்டி சென்று கொண்டிருந்ததாலும் வேறு வழியின்றி பைக்கில் ஏறி அமர்ந்துள்ளார்.
#WATCH| Bengaluru, Karnataka: Woman jumps off a moving motorbike after the rapido driver allegedly tried to grope her & snatched her phone
— ANI (@ANI) April 26, 2023
On 21st April, woman booked a bike to Indiranagar, driver allegedly took her phone on pretext of checking OTP & started driving towards… pic.twitter.com/bPvdoILMQ2
பயணம் துவங்கிய சில நிமிடங்களிலேயே தான் செல்ல வேண்டிய இந்திரா நகர் அல்லாமல் பைக் வேறொரு பகுதியில் சென்று கொண்டிருப்பதை அறிந்த அந்த பெண் உடனே தீபக் ராவ்விடம் கேட்ட போது, அவரிடம் எந்த பதிலும் இல்லை. இதனால், ஏதோ தவறு நடக்கிறது என்பதை உணர்ந்த அந்த பெண் மொபைல் போனை அந்த நபரிடம் பெற முயற்சித்துள்ளார். ஆனால் தீபக் ராவ் போனை கொடுக்காமல், பைக்கின் வேகத்தை அதிகரித்துள்ளார்.
இதனையடுத்து, அந்த பெண் தைரியத்தை வரவழைத்து கொண்டு, ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் வேகமாக இயங்கி கொண்டிருந்த அந்த பைக்கில் இருந்து குதித்துள்ளார். இந்த சம்பவம் சாலைக்கு அருகே இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. மொபைல் போனை பறித்தது மட்டுமின்றி, தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததாக அந்த பெண் போலீஸில் புகார் அளித்ததை தொடர்ந்து, தீபக் ராவ் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இரவு நேர பயணங்கள் எப்போதும் ஆபத்தனாது என்பதற்கு மற்றொரு சாட்சி இந்த சம்பவம் ஆகும். இதனாலேயே பைக் டாக்ஸி சேவையை தடை செய்வதற்கு பல்வேறு மாநிலங்களில் அரசாங்கங்கள் முயற்சித்து வருகின்றன. இதில் கொடுமை என்னவென்றால், இந்த சம்பவம் குறித்து எந்தவொரு அறிக்கையையும் ராபிடோ இதுவரையில் வெளியிடவில்லை. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணையும் ராபிடோ தொடர்பு கொள்ளவில்லை என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








