கோயில் வாசல் ஓரமா பூஜை போடப்பட்ட காரின் உண்மையான விலை இத்தன கோடியா! வாயை பிளந்து பார்த்த பொதுமக்கள்!
இந்தியாவில் புதிதாக கார் மற்றும் பைக் உள்ளிட்ட வாகனங்களை வாங்குபவர்கள் ஷோரூமில் இருந்து நேராக செல்லும் இடம் நிச்சயம் கோயிலாகதான் இருக்கும். கோயிலில் பூஜை முடிந்த பிறகுதான், வீட்டிற்கோ அல்லது மற்ற இடங்களுக்கோ செல்வார்கள். அப்போதுதான் கடவுளின் ஆசிர்வாதம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
எனவே நல்ல நாட்களில் கோயில் வாசல்களில் வாகனங்களுக்கு பூஜை நடைபெறுவதை நாம் அடிக்கடி பார்க்க முடியும். ஆனால் மாருதி சுஸுகி போன்ற நிறுவனங்களின் கார்களும், ஹீரோ போன்ற நிறுவனங்களின் பைக்குகளும்தான் நம் கண்களில் அதிகமாக தென்படும். ஆனால் அரிதான கார் ஒன்றுக்கு கோயிலில் பூஜை செய்யும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வரும் அந்த வீடியோவில், பென்ட்லீ பென்டைகா (Bentley Bentayga) காருக்கு பூஜை நடைபெறுவதை நம்மால் பார்க்க முடிகிறது. அரிதான இந்த சம்பவம் பெங்களூர் நகரில் நடைபெற்றுள்ளது. பென்ட்லீ பென்டைகா மிகவும் விலை உயர்ந்த கார் என்பதால், இந்த நிகழ்வை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
பென்ட்லீ பென்டைகா, சொகுசு எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது. ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் (Rolls Royce Cullinan), மெர்சிடிஸ் மேபெக் ஜிஎல்எஸ் 600 (Mercedes Maybach GLS 600) உள்ளிட்ட கார்களுடன், பென்ட்லீ பென்டைகா போட்டியிட்டு வருகிறது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் பென்ட்லீ பென்டைகா காரின் ஆரம்ப விலையே 5 கோடி ரூபாயாக உள்ளது.
அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 6.75 கோடி ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். ஆனால் கோயிலில் பூஜை செய்யப்பட்டது பென்ட்லீ பென்டைகா காரின் எந்த வேரியண்ட்? என்பது உறுதியாக தெரியவில்லை. எனினும் இந்த காரில் பொருத்தப்பட்டிருப்பது, 4.0 லிட்டர் வி8 இன்ஜின் என தெரிகிறது.
அதிகபட்சமாக 542 பிஹெச்பி பவர் மற்றும் 770 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காருக்கே போட்டி என்பதால், இது எந்த அளவிற்கு சொகுசான பயணத்தை வழங்கும் என்பது நாங்கள் உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவில் கோயில்களில் மிகவும் விலை உயர்ந்த காருக்கு பூஜை நடைபெற்றிருப்பது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பாக லம்போர்கினி ஹூராகேன் பெர்ஃபார்மனேட் (Lamborghini Huracan Performante) காருக்கு கோயிலில் பூஜை செய்யப்பட்டுள்ளது. இதுவும் கூட பெங்களூர் நகரில்தான் நடைபெற்றது.
இந்தியாவில் மிகவும் விலை உயர்ந்த மற்றும் அரிதான கார்கள் அதிகம் உலா வரும் பெரு நகரங்களில் ஒன்றாக பெங்களூர் உள்ளது. பெங்களூர் நகரில் தண்ணீருக்கு வேண்டுமானால் பஞ்சம் இருக்கலாம். ஆனால் விலை உயர்ந்த கார்களுக்கு சற்றும் பஞ்சமில்லை என்பது இந்த சம்பவத்தின் மூலம் நிரூபணமாகியுள்ளது.


Click it and Unblock the Notifications








